Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

25 மார்ச் 2011

நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; விக்கிலீக்ஸ் இணையதளம்


தேசிய அரசியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா கவலைப்படுவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், "நரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி" என 2006ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதரக அதிகாரி மைக்கேல் எஸ். ஓவன், தமது-நாட்டுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில், காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த நரேந்திர மோடி; இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க-வேண்டும் என கூறினார் .
விக்கிலீக்ஸ் இணையதள தகவல் குறித்து கேட்டபோது, மும்பையில் அமெரிக்க-தூதர் ஓவனை சந்தித்தேன்.அப்போது குஜராத் மாநிலத்தை பற்றி இருவரும் விவாதித்தோம் .
அப்போது-அவரிடம் "எங்களுக்கு யோசனை சொல்லாதிர்கள் . நீங்கள் எப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களை-செய்கிறீர்கள் என்பது தெரியும்" மனித உரிமை குறித்து அமெரிக்கா இந்தியாவுக்கு உபதேசம் செய்ய கூடாது என தெரிவித்தேன் . அந்த பேச்சு விவரம் மாற்றம் செய்யபடாமல் அப்படியே அனுப்பப்பட்டுள்ளது.
நான் ஊழல்-செய்யாதவன் என்பது இப்போதும் அமெரிக்காவுக்கு தெரியும் .விக்கிலீக்ஸ் இணைய தகவல்கள் இந்திய அரசு மற்றும் குஜராத் மாநில வளர்ச்சி ஆகிய இரண்டு முகங்களை காண்பிப்பதாக அமைந்துள்ளது" என மோடி மேலும் தெரிவித்தார்.
adirai hindus talk; நரேந்திர மோடி போன்ற மிகசிறந்த ஒரு நிர்வாகி இந்தியாவை ஆழ்வதற்கு அமெரிக்கா என்றும் விரும்பியது இல்லை , அமெரிக்காவின் இந்த விருப்பத்தை காங்கிரஸ் காலம் காலமாக நிறைவேற்றி வருகிறது, எனவே தான் காரணமே இல்லாமல் நம்ம நாட்டு பிரதமருக்கு நல்ல நிர்வாகி விருது , நல்ல பிரதமர் விருது என விருதுகளை வாரி வழங்கி வருகின்றனர், நரேந்திர மோடியை இந்திய பிரதமராக ஆக்குவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக