Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

19 பிப்ரவரி 2011

புதுப்பட்டினம் மதக்கலவரம் முழு விபரம்



நமது நிருபர்

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகில்  உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் பல காலமாக  இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர்.
சமீப காலமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.  கூடவே தவ்ஹீத் ஜமாத், மனித நீதிப் பாசறை ஆகிய  இஸ்லாமிய மதவெறி இயக்கங்களின் தாக்கம் ஊர்  இளைஞர்களிடையே அதிகரித்தது.  இதன் விளைவாக  ஊர் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து,  இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதி விரிவாக்கப் பட்டுள்ளது.
ஊர்  காவல்துறை  அங்குள்ள ஏழை இந்துக்களின் புகார்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டு,  முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போய் வருகின்றனர்.   இந்நிலையில்   பிப்ரவரி-8 அன்று  முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள் இந்து முன்னணிக் கொடிக் கம்பத்தை வெட்டினர்.  கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  பிப்ரவரி-13 அன்று  காவல் துறையால்  சமரச பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு விடுக்கப் பட்டது.  பேச்சு வார்த்தையிலும்  காவல் துறையினர் அப்பட்டமாக முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த  இந்து இயக்கத் தலைவர்கள் மீது  மசூதி வாசலில் அதிரடி தாக்குதல் நிகழ்ந்தது.   சிறிது நேரம் கழித்து இது இருதரப்பு மோதலாக வலுத்து,  இருதரப்பிலும்  மக்கள் காயமுற்றனர்.    மோதலில் அடிபட்ட வயதான் மூதாட்டி மருத்துவமனையில் உள்ளார்.   பாதிக்கப் பட்ட அவர் மீதும், இந்து இயக்கத்தினர் மீதும், அபாண்டமாக  காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
அரசு  இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு  பாரபட்சமில்லாமல் விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  புதுப்பட்டினம் கிராம இந்து மக்களின் கோரிக்கை.
விரிவான செய்தி கீழே.
படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெரியும்.

18 பிப்ரவரி 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை


தேதிமோதும் அணிகள்பிரிவுஇடம்நேரம்
பிப் 19வங்கதேசம் Vs இந்தியாபிமிர்பூர் (வங்கதேசம்)பகல் 2 மணி
பிப் 20கென்யா Vs நியூசிலாந்துசென்னைகாலை 9.30 மணி
பிப் 20இலங்கை Vs கனடாஹம்பன்டோட்டா (இலங்கை)பகல் 2.30 மணி
பிப் 21ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வேஅகமதாபாத்பகல் 2.30 மணி
பிப் 22இங்கிலாந்து Vs நெதர்லாந்துபிநாக்பூர்பகல் 2.30 மணி
பிப் 23கென்யா Vs பாகிஸ்தான்ஹம்பன்டோட்டாபகல் 2.30 மணி
பிப் 24தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
பிப் 25ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்துநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 25வங்கதேசம் Vs அயர்லாந்துபிமிர்பூர்பகல் 2 மணி
பிப் 26இலங்கை Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
பிப் 27இந்தியா Vs இங்கிலாந்துபிபெங்களூர்பிறபகல் 2.30 மணி
பிப் 28கனடா Vs ஜிம்பாப்வேநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 28நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 1இலங்கை Vs கென்யாகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 2இங்கிலாந்து Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 3நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிமொகாலிபகல் 2.30 மணி
மார்ச் 3கனடா Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 4நியூசிலாந்து Vs ஜிம்பாப்வேஅகமதாபாத்காலை 9.30 மணி
மார்ச் 4வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ்பிமிர்பூர்பகல் 2 மணி
மார்ச் 5இலங்கை Vs ஆஸ்திரேலியாகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 6இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்காபிசென்னைகாலை 9.30 மணி
மார்ச் 6இந்தியா Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 7கனடா Vs கென்யாடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 8நியூசிலாந்து Vs பாகிஸ்தான்பல்லிகிலே (இலங்கை)பகல் 2.30 மணி
மார்ச் 9இந்தியா Vs நெதர்லாந்துபிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 10இலங்கை Vs ஜிம்பாப்வேபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 11அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிமொகாலிகாலை 9.30 மணி
மார்ச் 11வங்கதேசம் Vs இங்கிலாந்துபிசிட்டகாங்பகல் 2.30 மணி
மார்ச் 12இந்தியா Vs தென் ஆப்பிரிக்காபிநாக்பூர்பகல் 2.30 மணி
மார்ச் 13கனடா Vs நியூசிலாந்துமும்பைகாலை 9.30 மணி
மார்ச் 13ஆஸ்திரேலியா Vs கென்யாபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 14வங்கதேசம் Vs நெதர்லாந்துபிசிட்டகாங்காலை 9 மணி
மார்ச் 14பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வேபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 15அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிகொல்கத்தாபகல் 2.30 மணி
மார்ச் 16ஆஸ்திரேலியா Vs கனடாபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 17இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி
மார்ச் 18அயர்லாந்து Vs நெதர்லாந்துபிகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 18நியூசிலாந்து Vs இலங்கைமும்பைபகல் 2.30 மணி
மார்ச் 19வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்காபிமிர்பூர்காலை 9 மணி
மார்ச் 19ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 20கென்யா Vs ஜிம்பாப்வேகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 20இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி

10 பிப்ரவரி 2011

இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்


இன்றைய அரசியல் வாதிகளுக்கு இந்து மதம் சம்பந்தப்பட்ட எதுவும் ‘மதவெறி’ என்று தோற்றமளிக்கிறது. இந்துப் பண்டிகைகள் காட்டுமிராண்டித்தனமானது என்பது அவர்களது கருத்து. நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்தால் அது கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது. இப்படிப்பட்டச் செயல்களை ஏதோ சாதாரண அடிமட்ட தொண்டன் செய்தால் அதனை அறியாமை என்று ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனது தொண்டனின் நெற்றியிலிட்ட குங்குமத்தை ரத்தம் வழிகிறது என்று கேலி செய்வது ஒப்புக்கொள்ள முடியாதது. கண்டிக்க வேண்டியது. ஒரு முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தலைமை வகிக்கும் இடத்தில் இருப்பவர். இந்த மாநில மக்கள் அனைவரும் அவர் எந்த மதம், ஜாதி அல்லது பிரிவு மற்றும் அனைத்து மொழி பேசுவோர்க்கும் தலைமையானவர், பொதுவானவர். அவருக்கு விருப்பு, வெறுப்பு இருப்பது நியாயமுமல்ல, நேர்மையுமல்ல. அப்படிப்பட்ட பதவியிலிருப்பவர் விநாயக சதுர்த்தியைக் கேலி செய்வதும், ரம்ஜான் நோன்பு முடிவில் கஞ்சி குடிப்பதற்குத் தானும் தலையில் குல்லாயோடு போய் அமர்ந்து கொண்டு இது ஆரோக்கியமானது என்று சொல்வதும், மக்களிடையே பிரிவையும் விரோதத்தையும் ஏற்படுத்தி இடையில் தன்னை மைனாரிட்டியின் காவலன் என்று காட்டிக் கொள்ளச் செய்யும் தந்திரமாகும்.

இந்த அரசியல் வாதிகள் தங்கள் வீச்சை அரசியலோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் இவர்களிடம் சிக்கிக்கொண்ட அதிகாரத்தின் விளைவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை எல்லாம் கோயில்களில் தர்மகர்த்தாவாகவும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமித்து விடுகிறார்கள். அப்படி கோயில் நிர்வாகத்துக்கு வந்த அரசியல் வாதிகள், வந்த இடத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு, தாங்கள் நியமிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டுமல்லவா? அவர்கள் நியமிக்கப்பட்ட பதவிக்காக அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறதே, அதற்காகவாவது அவர்கள் மக்களுக்கும் தங்கள் மனச்சாட்சிக்கும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அரசியல் வாதிகள் புனிதத் தலங்களில் நியமிக்கப்படுவதன் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
tirupati_festivalமுதலில் “திருப்பதி கோவிலில் மெகா ஊழல்” என்ற தலைப்பிலான செய்தியைப் பார்க்கலாம். அந்த செய்தி கூறும் விஷயம் இதுதான்:– “திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அபிஷேக டிக்கெட்டுகளை விற்றதில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பது விஜிலென்ஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல்வேறு சேவாக்கள் நடத்தப்படுகின்றன. தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர ஏன் 29 வகையான அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான டிக்கெட்களை விற்பனை செய்ததில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்து இருப்பதும், இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களான காலே யாதையா, அல்லூரி சுப்பிரமணியம், மடலப்பு அஞ்சய்யா ஆகிய மூன்று பேரும், துணை செயல் அலுவலர்கள் 25 பேரும் ஈடுபட்டிருப்பது விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்ட அனைவருமே அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய விஜிலென்ஸ் துறை தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. சினிமா டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பது போல, குறைந்த எண்ணிக்கையிலான சேவா டிக்கெட்டுகளை மட்டும் பகிரங்கமாக விற்றுவிட்டு, மீதி டிக்கெட்டுகளை லட்சக்கணக்கில் கொள்ளை லாபம் வைத்து ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேவா டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி சுந்தர்குமார் விசாரணை நடத்தி, 2009 மார்ச் மாதம் அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், அப்போதைய ஆந்திர அரசு அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆட்சி பீடத்தில் யார் இருந்தார்கள், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள். அவர்கள் ஏன் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் திருமலையை நோக்கி பாதயாத்திரை நடத்தினார். இதையடுத்து, இந்த ஊழல் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட ஏராளமான தங்க நகைகள் ஏற்கனவே திருடு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தரிசன டிக்கெட் விற்பனையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பது பக்தர்களை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது.”
tirupati_laddu_issueஇதுதான் இப்போதைய செய்தி. இந்த ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களது நேர்மை, உண்மை இவை குறித்தும் இப்போது விசாரிக்கப்பட வேண்டும். அரசியல் வாதிகள் என்பதால் இந்த ஊழலையும், மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலை மூடி மறைப்பது போல மறைப்பதோ, அல்லது சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட சாதியினர் என்பதால் குற்றச்சாட்டைச் சொல்லுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ சரியாக இருக்க முடியாது. ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். ஏனோ தானோ ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை மத நம்பிக்கை உள்ளவர்கள் அனுமதிக்க முடியாது. கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டுமென்று உறுதியாக இருக்க வேண்டும். நாம் சொல்லுவது போலி செக்யூலரிஸ்ட்டுகளின் காதில் விழுமா? செவிடன் காதில் ஊதிய சங்காக முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த செய்தி மிகவும் முக்கியமானது. சிறிது காலம் முந்திதான் எல்லா ஊடகங்களிலும் ஒரு இந்து சாமியார் குறித்த சர்ச்சை ஏற்பட்டு அதை அரசியல் வாதிகளும், அயல்நாட்டு ஏஜெண்டுகளான சில ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்களும், பகுத்தறிவு பாசறை தொலைக்காட்சிகளும் அல்லும் பகலும் திரும்பத் திரும்ப இந்தக் காட்சிகளைப் போட்டுக் காட்டி அசிங்கப்படுத்தின. இதன் மூலம் இந்து சாமியார்கள் அனைவரும் பெண்பித்து பிடித்தவர்கள், கயவர்கள், ஒழுங்கீனமானவர்கள் என்ற பிரமையை உண்டாக்க திட்டமிட்டு சதிசெய்தனர். ஆனால் அடிக்கடி கிறிஸ்தவ பாதிரிமார்களின் கேளிக்கைகளைப் பற்றியும், மோசமான நடத்தை பற்றியும் வரும் செய்திகள் ஏதோவொரு மூலையில் இடம்பெறுவதோடு அதன் முக்கியத்துவம் முடிந்து விடுகிறது. இப்போது வெளியாகியிருக்கும் ஒரு செய்தியை இப்போது பார்ப்போம்.
“திருவண்ணாமலை 18-8-2010:” “மாணவனிடம் சில்மிஷம் - பங்கு தந்தை கைது”. “ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம். சர்ச் சார்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார். ஸ்டீபன் உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன்ராஜ் வரமறுக்கவே அவனை அடித்துத் துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். மணிகண்டன் சேத்துப்பட்டு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து ஸ்டீபனை கைது செய்தனர்”
இதுதான் அந்தச் செய்தி.
இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா? இந்து சாமியாராக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா தொலைக்காட்சியிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். இவர் ‘மைனாரிடி’ அல்லவா? நடப்பது மைனாரிடி அரசு அல்லவா? அவர்களுக்கு எந்த கேடும் விளைந்து விடக் கூடாது என்று பாதுகாப்பு கொடுக்கும் அரசு அல்லவா? அப்படிப்பட்ட அரசு நியாயம் வழங்குமா? இனி நாம் நீதிகேட்டு இறைவனிடம்தான் போக வேண்டும்.
இந்த இந்து பூமியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்து தர்மம் காக்கப்பட வேண்டுமென்றால், போலிகள் விரட்டப்பட வேண்டும். விதேச முதலீட்டில் நடக்கும் அன்னிய தொலைக் காட்சிகளுக்கு இந்து தர்மம் பற்றி பாடம் சொல்லித்தர வேண்டும்.
காலம் மாறுமா? காத்திருப்போம்.

நமது கோவில்களில் நவீன மாற்றங்கள்


கோவில் என்பது இறைவன் உறையும் இடம். கோ என்றால் அரசன். இல் என்பது இருப்பிடம். ஆக, அரசர்கரசனான இறைவன் எழுந்தருளியுள்ள இடம் திருக்கோயில் என்று அழைக்கப்பெறுகிறது. இதனை ஆலயம், தேவாலயம், தேவஸ்தானம், தேவமந்திரம் என்கிற பெயர்களாலும் பரவலாக அழைக்கிறோம். ஆலயம் என்றால் ஆன்மா ஒடுங்கி நிற்கும் இடம் என்று பொருள் கொள்வர்.

பசுவின் உடலெங்கும் பரந்தோடும் குருதியானது முலை வழியே பாலாகச் சொரிதல் போல உலகெங்கும் பரவியிருக்கிற இறையருளானது திருக்கோயிலாகிய வழியினூடே சிறப்பாக வெளிவரும் என்பது ஆன்றோர் கருத்து. இதனால் ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பல ஊர்களை நோக்கின் அவ்வூருக்கே கோயில் தான் பெருமையையும் சிறப்பையும் கொடுக்கிறது. காஞ்சி, மதுரை, கும்பகோணம் என்றெல்லாம் சொல்லுகிற போது எப்போதுமே கோபுரங்களும் மணியோசையும் உத்ஸவங்களும் தான் ஞாபகத்திற்கு வரும்.
வேறு எத்தனை எத்தனை சிறப்பிருந்தாலும் அத்தனையையும் மிஞ்சிய சிறப்பாக கோயில்களே விளங்கக் காண்கிறோம். நமது தமிழகமாகட்டும் ஏன்? வட இலங்கையாகட்டும் அடையாளமே கோயில் கோபுரம் தான். தமிழகத்தின் அடையாளச் சின்னமாக ‘கோதை பிறந்த ஊர்.. கோவிந்தன் வாழும் ஊர்..’ என்று போற்றப்படும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் தானே நிமிர்ந்து நிற்கிறது.
sri_villiputhur_1860
எனவே, இத்தகு கோயில்கள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் இன்றைக்கெல்லாம் பார்க்குமிடம் எங்கும் ஓரே கோயில்களாக இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கோயில்களில் எல்லாம் ஒவ்வொரு பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்கள்.
சிவாலயங்கள் பலவும் நவக்கிரக ப்ரீதிக்கான ஸ்தலங்களாக மாறிப் போயிருக்கின்றன. சில இடங்களில் எல்லாம் மூலவராக இருக்கிற ஸ்வாமி, அம்பாளுக்கு கொடுக்கப்படுகிற முதன்மையைக் காட்டிலும் நவக்கிரஹ தேவர்களுக்கும் இத்தகு மூர்த்திகளுக்குமே அதிக முதன்மை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படியாக நமது கோயில் வழிபாடு மிகவும் சிக்கலான நிலையை அடைந்து வருகிறது. மகர விளக்கு தரிசனத்தின் போது சபரிமலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஜடாயு அவர்களின் கட்டுரையை பார்த்த போது இதனுடைய பாரியளவு தாக்கத்தை காண முடிந்தது.
கோயில்களின் வகைகள்
கோயில்களை முக்கியமாக மூன்று வகையாகப் பிரித்து நோக்குவர். கேவலாலயம், சங்கீர்ணாலயம், மிச்ராலயம் என்பன அவையாகும். கேவலாலயம் என்பது இறைவனுக்காக மட்டும் தனித்து அமைந்துள்ள கோயில்கள். இவ்வாறான கோயில்களை உத்தர பாரதத்தில் அதிகளவில் காணலாம். உதாரணமாக காசியை எடுத்துக் கொண்டால் அங்கேயுள்ள விஸ்வநாதராலயம் தனித்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயமாக அமைந்திருக்கின்றமையைக் காண்கிறோம்.
இறைவனும் இறைவியும் மட்டும் எழுந்தருளியிருக்கிற ஆலயம் மிஸ்ராலயம் ஆகும். இறைவன், இறைவி பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியிருக்கிற ஆலயம் சங்கீர்ணாலயம். தென்னிந்தியாவில் பொதுவாக இத்தகு ஆலயங்களை நாம் காண முடிகிறது. உதாரணமாக மதுரை மீனாட்சியம்பாள் ஆலயம் என்றால் மூல மூர்த்திகளாகிய மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தவிர பரிவார மூர்த்திகளாகிய பல்வேறு விநாயகர், முருகன், இறைவனின் பல்வேறு வடிவ மூர்த்திகள், நாயன்மார்கள் என்று பல மூர்த்திகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
கோயில் கட்டட அமைப்பில் நாகரம், வேசரம், திராவிடம் என்கிற மூன்று வகைகளை இனங்காணலாம். நாகரம் என்பது கீழிருந்து சற்சதுர அமைப்பிலேயே உயர்ந்து காணப்படுவது. இதனை வட இந்தியாவில் அதிகம் காணலாம். வேசரம் என்பது வட்ட வடிவானது. இன்றைக்கும் இலங்கை போன்றவற்றில் உள்ள பௌத்த விகாரைகளை இவ்வமைப்புடன் ஒப்பு நோக்கலாம்.
திராவிடம் என்பது நமது தென்னகத்தில் அமைந்துள்ள பொதுவான அனைத்துக் கோயில்களினதும் கட்டட வடிவமைப்பாகும். கருவறைக்கு (மூலாலயத்திற்கு) மேல் அமைந்திருப்பதை இலங்கையில் ஸ்தூபி என்றே வழங்குவர். இதனை பொதுவாக விமானம் என்று கூறுவர். விசேஷமாக அளந்து அமைக்கப்படுவது என்பது இதன் பொருள். தேர் முதலிய ஊர்திகளைப் போல அழகாக அமைக்கப்படுவதால் இதற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாம்.
எவ்வளவு பெரிய கோயிலாக இருப்பினும் சிறிய கோயிலாக இருப்பினும் எல்லா இடத்தும் கருவறை அமைப்பு பொதுவாக ஒரே நிலையிலேயே அமைந்திருக்கக் காண்கிறோம். கோயில்களை அவற்றின் கட்டட அமைப்பின் அடிப்படையில் அதிலும் முக்கியமாக விமானத்தின் அடிப்படையில் பலவாறாகப் பகுப்பர். திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் ஒன்றில்,
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழல் கோயில்
கருப்பறில் பொருப்பனைய கொகுடிக்கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழந்து
தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீருமன்றே
என்று கோயில்களின் வகைகளை வகுத்து தெளிவாகக் குறிப்பிடுவார். இப்பதிகத்தில் கரக்கோயில், ஞாழல் கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில். ஆலக்கோயில் என்பனவாய ஆறு வகைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன.
எனவே 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே பல்வேறு வகையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருந்த கோயில்கள் தமிழகத்தில் பரவியிருந்தன என்று கருதலாம். இன்றைக்கும் கஜப்ருஷ்ட (ஆனைவடிவில் அமைந்த) விமானத்தை கொண்ட கோயில்களை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணலாம்.
கருவறையில்  உறையும் கற்பகம்
இறைவனின் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருக்கிற இடம். மூலஸ்தானம் அல்லது கரு- அறை என்று சொல்லுவார்கள். கர்ப்பகிரஹம் என்கிற பெயராலும் அழைப்பர். இக் கருவறைக்கு முன்னே அடியவர்கள் நின்று வழிபடக் கூடிய மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை மகாமண்டபம் என்பர். இந்த மகாமண்டபமும் கருவறையும் முற்காலத்தில் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டிருந்திருக்கிறது. இன்றைக்கும் காஞ்சி கைலாஸநாதர் ஆலயத்தில் அவ்வாறிருக்கக் காணலாம். பிற்காலத்தில் இவ்விரண்டையும் இணைத்தனர். அதன் நடுப்பகுதியில் அமைந்த சிறிய மண்டபம் அர்த்தமண்டபம் என்று கூறப்படும்.
kanchikailasanatha
இம்மூன்று மண்டபங்களுமே கோயிலின் எழுச்சியின் முதற் கட்டம். பின்னர் படிப்படியாக விரிந்து பல்வேறு மண்டபங்கள் எழுந்திருக்கின்றன என்று கொள்வதற்கு இடமுண்டு. இம்மண்டபங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிப் பரிணாமத்தில் கருவறையைச் சுற்றியும் எழுச்சியுறும் போது பிரகாரங்கள் உருவெடுத்தன.
பொதுவாக கருவறை என்ற கர்ப்பகிருஹத்தின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும். வெளிச்சுவரில் பஞ்சகோஷ்டங்களையும் (மாடங்களையும்) பல இடங்களில் அமைத்திருப்பார்கள். இவற்றிலும் மூன்று மாடங்களே பழங்காலத்திலிருந்து இருந்து வருகிறது என்று நான் கருதுகிறேன். தெற்கு கோஷ்ட(மாடத்தில்) சிவபெருமானின் குரு வடிவமான தட்சணாமூர்த்தி, மேற்குக் கோஷ்டத்தில் மஹாவிஷ்ணு மூர்த்தி, வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா என்பதாகவே இவ்வமைப்பிருக்க வேண்டும்.
இவ்வாறான கோஷ்ட அமைப்பு பழங்காலத்தில் விஷ்ணுகோயில்களிலும் இருந்து வந்திருப்பதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சோழர்காலத்தில் சிவாலயங்களில் மேற்கு மாடத்தில் அமையப் பெற்றிருந்த விஷ்ணுமூர்த்தி எடுக்கப்பட்டு லிங்கோத்பவர் என்கிற சிவவடிவம் ஸ்தாபிக்கப்பட விஷ்ணுவாலயங்கள் பலவற்றிலும் சிவப்பிரதிஷ்டையே இல்லாமற் போய்விட்டது என்று சிறியேன் கருதுகிறேன். இது இந்து ஒற்றுமைக்கு பெரும் பாதகமான அம்சமாகும். இயலுமாகில் இது பற்றி அறிஞர்கள் சிந்தித்து பழைய நிலையில் மும்மூர்த்திகளும் கருவறையை சுற்றி அமைகிற வழக்கத்தை மீள உருவாக்கில் சிறப்பாகும்.
சிவாலயங்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சிவபெருமானின் கருவறைக்கு இடப்பக்கமாக அம்பாளுக்குரிய கருவறை தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இரண்டு கருவறைகளுக்கும் மகாமண்டபம் பொதுவாகவே இருக்கும். சில இடங்களில் மட்டும் மாறுபாடுகள் உண்டு. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக் கோலம் பூண்டிருப்பதால் சுவாமி கருவறைக்கு வலப்புறமாக அங்கயற்கண்ணியின் கருவறை அமைந்திருக்கிறது. காஞ்சியில் காமாட்சியம்பாள் ஆலயம் ஏகாம்பரேஸ்வரஸ்வாமி ஆலயத்திலிருந்து சற்று விலகி தனித்துவ அம்சங்களோடு சிறப்பாக அமைந்திருக்கிறது.
வைஷ்ணவ ஆலயங்களில் தாயார் சந்நதி பெருமாள் சந்நதிக்கு வடக்காக அமைந்திருப்பதே வழக்கம் எனிலும் சில இடங்களில் சில சிறப்புக்களை முன்னிட்டு சில மாற்றங்களையும் காணலாம். திருப்பதியில் வேங்கடவனுடைய பட்டத்தரசியாகிய அலமேல்மங்கை திருச்சானூரிலேயே தனிக்கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.
கருவறையை நம்முன்னோர்கள் பல்வேறு நுணுக்கங்களுடன் அமைத்தனர். அதிஷ்டானம் என்பது கருவறையின் அடிப்பகுதி. பாதம் என்பது கருவறை. மஞ்சம் என்பது தளவரிசை. இதை பிரஸ்தரம் என்றும் சொல்வர். அதன் மேல் இருப்பது கண்டம். ஐந்தாவது பண்டிகை. இதன் மேல் இருப்பது ஸ்தூபி. ஸ்தூபியில் கலசம் என்ற கருவறையின் திருமுடி- மகுடம் அமைந்திருக்கும். கோயில்களை மரம், செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் என்பவற்றைக் கொண்டு பழங்காலத்தில் ஆக்கினர்.
மண்டபங்கள் நிறை அழகுக் கோயில்
அப்பர் பெருமான் ‘திருக்கோயில் இல்லாதது திரு இல் (செல்வம்- சிறப்பு இல்லாத) ஊர்’ என்பார். இதனை அறிந்து தான் நம்மவர்கள் உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே தம்மால் இயன்ற அளவில் கோயில்களை எழுப்பி வழிபாடாற்றி வருகிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா. ஜேர்மன், கனடா, நியூசிலாந்து, மலேசியா. தாய்லாந்து, தென்னாபிரிக்கா, என்று எங்கு சென்றாலும் இந்தத்திருக்கோயில்களைக் காண்கிறோம்.
அந்த அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் கோயிலை எவ்வளவு தூரம் சிறப்பாக பெரிதாக அமைக்க இயலமோ? அத்தகு வண்ணம் அமைத்து வருகிறார்கள்.
lemont_rama_temple
பல்வேறு ஐரோப்பிய தேசங்களில் வெறிச்சோடிப்போய் கிடந்த கிறித்துவ தேவாலயங்கள் பல கூட நம் இந்து அன்பர்களின் வருகையால் சிவ- விஷ்ணு நாமம் ஒலிக்கும் திருக்கோயில்களாக மாறியிருக்கின்றன.
கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திவார கிரியை இடம்பெறும். இதனை இஷ்டக ந்யாசம் என்றும் கூறுவர். இதன் போது கிரியாபாவனையுடன் கோயிற் கட்டுமானம் ஆரம்பமாகும். இக் கோயில் கட்டுமானத்தை எப்படி எவ்வாறான செங்கல்லை முதலில் வைத்து ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு ஆகமக் குறிப்புகள் உள்ளன.
செங்கல்லும் மரமும் இணைத்தே முற்காலத்தில் கோயில்களை உருவாக்கினர். இன்றைக்கம் கேரளாவில் இவ்வாறான கோயில்களை காணலாம். தென்னிலங்கையில் உள்ள கதிர்காமமும், இமயமலைப்பகுதிக் கோயில்களும் கூட இவ்வாறானவையேயாகும். திருக்கோயில்களில் பல்வேறு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
இவற்றில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், துவஜாரோஹண (கொடியேற்ற) மண்டபம், சஹஸ்ரதம்ப (ஆயிரங்கால்) மண்டபம், சோடச ஸ்தம்ப (பதினாறு கால்) ஸ்தம்பமண்டபம், ஸ்நபன (திருமஞ்சன) மண்டபம், இரதாரோஹண (தேர்விழா) மண்டபம், வசந்தமண்டபம், புராணபடனமண்டபம், யாகமண்டபம், ஆகமமண்டபம், வாத்யமண்டபம், நிருத்ய மண்டபம் போன்றவை முக்கியமானவை. ஆலயத்திற்கு தக்க வகையில் வேறு வேறு சிறப்பிற்குரிய மண்டபங்களும் அமையப்பெறலாம்.
சிவாலயங்களில் முற்காலத்திலிருந்து விநாயகர் முதல் சண்டேஸ்வரர் ஈறாக உள்ள மூர்த்திகளுக்கு உரிய உரிய இடங்களில் சிற்றலாயங்கள் (சந்நதிகள்) அமைக்கப்படும். பிற்காலத்தில் நவக்கிரஹ சந்நதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாகிலும் ப்ரதான இறைவனின் சிறப்பிற்கு நவக்கிரஹம் முதலிய பரிவாரமூர்த்தி சந்நதிகளால் பங்கம் உண்டாகாமல் கவனித்துக் கொள்வதும் அவசியம்.
கோயில்களுக்கு அழகு சேர்ப்பதில் தூண்களின் பங்கு பெரியது. சிற்பிகளின் கலைநயம் பொலியும் இத்தூண்களில் அழகு மிக்க சிற்ப செதுக்கல் வேலைப்பாடுகள் அமைந்திருக்கும். தென் நாட்டில் - தமிழகத்தில் பாதபந்தம், குமுதபந்தம், பத்மபந்தம், ரத்னபந்தம், பட்டபந்தம், கம்பபந்தம் போன்ற அமைப்புகள் இவற்றில் இடம்பெற்றிருக்கும். தூணின் அடித்தளமும் மேற்தளமும் ஒரே வகையிலிருக்கும். அதாவது பொதுவில் சதுர- வட்ட வடிவில் இருக்கும். பெரிய தூணுடன் சிறிய தூண்கள் சிலவற்றையும் சேர்த்தும் அமைத்திருப்பர். தூண்களில் யாளிகளும்- குதிரைகளும்- சிங்கங்களும் திறம்பட அமைக்கப்பட்டிருக்கும்.
சிவாகமங்களின் விதிப்படி அமைக்கப்பெறும் கோயில்களில் ஈசானத்தில் திருமஞ்சன கிணறும், தென் கிழக்கில் பாகசாலை, பொக்கிஷசாலை என்பனவும், தெற்கில் திருக்குளமும், வடக்கில் பள்ளியறையும் ஈசானத்தில் யாகசாலையும் அமையப்பெறும். இவற்றில் கோயில்களுக்கு ஏற்ப மாற்றங்களும் ஏற்படுவதுண்டு.
அறப்பணி நிலையங்கள்
கோயில்கள் வெறுமனே தெய்வீக வழிபாட்டிற்கான இடங்களாக அமையாமல் கலை பண்பாட்டு காவலரண்களாகத் திகழ்ந்திருக்கின்றன. மருத்துவ நிலையங்களாகவும் கல்விக்கூடங்களாகவும்- அமைந்திருந்தன.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குருக்கள் மற்றும் வைத்தியர், ஜோதிஷர், பரிசாரகர், போன்றவர்களுக்கு இருப்பிடம் கொடுத்து வாழச் செய்திருக்கிறார்கள். கோயிலின் மேற்பாகத்தில் வைத்தியநிலையமும் தென் மேற்கில் கோசாலையும் வடக்கில் கல்விச்சாலையும் வடகிழக்கில் நெற்களஞ்சியமும்- வேதாத்யாயன பாடசாலையும் அமைக்க வேண்டும் என்றும் சில ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
mahalakshmi
சிற்ப – சித்திரக் களஞ்சியமாக கோயில்கள் திகழ்ந்திருக்கின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) கோயில் இதற்குத் தக்க சான்று. இது போலவே கோயில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று இசை வளர்க்கப்பட்டிருக்கிறது. இன்றும் இது தொடர்கிறது. உரிய உரிய உத்ஸவங்களுக்கு உரிய உரிய வாத்யங்கள் வாத்தியங்கள் இசைக்க வல்லாரால் இசைக்கப்பெற்றிருக்கின்றன.
