Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

21 ஏப்ரல் 2014

நமது வெற்றி வேட்பாளர் திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்களின் தேர்தல் வாக்குறுதி

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டனியின் சார்பாக போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்களின் தேர்தல் வாக்குறுதி



20 ஏப்ரல் 2014

தொழுகையில் கலந்துகொண்ட மாணிக்கம் முத்துசாமிக்கு கரையூர் கிராம நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தண்டனை விபரம் வெளியீடு!

அதிவீரராமபட்டினம் கரையூர்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி (64). இவர் கடந்த 17.04.2014 வியாழன் அன்று காலை அதிவீரராமப்பட்டினம் பிலால் நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட மழைத்தொழுகையில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து அவர்மீது கிராம நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதும், அவர்மீது விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர் அனைவர் முன்னிலையிலும் பகிரங்க மன்னிப்புக்கோரினார். இதன் காணொளி நேற்று(19.04.2014) நம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும் அவருக்கு கிராம நிர்வாகம் வழங்கிய தண்டனை விபரம் தெரிவிக்கப்படவில்லை என நேற்று கூறியிருந்தோம். 

இன்று காலை நமது அதிவீரராமபட்டினம் ஹிந்துக்கள் இணைய நிருபரை சந்தித்த கரையூர்தெரு ஹிந்து இளைஞர்கள் தண்டனை விபரத்தையும் இணையத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் விபரம் வருமாறு:

அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு கிராம பொதுமக்கள், ஹிந்து இளைஞர்கள், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணிக்கம் முத்துசாமி மீது புகார் கொடுத்தனர். இந்த புகார் நேற்று(19.04.2014) மாலை விசாரனைக்கு வந்தது.

புகாரை விசாரித்த கிராம நிர்வாகம், கட்டுக்கோப்பான நமது கிராமத்தில் நிர்வாக பொருப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இவர் செய்த இந்த செயளால் நமது கரையூர்தெருவின் பெருமைக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் அனைவர் முன்னிலையிலும் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைவர் பஞ்சாயத்தார் சார்பில் கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய ஹிந்து இளைஞர்கள், இதுபோன்ற அவச்செயளில்  ஈடுபட்ட ஒருவர் கிரம நிவாக பொருப்புகளில் நீடிக்க தகுதியற்றவர் அவரை உடனே கிராம நிர்வாக பொருப்புகளிலிருந்து நீக்கவேண்டும்,
மேலும் அவர் தொழுகை நடத்திய வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டதைப்போல்,  நடந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் இணையதளங்களில் வெளியிடப்படவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கையை ஆலோசித்த கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள்  மாணிக்கம் முத்துசாமி வகித்துவந்த கிராம பொருப்புகளில் இருந்து ஒருமாத காலம் இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், மேற்ப்படி புகார் ஒருமாதத்திற்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் கூரினர்.


தனது தவற்றை உணர்ந்த மாணிக்கம் முத்துசாமி தான் ஹிந்து மதத்திற்கு பெரிய கலங்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், கரையூர்தெரு கிராம மக்கள் மற்றும் அனைத்து ஹிந்து மக்களும் நான் அந்த தொழுகையில் கலந்துகொண்டமைக்காக என்னை மன்னித்தருளுமாறும், நிர்வாகிகளின் இந்த முடிவை நான் மணமாற ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கூறினார்.

இவை அனைத்தும் நடைபெற்று முடிந்த பிறகு  நமது நிருபருக்கு தகவல் ஹிந்து இளைஞர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு கரையூர் மாரியம்மன் ஆலயத்திற்கு விரைந்த நமது நிருபர் முன்னிலையில் அவர் இணையதளத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

மாணிக்கம் முத்துசாமி தொழுகை செய்த வீடியோ பதிவை நிர்வாகத்திற்கு வழங்கி, தங்களது கடுமையான முயற்சிகளின் மூலம் இந்த சம்பவத்திற்கு நல்லதொரு தீர்வை கண்டு மேலும் பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நமக்கு வழங்கிய கரையூர்தெரு கிராம நிர்வாகத்திற்கும், கிராம ஹிந்து இளைஞர்களுக்கும் மற்றும் கரையூர்தெரு இந்து முன்னணி நன்பர்களுக்கும் 
"அதிவீரராமபட்டினம் இந்து முன்னணி" மற்றும் "அதிவீரராமபட்டினம் இந்துக்கள்(www.adiraihindus.blogspot.com) இணையம்" நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் அவர்களின் ஹிந்து எழுச்சியை பாராட்டுகிறது.

19 ஏப்ரல் 2014

முஸ்லீம்களின் தொழுகையில் கலந்துகொண்டமைக்காக ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டமாணிக்கம் முத்துசாமி

நமதூர் அதிவீரராமபட்டினம் கரையூர்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி (64). இவர் கடந்த 17.04.2014 வியாழன் அன்று காலை அதிவீரராமப்பட்டினம் பிலால் நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட மழைத்தொழுகையில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டார். இந்த தொழுகை காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.


மாணிக்கம் முத்துசாமி  மத்திய தொழிற்கூட பாதுகாப்பு படையின் (CISF) தலைமை காவலர் பணியிலிருந்து ஒய்வுபெற்றவர். முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும், ஹிந்து சமுதாய விழாக்களுக்கும், ஒற்றுமைக்கும், ஹிந்து பண்பாடுகளுக்கும் பெயர்போன அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு மீனவ கிராமத்தின் கிராம நிர்வாகிகளுல் ஒருவர்.  

இப்படிப்பட்ட நபர் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தொழுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்ட காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான கிராமத்தை சேர்ந்த ஒருவர், கிராம நிவாகிகளுள் ஒருவர் இவ்வாரு நடந்துகொண்டதை இணைய ஊடகங்களில் கண்ட கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், ஹிந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து இயக்கங்கள் மற்றும் கரையூர் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாடுவாழ் ஹிந்து இளைஞர்கள் கரையூர்தெரு கிராம நிர்வாகத்தை தொடர்புகொண்டு மாணிக்கம் முத்துசாமி மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகார் கிராம நிர்வாகத்தின் மூலம் இன்று அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீமாரியம்மன் ஆலையத்தில்  கிராம தலைவர், பஞ்சாயத்தார், கிராம நிர்வாகிகள், கிராம மக்கள், ஹிந்து இளைஞர்கள்  முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.

இளைஞர்கள் முஸ்லீம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாணிக்கம் முத்துசாமியின் தொழுகை காணொளியை ஆதாரமாக சமர்பித்தனர்.
கிராம நிர்வாகிகள் மாணிக்கம் முத்துசாமியை விசாரித்தனர். 

இருதியில் அனைவர் முன்பும் மாணிக்கம் முத்துசாமி நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்மீது கிராம கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( அதன் விபரம் நம் நிருபருக்கு வழங்கப்படவில்லை).

மேலும் கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், நடந்த இந்த சம்பவத்திற்கு அவர் இணையத்திலும் மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் நமது அதிவீரராமபட்டினம் ஹிந்துக்கள் இணையதள (www.adiraihindus.blogspot.com)  நிருபரை அழைத்தனர். 

நமது நிருபர் பஞ்சாயத்தாரின் அனுமதியுடன் மாணிக்கம் முத்துசாமி மன்னிப்பு கேட்டுக்கொண்டதை காணொளி பதிவு செய்தார்.

மாணிக்கம் முத்துசாமி :

17.04.2014 அன்று மழைதொழுகைக்காக நான் சென்று கலந்துகொண்டு பேசியமைக்கு  அனைத்து தமிழ் மக்களும், ஹிந்து மக்களும் என்னை மன்னித்தருளுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.




14 ஏப்ரல் 2014

தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

இன்று (14.04.2014) தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார்.




தஞ்சை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் நேற்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் வழியாக ஊருக்குள் போக வாகனங்கள் திரும்பியது.

அப்போது பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்தவர்களும், உள்ளே இருந்தவர்களும் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் கூட வந்தவர்களை ஊருக்குள் வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர். 

இந்த நிலையில் திடீரென சிலர் கூட்டத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும், கட்டைகளையும் சரமாரியாக வீசினர். ரோடு ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் பக்கத்தில் இருந்த குளத்திற்குள் தூக்கி வீசப்பட்டது. அந்த இடம் போர்க்களமாக மாறியது. பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கற்கள் வீசப்பட்டதால் சுற்றுப்பயணத்தில் சென்ற பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாதுரை, வெளிமடத்தைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயம்பட்ட பலர் வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டனர். பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தின் மீதும் ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. இதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 


(தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு முன்கூட்டியே குவித்துவைக்கப்பட்ட கற்குவியல்)






சம்பவம் அரிந்ததும் மற்ற கிராமங்களில் உள்ள பா.ஜ.க மற்றும் கூட்டனி கட்சி தொண்டர்கள் அங்கு வந்தனர்.  திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர். திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்குமாரும் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொண்டதாலும் தொண்டர்கள் அமைதிகாத்தனர்.

 தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் தொண்டர்களிடம் பிடிபட்டனர். அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


இதன் பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டரியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டமையாலும் திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்கும்படி வேண்டிக்கொண்டமையாலும் தொண்டர்கள் அமைதியடைந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சில இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த சம்பவத்தை தொடர்ந்து மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், அதிவீரராமபட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் அதிரடிப்படை போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மல்லிப்பட்டினம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனிடையே தாக்குதல் சம்பவத்திற்கு மதிமுக பொதுசெயலர் வைகோ கண்டனம்:


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளருமான முருகானந்தம் அவர்கள் இன்று பகலில் மல்லிப்பட்டினத்துக்கு வாக்காளர்களைச் சந்திக்க பிரச்சாரத்துக்குச் சென்றபோது, ஊருக்குள் வரக்கூடாது என்று வன்முறையாளர்கள் பலர் தடுத்துள்ளனர்.
வாக்குக் கேட்பது ஜனநாயக உரிமை என்றும், வாக்காளர்கள் அவர்கள் விருப்பப்படி ஓட்டுப் போடலாம் என்றும், நியாயமான வாதங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யாமல், ஒருதலைபட்சமாகவே நடந்துகொண்டனர். வேட்பாளருடன் சென்ற வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல், வேட்பாளர் வாகனத்தை மட்டும் மல்லிப்பட்டினத்துக்குள் அனுமதித்துள்ளனர்.
இதன்பின் வன்முறையாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வேட்பாளரையும், அவர் உடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. வேட்hபளர் மயிரிழையில் உயிர் தப்பினார். உடன் வந்தவர்களும் பலத்த காயமுற்றனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவே முடியாது என்று அக்கிரமமாக மறுத்துள்ளனர். நீண்ட அறப்போராட்டத்துக்குப் பிறகு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக நிந்தித்து விமர்சித்துள்ளார். இதன் பின்னணியில் இன்றைய மல்லிப்பட்டினம் சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை வேட்பாளர் மீதும், அவருடன் சென்றோர் மீதும் வன்முறை தாக்குதல் நடத்திய அராஜக ரௌடி கும்பலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
14.04.2014 மறுமலர்ச்சி தி.மு.க