உருத்திரகணிகையர் அல்லது தேவதாசியர்கள் நடனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் பற்றி தற்காலத்தில் தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் விஜய நகர அரசுக்கு (முகலாயர் காலத்திற்கு) முன் இவர்கள் மிகச்சிறப்பான ஒழுக்கக் கட்டமைப்புடன் கூடிய இறை பணிக்கான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.
இது போலவே திருமாலை தொடுக்கும் பணிகள் போன்றனவும் கோயிற் சுற்றாடலில் இயல்பாக நடைபெற்றுள்ளன. இன்னும் தொடர்கின்றன. கோயிலில் நந்தவனம் அமைத்து அவற்றை பராமரிப்பதம் வழக்கம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல விருட்சம் நிச்சயமாக அமைந்திருக்கும்.
இன்றைக்கு தலவிருட்சங்களில் நேர்த்திகள் என்று பட்டாடைகளை அளவுக்கு அதிகமாக சுற்றி- அவற்றைச் சுற்றிலும் கொட்டகைகள் அமைத்து- அவற்றின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு வருவதும் இவ்விடத்தில் சிந்திக்க வெண்டியது. இயற்கை தான் கோயிலுக்கு அழகைத் தருகிறது.
ஏழு மலை திருப்பதிக்கு அழகு. அலையெறி கடல் தான் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூருக்கு அழகு. காடும் மலையும் தான் பழநிக்கும் சபரிமலைக்கும் திருவண்ணாமலைக்கும் அழகு. ஆக, இவற்றின் இயற்கையை அந்த இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனை காண- சிந்திக்க போற்ற இயலாமல் அவற்றுக்கு பெரும் இடையூறுகளாக செய்படுவது கோயில்களின் புனிதத்துவத்தையும் இயற்கைத் தன்மையையும் சீரழித்து விடும்.
வாவென்று அழைத்து வரமருளும் வள்ளல்
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலை வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
என்பது திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி. கோயிலை வணங்கி என்று இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார். இறையுருவமான கோயிலை வணங்குவது கோமகளை வணங்குவதற்கு ஒப்பாகும் என்பத இதில் காட்டப்படும் கருத்தாகக் கொள்ள இயலுமல்லவா?
இத்தகு கோயிலை நோக்கி தூரத்தே வரும் போதே வா வா என்று கூவி அழைப்பது மணியோசை. ஆதற்கு அடுத்ததாக உயரத் தரிசனம் தந்து நம்மிடம் வம்மின் என்று சொல்லி நிற்பது ‘ஸ்தூல லிங்கம்’ என்ற கோபுரம். இதன் சிறப்புக் கருதியே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னார்கள். சில கோயில்களில் பல்வேறு கோபுரங்கள் அமையப்பெற்றிருக்கும் . திருவண்ணாமலை. மதுரை, ஸ்ரீரங்கம் போன்றவற்றில் இவ்வாறு காணலாம்.
பொதுவாக நடுவே அமைவதை மத்யகோபுரம் என்றும் பிறவற்றை தென்கோபுரம், மேற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரம், வடகோபுரம் என்று அழைப்பர். தனித்துவமான சிறப்புப் பெயர்களால் அழைப்பதும் உண்டு. பிரகாரத்திற்கு ஒன்றாக கோபுரங்களை அமைக்கும் வழக்கமும் இருக்கிறது.
வானாளாவ தென்னகத்தே சிற்ப-சித்திரக் களஞ்சியமாக எழுந்து, வளர்ந்து கோபுரங்கள் நிற்கின்றன. இந்துக்கள் மூலாலயத்திலும் சந்நதிகளிலும் எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ள மூர்த்திகளில் மட்டுமன்றி கோயிலையே இறையுருவமாகக் காண்கிறார்கள். அதிலும் விமானம், கோபுரம் இரண்டும் முழுக்க முழுக்க கடவுளுருவாகவே போற்றப்படுவது. இதனாலேயே கும்பாபிஷேக சமயத்தில் முக்கியமாக பூஜிக்கப்பெற்று இறை சாந்நித்யம் உருவாக்கப்பெற்ற கும்பங்கள் விமான மற்றும் கோபுர கலசங்களுக்கு அபிஷேகிக்கப்படுகின்றது.
Popular Temples
எனவே தான் சைவர்கள் ஸ்தூல லிங்கம் என்று கோபுரங்களைப் போற்றுகிறார்கள். அதாவது மூலாலயத்தில் உள்ள சூட்சூமலிங்கத்தின் மறுவடிவம் கோபுரம். பிரதிஷ்டை செய்யப்பெற்று- கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்ற கோபுரத்தினை பாலஸ்தாபனம் செய்கிற போது படவிம்பத்தில் ஸ்தாபித்த பின்பே கோபுரத்தில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிற வழக்கம் இருக்கிறது.
ஆனால் தற்போது சில தமிழ்ச்சினிமாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் சாய்ந்து நிற்பதற்கும் உரிய இடமாக- கோபுரத்தைக் காட்டி விடுகிற வேதனையைப் பார்க்கிறோம். தேவையற்று- கோபுரங்களில் ஏறக்கூடாது. பிரதிஷ்டிக்கப்பெற்ற கோபுரத்தில் தவிர்க்க இயலாத வகையில் ஏறுபவர்கள் ஆஸ்தீகர்களாக –தீட்சை பெற்றவர்களாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் ப்ரார்த்தனை செய்து கொண்டு தெய்வ காரியத்தின் பொருட்டு மாத்திரம் கோபுரங்களில் ஏறலாம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
இதனை நாம் இன்றைய சூழலில் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த விதியை கூட மூலாலய விமானங்களுக்குப் பொருத்தமாகக் கருதக் கூடாது.
சிவாலயங்களை விட வைஷ்ணவாலயங்களில் விமானங்களுக்கு மேன்மையும் சிறப்பும் இன்னும் இன்னும் அதிகம். ஸ்ரீரங்கம்- ப்ரணவாக்ருதி விமானம், கும்பகோணம் வைதீகவிமானம், ஒப்பிலியப்பன் கோயில்- சுத்தானந்த விமானம், திருக்கண்ணபுரம்- உத்பல விமானம், திருக்கூடலூர்- அஷ்டாங்க விமானம், அழகர்கோயில்- சோமசுந்தரவிமானம், திருமோகூர்-கேதகி விமானம் (சதுர்முக அமைப்பினது), காஞ்சி வரதர் கோயில்- புண்ணியகோடி விமானம், திருமலை- ஆனந்த நிலையம் என்றெல்லாம் கோயில்களில் உள்ள மூல விமானங்கள் பெருமையுடனும் சிறப்புடனும் போற்றப்பெறுகின்றன. எனவே விமானங்கள் (ஸ்தூபிகளின்) சிறப்புகளை அறிந்து பேண வேண்டும்.
கோபுரங்களும்- விமானங்களும் சிறப்புப் பெறுவது போல உயர்ந்து நின்று பெருமையோடு திகழ்வது துவஜஸ்தம்பங்கள் என்ற கொடிமரங்கள். மூங்கில், கருங்காலி, வில்வம், தேவதாரு, பலாசு, தென்னை. தாலம், ஹிந்தாலம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மரத்தால் ஆக்கப்பட்டு செப்பு,வெள்ளி, தங்கம் என்ற ஏதாவது ஒரு உலோக தகட்டினால் மூடப்பெற்று சிற்ப எழிலுடையதாக கொடிமரங்கள் விளங்கும். இதன் அடியிலேயே எண்சாண் உடம்பும் நிலத்தில் தொடுகையுறும் வகையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிற வழக்கம் இருக்கிறது.
உற்சவங்களின் போது கொடிமரத்தில் கொடியேற்றப்பெறும். அக்காலத்தில் சகல தேவ-தேவியரும் கொடிமரத்தில் எழுந்தருளச் செய்யப்பெற்று விசேடமாகஆராதிக்கப்பெறும்.
கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்கள்
புதுமைகள் அவசியமானவை. பழமையை கவனத்தில் கொண்டு புதுமைகளையும் உள்வாங்குவது சிறப்பு. பழைய கோயில்களில் மண்டபங்கள் தோறும் சட்டவிளக்குகள் என்று வாசலினைச் சுற்றி விளக்குகள் வைக்கப்பெற்றிருக்கும். தற்போது சில இடங்களில் வசதிகருதி அவற்றை நீக்கி விடுகிறார்கள். மின்சார ஒளியூட்டுகிறார்கள். மின்சாரம் இல்லாத காலத்தில் போல விளக்குகள் எல்லாவிடத்தும் நிறைந்திருப்பதால் எங்கும் தூய்மையின்மை உண்டாகலாம் ஆயினும் விளக்கு ஒளியின் அழகு.. அருள் எழுச்சியை மின்சாரம் தராது என்பதும் கவனிக்க வேண்டியது.
கோயில் சந்நதி வாசல்களில் பாரிய மரத்தாலான கதவுகளை அமைக்கிற போது அருகே வசதியுள்ள போது இரும்புக் கதவுகளையும் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அர்ச்சகர் சிறிது விலகிச் செல்கிற போது கூட வரும் பக்தர்கள் இறை தரிசனம் செய்ய அது வசதியாக அமையும்.
கருவறையின் கோமுகம் வழியாக வருகிற அபிஷேகஜலத்தை பிரசாதமாக ஏற்கிற வழக்கம் தமிழகம் மற்றும் இலங்கையில் சில இடங்களில் உண்டு. இவை கூட ஏற்கத்தக்கதன்று. எனினும் கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் மட்டும் இதனை ஒழுங்கமைத்துச் செய்யலாம். அபிஷேகதீர்த்தத்தை குருக்கள் உரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவர் தரும் போது பெற்றுக் கொள்வதே சிறப்பு.
தற்போது மாபிள் மற்றும் தராஷோ முதலியவற்றை கோயில் தளங்களில் பதிக்கிறார்கள். ஆனால் இதனால் கருங்கல்லில் நமது பாதம் பதியாது தடுக்கப்படுகிறது. கருங்கல்லில் பாதம் பட்டால் அது மருத்துவ ரீதியான நலங்களைத் தரும் என்று சொல்வார்கள். எனவே, இதனைப் பற்றியும் புதிய எண்ணங் கொண்டவர்கள் சிந்திப்பது சிறப்பு.
கோயில்களுக்குப் போகும் போது அடியவர்கள் அதற்குரிய உடையோடுதான் போக வேண்டும். திருச்செந்தூருக்கு- குருவாயூருக்கு- ஏன் எந்த ஒரு இலங்கையிலுள்ள கோயிலுக்கு செல்ல நேரிட்டாலும் ஆண்கள் மேலங்கி இன்றியே உட்பிரவேசிக்க முடியும். சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தஸ்வாமி தேவஸ்தானம் இது குறித்து ஒரு பகிரங்க அறிவித்தல் செய்தது. அதில் ஆண்கள் வேட்டியணிந்து மேலங்கியின்றி வரவேண்டும் என்றும் பெண்கள் யாவரும் சேலையணிந்து தான் வர வெண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. எனினும் சிலரின் கோரிக்கையை ஏற்று சுடிதார் என்கிற பஞ்சாபி உடையும் அனுமதிக்கப்பெற்றது. திருமலை- திருப்பதி தேவஸ்தானமும் இது குறித்து அண்மையில் ஒரு கோரிக்கை வெளியிட்டிருந்தது. ஆக, இந்துக்கள் கோயில் ஒழுங்கில் கட்டாயம் பேண வேண்டும். பாரம்பரிய உடையன்றி வேற்றுடை தரித்து கோயிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வியாபார நிலையங்களை கோயிலுக்குள் வைத்திருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது. அது பூஜைப் பொருட்களாகிலும் சரி வேறு பொருட்களாகிலும் சரி ஸ்வாமி சந்நதி வாயிலில் வதை;து கூவி விற்றால் அது மிக வேதனையாக அமையும். எனவே புற வீதியில் ஒழுங்கு செய்யப்பெற்ற இடத்தில் மட்டுமே வியாபார நிலையங்கள் அமைய இடமளிக்க வேண்டும். தேவஸ்தானத்தின் பிரசாதம் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பெற்ற பிரத்யேக இடத்தில் அமைக்கப்பெற்ற விநியொக நிலையத்தில் விநியோகிக்கப் பெற வேண்டும்.
வசதியுள்ள கோயில்களில் அன்னதான மண்டபம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை தனியாக அமைத்துக் கொள்ள வேண்டும். திருமணங்கள் கோயிலுள் நடைபெறுகிற போது பண்பாடு பாதுகாக்கப்பெறுதல் அவசியம். இதே போலவே, ஷஷ்டியப்தபூர்த்தி முதலிய வைபவங்களை கோயில்களில் நடத்துகிற போதும் வழிபாட்டிற்கு இடையூறின்றிஅ து அமைய வேண்டும்.
கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களன்களாக- கலைகளின் வளர்ச்சிக்கு உதவுவனவாக- வைத்திய நிலையங்களாக- ஆன்மீக பயிற்சி நிலையங்களாக- கல்விச் சாலைகளாக பல் பரிணாம நிலையை தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும். கோயிலைச் சுற்றி இவ்வாறான அறப்பணி நிலையங்கள் அமைவதற்கு வழி செய்ய வெண்டும். கோயில்களில் தற்போது சுவாமி- அம்பாள் விக்கிரகங்கள் பல வகைகளில் அலங்கரிக்கப்பெறுகின்றன. ஹஸ்தம் (கை) பாதம் (கால்) வைத்து சாத்துப்படி செய்யும் போது அது இறையுருவத்தை சிதைக்காமல் அமைய வேண்டும். இறைவனின் திருவுருவில் சாத்தக் கூடாத பொருட்களினை வைத்து கட்டி அழகு செய்கிறோம் என்று செய்வது மகாபாவம். இலங்கையிலுள்ள கோயில்களில் 1950களில் அக்கால பெரியவர்கள் எடுத்த முயற்சியால் ஹஸ்த பாதச் சாத்துப்படி பெருமளவில் நிறுத்தப்பட்டு விட்டது. சிவஸ்ரீ.ச.குமாரசுவாமிக்குருக்கள் எழுதிய ‘மூர்த்தியலங்காரவிதி’ என்கிற நூல் விபரீத அலங்காரங்களால் ஏற்படக் கூடிய கேடுகள் பற்றி சிவாகம சான்றுகளோடு குறிப்பிடுகிறது. இது குறித்து பெருமளவில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
சிவாகமங்களில் நின்ற வடிவம் நின்ற வடிவமாகவே அலங்கரிக்கப்பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. போலிக் கரங்களும் பாதங்களும் இறைவனுக்குச் சாத்துவது குற்றமாகும். காமிகாகமத்தில் நடராஜமூர்த்தியை கல்யாணசுந்தராகவும் கல்யாண சுந்தரரை நடராஜராயும்.. சக்தியை சிவமாயும்.. சிவத்தை சக்தியாயும் அலங்கரிப்பது குற்றம் என்று இருக்கிறது. இது குறித்த வைஷ்ணவாகமங்களின் விளக்கம் அறியேன். ஆங்கே இதற்கு நிச்சயமாக தெளிவான செய்திகள் இருக்கும் என நம்புகிறேன். எது எவ்வாறாகிலும் மூர்த்தியலங்காரம் பற்றி மீளவும் பரிசீலித்து அவற்றை இத்துறை சார் வல்லுனர்கள்- சாஸ்திரம் அறிந்தவர்கள்- ஆகமம் கற்றவர்கள் தெளிவு உண்டாகும் வகையைச் செய்தல் வேண்டும்.
லட்சக்கணக்கில் பக்தர் கூட்டம், யார் பொறுப்பு?
sabrimala
  • கோவில்களில் கூட்டம் மிகுவது, அதைத் தொடர்ந்த அசம்பாவிதங்கள் குறித்த விழிப்புணர்ச்சி அந்தந்த தேவஸ்தான கமிட்டி மற்றும் மாநில அரசுகளிடம் உருவாக்கப் படுவது அவசியம்.
  • கோடிக்கணக்கில் கோவில் வருமானத்தை பராமரிக்கும் தேவஸ்தானங்களும், வருமானத்தில் பங்கு போட்டுக் கொள்ளும் அரசும் மட்டுமே அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • கிடைக்கும் வருமானத்தில் பக்தர்களின் வசதிக்காக ஒரு பகுதியை ஒதுக்குவது இவர்களின் கடமை.
  • கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தான் மிக திறமையான முறையில் பெரும் கூட்டத்தை சமாளிக்கும் முறை இருக்கிறது.
  • ஏனைய மற்ற கோவில்களில் இனியாவது திருப்பதியைப் பார்த்தாவது ஏற்பாடுகள் செய்து தருவதில் முனைப்புடன் இயங்க வேண்டும்.
  • பிரதமர் தலைமையில் இயங்குகிற National Disaster Management Agency அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சர் தலைமையில் இயங்கும் இது போன்ற அமைப்புகளும் செயலில் இறங்குவது அவசியம்.
  • இறுதியாக சபரிமலையில் நடந்தது போன்ற அசம்பாவிதம் நடந்தால், அது குறித்து ஆய்வு செய்து அதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை பதிவு செய்ய வேண்டும், மீண்டும் இது போன்று அபாயம் நிகழாமல் தடுக்க இது அவசியம்.
கோயில் சிறப்பாக இயங்குவதற்கு கோயில் அர்ச்சகர்- அறங்காவலர்- தினமும் சேவிக்க வரும் அடியவர்கள் ஆகிய மூவகையினரும் முக்கியமாக ஒன்று கூடி சிந்திக்க வேண்டும். ஆடம்பரம்- அலங்காரம் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர முயலும் போது நமது வேதாகம அறிவுறுத்தல்களுக்கு அவை மாறாக அமையாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஆக, ஆலயம் என்பது இந்துக்களைப் பொறுத்த வரையில் அருளொளி வீசும் தெய்வீக நிலையங்கள். தெய்வத்தின் மறுவடிவங்கள். இறைவன் எழுந்தருளியிருக்கிற ஆலயங்களினை அதற்குரிய புனிதத்துவத்துடன்.. நவீன வகையான வசதிகளை உள்வாங்கி- அதே வேளை பழைமை- பண்பாடு- பகவத் சித்தம் இவற்றை மனங்கொண்டு புனரமைத்துப் பேணி செவ்வனே வழிநடத்துவது அவசியம்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலனைந்தும் காணா மணிவிளக்கே (திருமந்திரம்)