13 ஏப்ரல் 2014

2014 ஸ்ரீஜய வருட பொது பலன்கள்


விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.14 திங்கட்கிழமை காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம் பாதம், கன்னி ராசி, மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில்- மேஷ லக்னம், ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம், வணிசை நாமகரணத்தில், சித்த யோகம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில் பகல் முதல் சாமம்- காகம் நடை பயிலும் நேரத்தில், சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.
ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி தானியங்கள் விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நாடாளுவோர் மத்தியில் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், மக்கள் தங்களின் பலம்- பலவீனங்களை உணர்வார்கள். பணத்தைவிட ஆரோக்கியமும் நிம்மதியும்தான் முக்கியம் என்பதை உணரத் துவங்குவர். ஆடை, ஆபரண உற்பத்தி அதிகரிக்கும். நாட்டை ஆளுவோரும் சாதி, மத பேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். காடு, மலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை பொழியும். மந்திரியாக வும் சந்திரன் வருவதால், விவசாயம் தழைக்கும். நிலத்தடி நீர் உயரும்.பெண்களின் ஆதிக்கம் ஓங்கும். அவர்களுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் அதிகரிக்கும்.
சேனாதிபதியாக சூரியன் வருகிறார். ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவார்கள். ஊழல்கள் கண்டறியப்பட்டுக் களையப்படும். முக்கிய ஏவுகணைகள், பீரங்கிகள், போருக்குப் பயன்படும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இந்தியாவே தயார் செய்யும். எல்லையில் பதற்றம் தணியும். எதற்கும் தயாரான நிலையில் நம் தேசம் திகழும். ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.
8.10.14 மற்றும் 4.4.15 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால், பெண் குழந்தை பிறப்பு குறையும். மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு அதிகரிக்கும். மன வளம் குன்றிய குழந்தைகள் அதிகம் பிறப்பார்கள். இதய நோயால் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள். 14.7.14 முதல் 1.9.14 வரை விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், பிரபலங்களின் மறைவுகள் அதிகரிக்கும்.
17.9.14 முதல் 16.11.14 வரை சூரியன் வலுவிழப்பதால், அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அமலுக்கு வரும். 13.6.14 அன்று குரு கடகத்தில் உச்சமாவதால், அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். உலகெங்கும் பணத் தட்டுப்பாடு குறையும். 4.5.14 முதல் செவ்வாய் வக்கிரமாகி வலுவடைவதாலும், 1.9.14 முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதாலும் உலகெங்கும் நிலத்தின் விலை உயரும்; ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மின் உற்பத்தி அதிகமாகும். மின்சார சாதனங்களின் விலை குறையும்.
இந்த வருடம் முழுவதும் சுக்கிரன் வக்ரமின்றி பயணிப்பதால் சினிமாத் துறை வளர்ச்சி அடையும். புதிய தொலைக்காட்சி சேவைகள் அதிகரிக்கும். வாகன உற்பத்தி பெருகும். நவீன வர்த்தக மையங்கள், புதிய மாதிரி நகரங்கள் உதயமாகும். மக்களின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தனிநபர் வருமானம் உயரும். தென்கிழக்கு, வடமேற்கு திசைகள் வலுவடையும்.
டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும். கறுப்புப் பணம் கண்டறியப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும். 20.9.14 முதல் 11.10.14 வரை; 11.1.15 முதல் 4.2.15 வரையிலான காலகட்டங்களில், கல்வித் துறை அதிகாரிகளின் தவறுகள் கண்டறியப்படும். மாணவர்களிடையே புரட்சிகள் வந்து நீங்கும். சாஃப்ட்வேர் துறையில் தேக்கநிலை மாறும். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும்.
அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சூரியன் வருவதால் விளை நிலங்கள் வலிமையடையும். இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும். 'ஆர்கானிக்’ காய்- கனிகள் உற்பத்தி அதிகரிக்கும். நீர்த் தேக்கங்களை பலப்படுத்த, பாதுகாக்க புது சட்டங்கள் அமலுக்கு வரும். நதிகளை இணைப்பதில் முதல் முயற்சி பலிதமாகும். கறுப்பு மற்றும் சாம்பல் நிற மேகங்கள் அதிகம் உற்பத்தியாகும்.
கரஜூ என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை ஆண் யானை வாகனத்தில் அமர்ந்து வருவதால், மக்கள் மனத்தில் நிம்மதி உண்டாகும். புயல் சின்னம் அதிகம் உருவாகும். அசைவ உணவுகளின் பயன்பாடு குறையும். மொத்தத்தில், இந்த ஜய வருடம் அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.