09 பிப்ரவரி 2011

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை


கோயில்களை கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கி, அவற்றை வெறும் பணம்காய்ச்சி மரங்களாக்கி, புராதனச் சின்னங்களை, தடயங்களை அழிக்கத் திட்டம்!

புராதனச் சின்னங்களாம் கோயில்களின் அடிமடியில் கைவைத்தல். தடை செய்யப்பட்ட ஒரு சுத்தம் செய்யும் முறையால் தமிழகக் கோயில்களில் வரலாற்று ஆவணங்கள் அழிப்பு!
மேலே காணும் வாக்கியங்கள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறதா? மனம் பதறுகிறதா? அப்படியெனில் நீங்கள் நம் புராதனச் சின்னங்கள் மேல் மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பவர்.
மனம் பதறவில்லையெனில் கட்டாயம் நீங்கள் தமிழக இந்து அறநிலையத் துறையைச் சார்ந்தவராய் இருப்பீர்கள்!
sandblasting-1
கோயில் என்றாலே கடவுளை நம்பாவிடினும், ஒருவன் கலை ரசிகனாக, அதன் சிற்பங்களையும் கற்றளிகளையும் கல்வெட்டுகளையும் ரசிக்கத் தவற மாட்டான். தமிழகத்தில் சுமார் 1,00,000கோயில்கள் உள்ளன (2ஜி ஊழலுக்குப் பிறகு, நாம் போடும் பூஜ்யமெல்லாம் சிறிதாகத்தான் தெரிகிறது!). இவற்றில் சுமார் 45,000 கோயில்கள் இந்து(?) அற(?) நிலையத் துறையின் பராமரிப்பில்(?) வருகிறது. இத்தனை கேள்விக்குறிகளைத் தாங்கி நிற்கும் அத்துறையின் தகிடுதத்தங்கள் சிலவற்றைப் பார்ப்போமா?
கமிஷனர், அதற்குக் கீழ் துணை, இணை ஆகியோர், மற்றும் ஒரு குறிப்பிட்ட கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழகத் தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கென ஒரு பத்துநாள் கருத்தரங்கம் நடத்தியது. முடிவுறும் நிலையில், இரு துறையின் தலைவர்களும் (கமிஷனர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்) அமர்ந்த நிலையில் ஒரு நிறைவு விழா நடந்தது. அப்போது கோயில்களைப் பராமரிக்கும் முறை, புதிய பொருள்களில் கட்டக் கூடாது, நாமாக மாற்றங்கள் செய்யக்கூடாது, மண் பீய்ச்சி அடிக்கும் சுத்தம் செய்யும் முறையை கையாளக் கூடாது என்றெல்லாம் கூறக் கேட்ட அறநிலையத் துறை அதிகாரிகளில் ஒருவர் எழுந்து, “சார் நானும் 25 வருஷமா சர்வீஸில் இருக்கேன். இத மாதிரியான பராமரிப்பு பத்தியெல்லாம் எனக்குச் சொன்னதே இல்லையே. எப்படி உண்டி கலெக்ஷன் அதிகப்படுத்தலாங்கிறத தானே சொல்லிக் கொடுத்தீங்க?” என்று போட்டாரே பார்க்கலாம். எல்லார் முகத்திலும் ஈயாடவில்லை.
அந்தக் கருத்தரங்கம் ஒரு கண் துடைப்பு நாடகம். நடத்தியதாகக் காட்டி செலவுகள் காண்பித்து சுருட்டுவதற்குத்தான் அது நடந்தது என்று சொல்லத்தான் வேண்டுமா?
மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலே ஒரு சாட்சி. பழைய புராதன அடையாளங்களான கல்வெட்டுகள் மேல் வெள்ளை, பச்சைப் பூச்சுகள். நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு, பிராயச்சித்தமாக தற்போது ஒரு மலையாள ஓவியரைக் கொண்டு சுவர்களை நிரப்பப் பார்க்கிறார்கள். அதுவும் பலமுறை அதிகமாக்கப்பட்ட பட்ஜெட்டில் (escalated budget!).
சென்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். மயிலையிலும் திருவல்லிக்கேணியிலும் உள்ள கோயில்களில் புராதனத் தன்மை ஏதேனும் உள்ளதா? தூண்களில் உள்ள சிலைகளின் மேலேயே கம்பிக் கிராதிகள் அடிப்பதும், கல்வெட்டுகளை கை மாறிக் கால் மாறி மாற்றி அடித்து வைப்பதுமாக, விமானங்கள், கோபுரங்கள் முழுதும் அசிங்கமாக எனாமல் பெயிண்ட் பூசப் பெற்று, தம் புராதன, புனிதத் தன்மையை இழந்து நிற்கும் பணங்காய்ச்சி மரங்களாகத்தானே அவை இருக்கின்றன?
கடலுக்கடியில் மூழ்கிவிட்ட ஓர் அரிய கோயில் தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் கோயில். அதனை அப்படியே மீட்டெடுக்க புராதன ஆர்வலர்கள் போராடி வந்தனர். தொல்லியல் துறையும், அறநிலையத் துறையும் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், திடீரென அக்கோயிலைப் புனரமைக்க வைப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்திற்கான கெடுகாலம் முடிந்துவிடும் என்ற பயத்தில், அதிரடியாக ‘முபாரக் கன்ஸ்ட்ரக்ஷன்’ எனும் காண்டிராக்டர் மூலம் குத்தகை விட்டு, கோயிலைப் புனரமைக்கிறார்களாம். பத்து நாள்களுக்குள் கடலுக்கடியில் உள்ள புராதனச் சின்னங்களை, சிலைகளை, கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றாமல், கருங்கற்களைக் கொட்டி மறைத்து மேடுபடுத்தி, புதிய கோயிலை நிர்மாணித்து விட்டார்கள். அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?
இந்தச் சுட்டியிலுள்ள செய்தியைப் பாருங்கள்…
வெள்ளையடிப்பதும், கொள்ளையடிப்பதும் மட்டுமா இவர்கள் செய்வது? ஆகம விதிகளையுமல்லவா தேய்த்து மிதிக்கிறார்கள்?
கோஷ்ட தேவதைகளிலே, மிகவும் பரிதாபத்திற்குரிய தேவதைகள் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும். படிப்பிற்கோ, திருமணத்திற்கோ, குழந்தை வேண்டியோ, வேறு தோஷ நிவர்த்திக்கோ வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தியையும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையையும் அலங்கோலப் படுத்துவது இவர்களின் கைங்கர்யம். அம்மூர்த்தங்களின் அடியிலேயே கற்பூரம் ஏற்றிக் கொழுத்திக் கரியாக்குவதும், எண்ணெய் வழிய பிசுக்குமழை சேர்ப்பதும், ஜிகினா சகிதம் மட்ட ரக வஸ்திரங்கள் சார்த்தியும், மரத்தூளாலான செண்ட் சேர்ப்பிக்கப்பட்ட போலி சந்தனம், கெமிக்கல் சிவப்பால் ஆன கலப்படக் குங்குமம் கொண்டு அழகு(?) செய்வதுமாய், அவர்களுக்கு இந்த அலங்கோலங்களை பக்தர்கள் செய்ய சசதியாக கோஷ்டங்களில் ஒரு எக்ஸ்டென்ஷன் அமைப்பு (concrete extensions) செய்தும், கோயில் கட்டட சாஸ்திரத்தையும் ஆகம சாஸ்திரத்தையும் தொழும் சாஸ்திரங்களையும் சிற்ப சாஸ்திரங்களையும் நகைப்புக்குரிய விஷயங்களாக்கி விட்டு, கடவுளர்களைக் காசு அடிக்கும் இயந்திரங்களாகச் செய்வது யார்?
ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவதுயார்?
பழங்கால ஓவியங்கள் மிக்க திருப்புலிவனம் சிவன் கோயில், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள மன்னார் கோயில் ஆகியவற்றின் புனரமைப்பின் போது, ஓவியங்கள் அழிக்கப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு, கற்சுவர்கள் முழுவதற்கும் மண்பீய்ச்சி அடித்து, கல்வெட்டுகளை அழித்து, ஒரு புராதனப்படுகொலையே நடத்தி விட்டார்கள், இந்த ___ __ ___த் துறையினர். இந்து, அறம் என்ற வார்த்தைகளுக்கு மரியாதை தராத அந்த நிறுவனத்தின் முன் அந்த நல்ல வார்த்தைகளைப் போட மனம் ஒப்பவில்லை எனவே இனி, அது ___ __நிலையத் துறை என்றே இக்கட்டுரை முழுதும் குறிப்பிடப்படும்.
சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். தமிழ் வளர்க்கிற பேர்வழிகளுக்கு, கல்வெட்டுகள் எத்தனை முக்கியமானவை என்று தெரியாதா? அவை தாங்கி நிற்கும் செய்திகள் என்ன என்று தெரியாதா? சுருக்கமாகச் சொன்னால், மன்னர்கள் மற்றும் ஊரின் முக்கிய குடிகள், பெருமக்கள், குலம் கோத்திரப் பாகுபாடின்றி, கோயிலுக்கு அளித்த நிலங்கள், கொடைகள், சாசனங்களாய் எழுதி வைத்துப் போன சட்ட திட்டங்கள், பண்ட மாற்று முறைகள், வரும் பணத்தினை பொது மக்களுக்கு எவ்வாறு உபயோகத்திற்கு தரலாம், அவ்வாறு தரும் பணம் கோயிலுடையது ஆகையால், அதற்கு எம்மாதிரியான வட்டி கோயிலுக்குப் போய்ச்சேர வேண்டும். யார் யாருக்கு எந்த மாதிரியான பணிகள், அவர்களுக்கு தரப்படும் சம்பளம் என்ன, கோயிலுள் உள்ள ஆதுர சாலைகள் (மருத்துவ மனை) மற்றும் கல்விக்கூடங்களுக்கான பண ஒதுக்கீடு, நடைமுறைகள், ஊர் கட்டுப்பாட்டு விதிமுறைகள் என்பவற்றை எல்லாம் தாங்கி நிற்கும் காலச்சுவடுகள், இந்தக் கல்வெட்டுகள். மன்னன் மக்களுக்கு வகுத்த நெறிமுறைகள், கல்வெட்டுக்களில் அரச மெய்கீர்த்தியோடு (புகழுரை) ஆரம்பித்து, இறுதியில் மேற்கூறிய விஷயங்களுடன் முடிவடைவதாகவே இருக்கும். அருகிலுள்ள கிராமங்கள், மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் கல்வெட்டுகளில் பெரும்பாலும் குறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் மிக மிகக் குறைவே.
அங்கேதான் நமது அரசியல்வாதிகள், துறைகளின் மூலம் ஒரு மாபெரும் சதியை அரங்கேற்றி வருகிறார்கள்.
மக்கள் இயைந்து வாழும் முறை, நிபந்தங்கள், அருகிலுள்ள கோயில் சொத்து முறைகள் என்று அன்றைய சூழலில் வாழ்வியலும், மக்களுக்குகந்த மன்னராயும், நிபந்தங்களும், கோயில் பராமரிக்க நிலங்களும் தந்து, ஜாதிச் சண்டைகளற்ற ஒரு கோயிலை இயைந்த (TEMPLE CENTRIC) சமுதாயத்தைப் பேணி காத்தனர் நம் மன்னர்கள்.
sandblasting-3
ஆனால், இன்று படிப்படியாக புனரமைப்பு என்ற பெயரில், காலச்சுவடுகளாம் கல்வெட்டுகளையும் கற்றளிகளையும் அழிக்கும் கூட்டம் ஒன்று இந்த மாநிலத்தில்தான் உருவாகி உள்ளது.
ஆதாரங்கள் கீழே:
2007-இல் அறநிலையத் துறைக்குள், தொல்லியல் துறையின் அறிவுரையின் பேரில் இந்த மணல் பீய்ச்சி அடித்தல் முறைக்கு ஒரு தடைச் சட்டம் வந்தது. சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த திரு.ஆர்.பாலசுப்ரமணியன், அவரது கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
சமீபத்தில் (2007-இல் எழுதப்பட்ட கடிதம்) திருவண்ணாமலை கோயிலுக்குப் போனபோது, மணல் பீய்ச்சி அடிக்கும் முறையால் (sand blasting) என்ன கேடுகள் விளைந்துள்ளன என்பதை எங்களால் கண்கூடாகக் காணமுடிந்த்து. சிதறிப்போன தூண்களும், விரிசல்கள் கண்டுவிட்ட சுவர்களும், உடைந்துவிட்ட நந்தியும், புடைப்புச் சிற்பங்களும் சிதறுண்டுவிட்டன. அமோனியா நீரால் கற்றளிகளைச் சுத்தம் செய்யும் முறை 2002-2003 வருடத்திலேயே, சென்னை பார்த்தசாரதிப் பெருமாள் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் மற்றும் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில்களில் எங்களால் அறிமுகப் படுத்தப்பட்டும், அந்த முறை துரதிருஷ்டவசமாக கைவிடப்பட்டது. வண்டிகள் சுத்தம் செய்யும் சாதாரண மோட்டர் பம்ப் கூட போதும். செலவும் மிகக் குறைவு. இந்த இரண்டு முறையும் கைவிடப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்த முறையைத் தடை செய்த செய்தி மனதுக்கு இதமாக உள்ளது.” [இணையத்தில் இதற்கான சுட்டி]
இணையதளத்தில் இந்த முறையின் தீங்குகளை விளக்கும் இந்தச் சுட்டியைப் பாருங்கள். இது குறித்து ஜியாலஜிகள் சர்வே ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.பத்ரி நாராயணன் அவர்களிடம் விளக்கம் கேட்டோம்.
அவர் தொல்லியல் துறை அறிஞர் ரீச் பவுஃண்டேஷனின் தலைவர்திரு.தியாக.சத்தியமூர்த்திக்கு எழுதியது:
“பெங்களூர் பெருஞ்சாலையில், காஞ்சிபுரம் தாண்டி உள்ள திருப்பாற்கடல் பெருமாள் கோயில்களில் மணல் பீய்ச்சி அடிக்கும் முறையில் கற்கள் சேதமாவதைப் பற்றி திரு.சந்திரசேகரன் செய்தி அனுப்பினார். நானும் சென்று பார்வை இட்டேன்.
மிகவும் அதிக வேகத்தில் அடிக்கப்படும் மணற்துகள்களின் கெட்டிப்புத்தன்மை (hardness in Mohr units) 10 (வைரத்துக்கு இணையான கூர்மையும் கெட்டித் தன்மையும் கூடியது). ஆனால் சுவர்கள் எழுப்பட்டுள்ள கருங்கற்களின் (Charnockite) கெட்டிப்புத் தன்மை 6. எனவே அதிக கெட்டியான மணல், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது போல், சுவர்களில் பீய்ச்சிஅடிக்கப்படுகின்றன. அதனால் கண்ணிற்குத் தெரியாத விரிசல்கள் சுவர்களில் நிரந்தரமாய் ஏற்படும். கொஞ்சம் நெகிழ்வான கற்கள் சிதறுபடும். 3 மி.மீ வரை உள்ளே செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தமாக அழிந்துவிடும், சிலைகளின் அங்கங்கள் ஹீனமாகி விடும். மொத்தக் கோயிலின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் செயல், இந்த மணல் பீய்ச்சும் முறை (sand blasting). எனவே தடை செய்யப்பட்ட இதை நிறுத்த நாம் எல்லாரும் போராட வேண்டும்.” 
இது குறித்து சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் சுட்டி.. 
 
இதுவரை இந்த முறையால் அழிவுப்பாதையில் செல்லும் சில பிரபலக் கோயில்களின் பட்டியல் இதோ..
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
  • அம்பாசமுத்ரம் எரிச்ச உடையார் கோயில்
  • தக்கோலம் கோயில்கள், திருப்பாலைவன நாதர் கோயில், ஆகியவை.
  • குலசேகரநாதர் கோயில், தென்காசி (இங்கே கதவுகளை மூடிக் கொண்டு இரவோடு இரவாக திருட்டுத்தனமாய் மணல் பீய்ச்சி அடித்தனர்.)
     
மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலில் சுண்ணம்பு அடிக்கப்பட்டும், ஓவியங்கள் அழிக்கப்பட்டும், மணல்பீய்ச்சு முறையால் கற்கள் சுத்தம் செய்யப்பட்ட போதும், பல கண்டனங்கள் எழுந்தன. சுட்டி 1 சுட்டி 2 | சுட்டி 3 | சுட்டி 4
 
திருவண்ணாமலையிலும் இதே கதைதான்..
mannarkoil-renovation-board
இருப்பினும் மன்னார்கோயிலில் இத்தகைய அட்டகாசம் தொடர்ந்தது. கொடுமை என்னவென்றால், கோயில் வாசலிலேயே செலவுகள் குறித்த பலகையில், மணல்பீய்ச்சும் செலவுக்குப் பணம் ஒதுக்கப்படிருந்தது! சுட்டி 1 | சுட்டி 2 
சென்னை போரூர் கோயிலிலும் இதே கதைதான்…
திருப்பாலைவனத்தில் கல்வெட்டுகள் மாற்றிப் பதிப்பிக்கப்பட்டும், ஓவியங்கள் வெள்ளையடிக்கப்பட்டும், நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிட்டன.
இதைப் பாருங்கள்! இந்த தடை செய்யப்பட்ட முறையில் சுத்தம் செய்ய நன்கொடை வேண்டிப் பட்டியல்! (எண் 12 – sand blastingபுனரமைப்பு slideshare
வழக்கமாக, புராதனச் சின்னங்கள் அழிக்கப்படும் போது, தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நான் நேரடி மனுக்கள் தந்து, அவர் பார்வைக்கு அவற்றைக் கொண்டு வருவது வழக்கம். இது நேற்று ‘தி ஹிந்து’-வில் வந்த செய்தியின் சுட்டி..
சமீபத்தில் சுமார் 50 கோயில்களில்– திருநெல்வேலி ஜில்லா முழுவதுமாய், புகழ் மிக்க கன்யாகுமரிக் கோயில் உட்பட– பல கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அனைத்திலும், வேலை தெரியாத செல்வாக்கு மிக்கவர்களே காண்டிராக்டர்கள்! (அரசியல்வாதிகள், _____த் துறை அதிகாரிகளின் கணவன்மார்கள், உறவினர்கள்..) மாநிலத்தலைமையின் துணைவியாருக்கு ஒரு பெண் உயர் அதிகாரியே மாதம் ஒரு லகரம் _____த்துறையின் சார்பாக கப்பம் கட்டிவிட்டுவருகிறார், தெரியுமா?
sandblasting-2
சரி, இதில் சதிவேலை என்ன இருக்கிறது என்கிறீர்களா?
ஐயா, கல்வெட்டுகள் தான் அக்காலத்து ஸ்டாம்ப் பேப்பர்! கடவுள் கருவறையைச் சுற்றி எழுதுவது,. கோர்ட் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதுவதற்குச் சமம். படிப்பவர்கள் அந்தச் செய்திகளையும் நிபந்த ஆணைகளையும் மீறமாட்டார்கள். இறை நம்பிக்கை அன்று இருந்தது. நம் தென் மண்டலத்து அத்தனை நில ஆவணங்களும் மன்னர்களால் பெரும்பாலும் கல்வெட்டுகளாய்த்தான் பதியப் பெற்றன. இந்த சாண்ட் பிளாஸ்டிங் செய்துவிட்டால், அந்த நிலங்கள் பற்றிய ஆவணங்களை அழித்துவிடலாமல்லவா? அவ்வாறு அழித்துவிட்டால் ஒட்டு மொத்தமாக கோயில் நிலங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் அல்லவா? இதுதான் அரசியல்வாதிகளால், இறையாண்மை என்ற பெயரில், மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்துக் கோயில்களுக்கு வந்துள்ள ஆபத்து. பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாகவா அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்கின்றனர்? இல்லையே.. இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை? இந்த இந்து மத நம்பிக்கை அற்ற அறம் நிலைக்காத துறையிடமிருந்து தொன்மைமிக்க கோயில்களை மீட்டால்தான் கோயில்களும், அதனுள் உள்ள காலச்சுவடுகளும், கலைப் பொக்கிஷங்களும் மீளும்! இல்லையேல் இந்து மதத்திற்கான அத்தனை வரலாற்றுச் சான்றுகளும் அழியும் நாள் மிக அருகில்! சரி, நாமாக எப்படிப் பராமரிப்பது என்கிறீர்களா. அறிஞர் பெருமக்கள், தொல்லியல், புனரமைப்பு வல்லுநர்கள் நம்மிடையே மிக அதிகமானவர்கள் உள்ளனர். அவர்களை வைத்து இந்துக்களே ஒரு குழு அமைத்து இக்கோயில்களைப் பராமரிக்கலாம்.
நமது கோயில் உண்டியல் பணத்தினை வைத்துக் கொண்டு நாட்டின் அத்தனை பழங்கோயில்களையும்கூட செப்பனிட்டுவிடலாம்.

maraboor-jeya-chandrasekaranகட்டுரை ஆசிரியர் மரபூர் ஜெய.சந்திரசேகரன்,  “ரீச் ஃபவுண்டேஷன்” அமைப்பின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.   இந்த அமைப்பு  நமது கோயில்களின் கலைச் சிறப்பையும்  வரலாற்றுப் பாரம்பரியத்தையும்  தெய்வீகச் சூழலையும் போற்றிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல சீரிய பணிகளைச் செய்து வருகிறது.   கிராம மக்களிடையே தங்கள் ஊர்க் கோயில் சிறப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்,   சிதைந்து கிடக்கும் பழைய கோயில்களைச் சீரமைக்க உதவுதல்,  கோயில்கள் பற்றிய வரலாற்று விவரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் எடுத்துரைத்தல்,  தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி  கோயில்களைச் சுத்தம் செய்தல்,   கோயில் பொலிவையும், கலையழகையும் சிதைக்கும்  நடவடிக்கைகளை  உடனுக்குடன் மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு: