Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

27 மே 2011

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01


ராஜசங்கர்

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்
dalit_jogendranath_mandal_pakistan_law_minister“மகா மனிதன்”.
தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் - “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.
இவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.
மற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, வன்முறைக்குள்ளாகி அழிவதே வழக்கமாகிப் போனதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர்.
வரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுத் தெரிந்தவர்களிடம் பாடம் கற்றுக் கொள்வோம். இனியாவது.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [குறள்: 822]
என் அன்பிக்குரிய [பாகிஸ்தான்] பிரதமர் அவர்களுக்கு,
மிகுந்த வேதனை கொண்ட இதயத்தினாலும்  கிழக்கு வங்காளத்திலுள்ள* பின் தங்கிய இந்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் பணித்திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தினாலும் உங்களின் அமைச்சரவையில் இருந்து விலகவேண்டிய முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை எடுக்க இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் நிலவி வரும் சூழல் பற்றி விளங்கச் சொல்லுவதே சரியானதாக இருக்கும்.
1. என்னுடைய பதவி விலகலின் சமீபத்திய மற்றும் நெடுநாள் காரணங்களைச் சொல்லுவதற்கு முன் முஸ்ஸீம் லீக் உடன் இணைந்து பணியாற்றிய வேளைகளில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுவது உபயோகமாக இருக்கும். சில முக்கிய முஸ்ஸீம் லீக் பிரமுகர்கள் 1943 பிப்ரவரியில் என்னைச் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் வங்காள சட்டசபையில் மூஸ்ஸீம் லீக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டேன். 1943 மார்ச்சில் பஸல் ஹக் அமைச்சரவை கவிழ்ந்த பிறகு இருபத்தியோரு பட்டியல் வகுப்பு எம் எல் ஏ க்களுடன் நான் லீக்கின் சட்டமன்ற கட்சி தலைவர் ஆக இருந்த காஜா நஜிமுதீன் அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டேன். காஜா நஜிமூதீன் தன்னுடைய அமைச்சரவையை 1943 ஏப்ரலில் அமைத்தார். மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளை அமைச்சரவையில் சேர்ப்பது, வருடம் ஐந்து லட்சம் ரூபாயை பட்டியல் வகுப்பினரின் கல்விக்காக ஒதுக்குவது, பாகுபாடில்லாத மத பிரதிநிதித்துவத்தை அரசின் பணியிடங்களுக்கு அமல்படுத்துவது என்ற நிபந்தனைகளுடன் கூடியது எங்களுடைய ஒத்துழைப்பு ஆகும்.
2. இந்த நிபந்தனைகளைத் தவிர, முஸ்ஸீம் லீக்குடனான ஒத்துழைப்புக்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன. முதலாவதாக வங்காள முஸ்ஸீம்களின் பொருளாதார நோக்கங்கள் பட்டியல் வகுப்புடன் பெரும்பாலும் ஒத்துப்போயின. முஸ்லீம்கள் பொதுவாக விவசாயிகளாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரும் இருந்தனர். முஸ்லீம்களின் ஒருபிரிவினர் மீனவர்களாக இருந்ததைப்  போலவே பட்டியல் வகுப்பினரின் ஒரு பகுதியினரும் இருந்தனர். இரண்டாவதாக, பட்டியல் வகுப்பினரும் முஸ்ஸீம்களும் பொதுவாகவே கல்வியில் பின் தங்கி இருந்தனர். லீக்குடனும் அமைச்சரவையுடனும் என்னுடைய ஒத்துழைப்பு, மிகப்பெரிய அளவில் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதன் விளைவாக பெரும்பகுதி வங்காளர்களுக்கு இரண்டு தரப்பிலும் இருந்து பலனை கொண்டுவரும். கூடவே சிறப்புச் சலுகைகள் பெற்ற சக்தி வாய்ந்தவர்களின் அதீத உரிமைகளையும் அளவற்ற வசதியையும் குறைப்பதுடன் மதரீதியான அமைதியையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் தான் காரணம். இங்கு முதலமைச்சர் காஜா நஜிமுதீன், மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளைச் சேர்த்ததுடன் என்னுடைய சமூகத்தில் இருந்து மூன்று சட்டமன்ற செயலர்களையும் சேர்த்துக்கொண்டார் என்பது சொல்லப்படவேண்டும்.
ஸுஹ்ரவார்தி அமைச்சரவை
direct_action_day_bangladesh_islam3. 1946 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு ஹெச். எஸ். ஸுஹ்ரவார்தி, லீக் சட்டமன்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பின் 1946 ஏப்ரலில் அமைச்சரவையை அமைத்தார். சட்டமன்றத்தின் ஒரே பட்டியல் வகுப்பு உறுப்பினராக கூட்டு தொகுதியில் நான் வெற்றி பெற்றேன். ஸுஹ்ரவார்தி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாள் தான் கல்கத்தாவில் லீக்கின் நேரடி நடவடிக்கை நாளாக அனுசரிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது யூதர்கள் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்ட் போன்ற கொடூரத்தில் முடிந்தது.
நான் லீக்கின் அமைச்சரவையில் இருந்து நான் விலகவேண்டும் என இந்துக்கள் கோரினார்கள். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. எனக்குத் தினமும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஆனால், நான் என்னுடைய நிலையில் உறுதியாக இருந்தேன். கூடவே எங்களுடைய பத்திரிக்கையான ஜாக்ரனில் பட்டியல் வகுப்பினரை காங்கிரஸுக்கும் முஸ்ஸீம் லீக்குக்ம் இடையில் நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையை என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் வெளியிட்டேன்.
கடும் கோபத்தில் இருந்த இந்துக்கள் கூட்டத்தில் இருந்து என்னுடைய உயர்சாதி இந்து பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நான் காப்பாற்ற பட்டேன் என்பதையும் இந்த இடத்தில் தாழ்மையுடன் சொல்லவேண்டும். [ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த] கல்கத்தா கொடூரம் 1946 அக்டோபரில் நாகோளி கலவரத்தால் தொடரப்பட்டது. அங்கு பட்டியல் வகுப்பு இந்துக்கள் உட்பட நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் பல இந்துக்கள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்பட்டனர். என்னுடைய வகுப்பைச் சேர்ந்த பலர் உயிரை இழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். இந்த கலவரங்கள் நிகழ்ந்த உடன் டிப்பேரியா மற்றும் பெனி பகுதிகளுக்குச் சென்று கலவரம் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டேன்.
இந்துக்களின் சொல்லொணாத் துயரங்கள் என்னைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது; இருந்த போதிலும் முஸ்ஸீம் லீக்குடன் என்னுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்தேன். கல்கத்தா கலவரங்கள் நிகழ்ந்தவுடன் ஸுஹ்ரவார்தி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முயற்சியினால் மட்டுமே, நான்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மற்றும் நான்கு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களின் ஆதரவினாலும் காங்கிரஸ் வென்றிருக்கவேண்டிய சட்டமன்றம் காப்பாற்றபட்டது, இல்லையேல் முஸ்ஸீம் லீக் அமைச்சரவை தோற்கடிக்கப் பட்டிருக்கும்.
4. 1946 அக்டோபரில் எதிர்பாராத விதமாக எனக்கு ஸுஹ்ரவார்தி இருந்து இந்திய இடைக்கால அமைச்சரவையில் பங்கு பெறும் அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகும், என்னுடைய முடிவை சொல்ல ஒரு மணிநேரமே தரப்பட்டதாலும், நான் அமைச்சரவையில் பங்கு பெறுவதை ஒப்புக்கொண்டேன், கூடவே அது என்னுடைய தலைவர் பி. ஆர். அம்பேத்கர் என்னுடைய முடிவை நிராகரித்தால் நான் அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். நல்லவேளையாக அம்பேத்கர் தன்னுடைய அனுமதியை லண்டனில் இருந்து தந்தி மூலம் அனுப்பினார்.
தில்லிக்கு போய் சட்ட உறுப்பினராக பதவி ஏற்கப் போகும் முன் அப்போதைய கிழக்கு வங்காள முதல் அமைச்சரான ஸுஹ்ரவார்தியைச் சந்தித்து அமைச்சரவையில் என்னுடைய இடத்தில் இரண்டு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவும் இரண்டு சட்டமன்றச் செயலர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நியமிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்தேன்.
direct_action_day_bangladesh_islam_025. 1946 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இடைக்கால அமைச்சரவையில் சேர்ந்தேன். ஒரு மாத காலத்திற்குப் பிறகு கல்கத்தாவிற்கு சென்றேன். ஸுஹ்ரவார்தி என்னிடம் கிழக்கு வங்காளத்தில் சில பகுதிகளில் மத மோதல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக பட்டியல் வகுப்பினரான நாம சூத்திரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கோபால்கன்ஜ் துணைப்பிரிவில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸுஹ்ரவார்தி என்னிடம் அந்த பகுதிகளுக்குச் சென்று முஸ்ஸீம்களுகளிடமும் நாமசூத்திரர்களிடமும் பேசுமாறு கூறினார்.
உண்மை என்னவென்றால் திருப்பி தாக்க ஆயுத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் நாமசூத்திரர்கள் செய்திருந்தினர். நான் ஒரு டஜன் பெரிய கூட்டங்களில் பேசினேன். அதன் விளைவாக நாமசூத்திரர்கள் திருப்பிதாக்கும் எண்ணத்தை கைவிட்டனர். பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டது.
6. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேய அரசு ஜூலை மூன்றாம் நாள் அறிக்கையின் மூலம் இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவுகளை வெளியிட்டார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறிப்பாக முஸ்ஸீம் அல்லாத பகுதிகள் அதிர்ந்தன. உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டுமானால் நான் எப்போதுமே முஸ்ஸீம் லீக்கின் பாகிஸ்தானிய கோரிக்கையை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி வந்தேன். நேர்மையுடன் சொல்லவேண்டுமானால் இந்தியா முழுவதிலும் மேல்வர்க்க இந்துக்களின் ஆதிக்கத்தனத்திற்கு எதிரான முஸ்லீமகளின் வருத்தங்கள் நியாயமானவை என்று எண்ணிய போதிலும், என்னுடைய கருத்துப்படி பாகிஸ்தானின் உருவாக்கம் இந்த மதப் பிரச்சினையை எப்போதும் தீர்க்காது என நம்பினேன். இந்தப் பிரிவினையின் தவிர்க்க முடியாத விளைவாக ஒட்டு மொத்த நாடும் தொடர்ந்த அல்லது முடிவேயிராத வறுமை, கல்வியின்மை, கூடவே கீழ்நிலையில் இருக்கும் இரு நாடுகளின் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவர்கள் என்று எண்ணினேன். கூடவே பாகிஸ்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பின் தங்கிய மற்றும் முன்னேற்றம் அடையாத நாடாகவும் மாறுவிடும் என நினைத்தேன்.
லாகூர் தீர்மானம்
7. இப்போது பாகிஸ்தானை ஒரு தூய்மையான இஸ்ஸாமிய ஷரியத் சட்டத்தின் வழியும் இஸ்ஸாமிய வழிமுறைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யப்படும் நாடாக மாற்ற செய்யப்படும் முயற்சிகள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். இது முஸ்ஸீம் லீக் லாகூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்குப் பிறகு முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் செய்யும் செயல்களோடு ஒத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட பகுதிகள்,
. நிலபரப்பு ரீதியாக தொடர்ச்சியாக முஸ்ஸீம் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுத்  தேவைப்பட்டால் நிலப்பரப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, தனி நாடுகளாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் அமையும்படி பிரிக்கப்படவேண்டும்.
. அமல்படுத்த கண்டிப்பாகத் தேவைப்படும் உறுதிகள் அரசியல் அமைப்பு சட்டதில் குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு அவர்களின் மத, பண்பாட்டு, அரசியல், நிர்வாக மற்றும் இதர உரிமைகளை பாதுகாக்கபடுவதற்கான தெளிவான ஷரத்துகள் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தரப்படவேண்டும்.
மேற்கண்ட இரண்டு ஷரத்துகள்,
அஅ. வடமேற்கு மற்றும் கிழக்கு முஸ்ஸீம் பகுதிகள் இரண்டு தனிநாடுகள் ஆக அமைக்கப்படும்.
அஆ. அந்த இரண்டு நாடுகளும் சுதந்திரமாகவும் இறையாண்மை உடனும் இருக்கும்
அஇ. அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு கூடவே வாழ்க்கையின் எல்லா நிலைகளில் இருக்கும் தேவைகள் மதிக்கப்படும்
jogendra-nath-mandal-and-dr_-ambedkarஅஈ. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்கு தெளிவான ஷரத்துகள் சிறுபான்மையினரின் ஆலோசனையும் அளிக்கப்படும்
என்பதை விளக்கின.
இது என்னுடைய நம்பிக்கையை இந்த தீர்மானத்தின் மேலும் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் மேலும் உறுதிப்படுத்தியது. கூடவும் முகம்மது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 தேதி அரசியல் நிர்ணைய சபை உறுப்பினர் என்ற வகையில் செய்த அறிவிப்பின் மூலம் இந்துக்களும் முஸ்ஸீம்களும் சரிசமாக மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எனவும் உறுதிப்படுத்தினார். அப்போது மக்களை முழு உரிமை உடைய முஸ்ஸீம்கள் எனவும் இஸ்ஸாமிய நாட்டின் பாதுகாப்பிலும் முஸ்ஸீம்களின் பாதுகாப்பிலும் இருக்கும் திம்மிக்கள் எனவும் பிரிக்கவேண்டிய கேள்வியே ஏற்படவில்லை.
இந்த எல்லா வாக்குறுதிகளும் எல்லா நிலைகளும் உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடைய அனுமதியுடனும் முகம்மது அலி ஜின்னாவின் விருப்பங்களுக்கும் எதிராக சிறுபான்மையினர் [பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள்] கொடுமைகளும் அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்.
(கடிதம் கற்றுத் தரும் பாடம் தொடரும்….)

26 மே 2011

பால் தாக்கரேவைக் கொலை செய்ய பாக்.கின் ஐஎஸ்ஐ திட்டமிட்டது-ஹெட்லி

சிகாகோ: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவைப் படுகொலை செய்ய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டிரு்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் உளவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.

சிகாகோ கோர்ட்டில் அவன் அளித்த வாக்குமூ்லத்தில் இதைக்குறிப்பிட்டுள்ளான். மேலும் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பாவுக்கும் ஐஎஸ்ஐ பெரும் உதவிகளைச் செய்ததாகவும் ஹெட்லி கூறியுள்ளான்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கனடிய பாகிஸ்தானியரான தஹவூர் ராணா, அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராணா மீதான வழக்கின் விசாரணை சிகாகோ கோர்ட்டில் தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொண்டு ஹெட்லி வாக்குமூலம் அளித்து வருகிறான். ராணாவுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள், பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கூறி வருகிறான்.
David Headley
2வது நாளாக ஹெட்லி கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தவை விவரம் வருமாறு:

சிவசேனாவைக் கொலை செய்ய லஷ்கர் இ தொய்பாவும், ஐஎஸ்ஐயும் கூட்டாக திட்டமிட்டிருந்தனர். இந்த சதித் திட்டத்தில் நானும் பங்கு பெற்றிருந்தேன்.

மும்பையில் நடந்த தாக்குதலுக்கு முன்பாக நான் மும்பைவந்திருந்தபோது, சிவசேனா தலைமை அலுவலகத்திற்கும் சென்று உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தேன். சிவசேனா ஒரு தீவிரவாத அமைப்பு என்பது எங்களது கருத்து. இதனால்தான் அதன் தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.

எந்தவித சந்தேகமும் இல்லாமல், நான் சிவசேனா தலைமையகத்தை உளவு பார்த்தேன். 

என்னை பாகிஸ்தானிலிருந்து இயக்கியவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த மேஜர் இக்பால், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சஜீத் மிர் மற்றும் ராணாவும் எங்களுடன் இணைந்திருந்தார்.

நாங்கள் நால்வருமே சந்தித்து பேசிக் கொண்டபோது சிவசேனா மீதான எங்களது துவேஷத்தை வெளிப்படுத்தினோம். 

சிவசேனாவின் செய்தித் தொடர்பாளரா ராஜாராம் ரெக்கியுடன் நான் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் சிவசேனா குறித்த தகவல்களை அறிய முயன்றேன்.

எனக்குக் கிடைத்த தகவல்களை நான் ராணா, மேஜர் இக்பால், சஜீத் மிர் ஆகியோருக்கும் தெரிவித்தேன். 

பின்னர் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் நான் பாகிஸ்தான் திரும்பினேன். அங்கு மேஜர் இக்பாலையும், சஜீத்தையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சந்தித்தேன்.

பாலா (பால்தாக்கரே) , ராஜாராமின் பாஸுடன் (உத்தவ் தாக்கரே) அமெரிக்கா வரவுள்ளதாகவும், அப்போது நமது திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சஜீத்துக்கு ஒரு இமெயிலும் பின்னர் அனுப்பினேன்.

சிவசேனா ஆட்களைக் கொல்வது குறித்து நானும், சஜீத்தும் விரிவாக விவாதித்தோம். மேலும் எங்களது திட்டத்திற்குத் தேவையான தகவல்களை ராஜாராமிடமிருந்து நிறைய கறக்கலாம் என்றும் சஜீத்திடம் தெரிவித்தேன். 

மேலும் இத்திட்டம் தொடர்பாக ராணா, இக்பால், சஜீத்துக்கு நான் பலமுறை இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுடன் நானும், ராணாவும், நேரடித் தொடர்புகளை வைத்திருந்தோம். 

(ஹெட்லி கைப்படஎழுதியிருந்த டைரி, அதில் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்ததை ஆதாரமாக எப்பிஐ கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் இருவரின் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இருவருருக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது. இந்த இருவரும் மேஜர் இக்பால், சஜீத் மிர் என்று தெரிகிறது.

இந்த டைரியில், லஷ்கர் இ தொய்பாவின் இன்னொரு பெயரான ஜமாத் உத் தவா அமைப்பின் முக்கியப் புள்ளியான அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவன், லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்தின் உதவியாளர் ஆவான். இந்த டைரியில், வாசி, ஜஹாங்கீர், இனாம், தெஷீன், தாஹிர், மன்சூர், காலித் ஆகியோரது பெயர்களையும் இனிஷியல்களாக குறிப்பிட்டுள்ளான் ஹெட்லி.)

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐஎஸ்ஐ

2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இலக்குகளில் மும்பை சர்வதேச விமான நிலையத்தையும் சேர்க்க பாகிஸ்தானிலிருந்து எனக்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது பின்னர் விடுபட்டு விட்டது.

தாக்குதல் சம்பவத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு ஜூன் மாதம், லாகூரில் நான் அவரை சந்தித்தபோது தனது ஏமாற்றத்தை என்னிடம் தெரிவித்தார். நான் அவரை சமாதானப்படுத்தினேன்.

இக்பாலை நான் சந்தித்தபோது தாக்குதல் தொடர்பான உளவுப் பணிகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர்தான் தாக்குதல் நடத்தப்போகும் பகுதிகள் குறித்த பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவித்தார். விமான நிலையத்தை சேர்க்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தாலும் கூட பட்டியலுக்கு அவர் ஒப்புதல் அளித்தார். 

முன்னதாக, நான் இக்பாலை சந்திப்பதற்கு முன்பு சஜீத்தை சந்தித்தேன். அப்போது இந்தப் பட்டியலை அவர்தான் என்னிடம் கொடுத்தார். அதில் யூத மையமான சபாத் ஹவுஸும் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தின் முக்கிய உளவு மையம் இது என்பதால் இதையும் சேர்த்ததாக சஜீத் கூறினார்.

என்னிடம் கொடுத்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு மீண்டும் ஒருமுறை சென்று பார்வையிட்டு இறுதி செய்யுமாறு என்னிடம் கூறினார் இக்பால். இதையடுத்து அவருடனும், சஜீத்துடனும் நான் பலமுறை ஆலோசனை நடத்தினேன். அதன் பின்னர் நான் மும்பை சென்றேன்.

தாக்குதல் இடங்கள் குறித்து நான் வேறு யாருடனும் ஆலோசிக்கவில்லை. இருப்பினும் பாஷாவிடம் மட்டும் நான் இதுகுறித்து விவாதித்தேன். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். வாழ்த்தும் தெரிவித்தார்.

அதேபோல லஷ்கர் இ தொய்பாவின் தளபதியான ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் நான் சந்தித்தேன். முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறி வாழ்த்தினார் என்று ஹெட்லி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சிவசேனா மறுப்பு

இதற்கிடையே, ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் தங்களது கட்சியில் பிஆர்ஓ யாரும் இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராத் கூறுகையில், எங்களது கட்சியில் ராஜாராம் ரெக்கி என்ற பெயரில் உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். ஆனால் இந்தப் பெயரில் பிஆர்ஓ யாரும் இல்லை.

இந்த ராஜாராமும் தவறானவரா என்பது எங்களுக்குத் தெரியாது.நாங்கள் அவரை விசாரிக்கப் போவதில்லை. அதை செய்ய வேண்டியது உரிய அதிகாரிகள்தான்.

எங்களது கட்சிஅலுவலகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்கா உள்பட, பலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருவது வழக்கமானதுதான். கட்சி குறித்த ஆய்வுக்காக வர விரும்புவதாக வெளிநாட்டினர்தெரிவிப்பார்கள். இருப்பினும் அவர்களின் பின்னணி குறித்து விசாரித்த பிறகுதான் நாங்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கிறோம்.

அப்படித்தான் ஹெட்லியும் எங்களது அலுவலகத்திற்கு வந்து போயுள்ளார். ஆனால் அவரது உண்மையான நோககம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது என்றார்.

மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானிடம், ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதுகுறித்து மத்திய அரசிடம் தகவல் கோரியுள்ளோம். அமெரிக்காவில் விசாரணை நடந்து வருகிறது. எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்த பின்னர் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

14 மே 2011

தன்மானத் தமிழன்..


14 May 2011 | அச்சிட அச்சிட

cartoon-kagidha-odam
கார்ட்டூன்: ஆர்.செ.
… மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ “குடும்ப ஆட்சி’ என்கிற அருவருப்பான விஷயம்தான்.
… தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
… பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன்.
தன்மானத் தமிழன்: தினமணி தலையங்கம் (நன்றி: தமிழ் ஹிந்து இணையம்)

10 மே 2011

பின் லேடனை விட மாபெரும் அபாயம்


10 May 2011 | அச்சிட அச்சிட

osamaசர்வதேச பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒமாபா வென்று விடலாம்.
பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது.
பின்லேடன் யார்?
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு செல்வந்தர் வீட்டில் (1957) பிறந்த பின்லேடன் பயங்கரவாதி ஆனது எப்படி? கட்டுமான நிறுவனம் நடத்திவந்த ஒசாமாவை பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளியது யார்? கண்டிப்பாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் அதில் பங்குண்டு.
சோவியத் ரஷ்யா என்ற மாயையான கம்யூனிச வல்லரசு அமெரிக்காவுக்கு போட்டியாக இருந்த காலகட்டத்தில், அண்டையிலுள்ள நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திவந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ) பல நிழல் நடவடிக்கைகளை அரங்கேற்றியது. அதில் ஒன்று, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு எதிராக, முஜாகிதீன்களை வளர்த்துவிட்டது. அவர்களுக்கு உதவ அமெரிக்காவால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் (1979) தான் ஒசாமா பின் லேடன். இவரது உதவியுடன் முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்தது. 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா படைகளை வாபஸ் பெற வேண்டியதானது; தவிர அதன் வல்லரசு பிம்பமும் தகர்ந்து பல நாடுகளாக சிதறுண்டது. இதனிடையே அல்குவைதா அமைப்பை முஜாகிதீன்களின் உதவியுடன் துவங்கினார் பின் லேடன் (1988).
osama
ஆப்கானிஸ்தான் பணி முடிந்தவுடன் ஒசாமாவின் கவனம் ஈராக் மீது திரும்பியது. குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது போர் தொடுத்த (1990) அமெரிகாவுக்கு சவூதி அரேபியா ஆதரவளித்தது. முஸ்லிம்களின் புனித நகரங்களான மெக்கா, மெதினா அருகே அமெரிக்கப் படைகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பின் லேடன், சவூதி அரச குடும்பத்திற்கு எதிராகவும் சதி செய்தார். அதன் விளைவாக அமெரிக்காவின் அதிருப்திக்கு ஆளான பின் லேடன் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு சூடான் (1991) சென்றார். தன்னால் வளர்த்துவிடப்பட்ட கையாளே தனக்கு எதிராக வளர்ந்து நிற்பது கண்டு சி.ஐ.ஏ அதிர்ந்தது. அவரை ஒழிக்க முயற்சிகள் துவங்கின.
1992 ல் ஏமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு பின் லேடனின் சுயரூபத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நியூயார்க் உலக வர்த்தக் மையத்தில் தாக்குதல் (1993), கென்யா, தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் (1995), ஏமன் கப்பல் மீது தாக்குதல் (2000) என அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீதான பின் லேடனின் தாக்குதல் நடந்தது. ரஷ்யாவிற்கு எதிராக இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரால் பயங்கரவாதிகளை வளர்த்துவிட்ட அமெரிக்காவுக்கு எதிராக, அதே இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் தாக்குதல்களை பின் லேடன் நடத்தியது. அமெரிக்க நெருக்குதலால் சூடானிலிருந்து துரத்தப்பட்ட பின் லேடன், ஆப்கானிஸ்தானில் (1996) தஞ்சம் அடைந்தார்.
2001, செப்டம்பர் 11 - உலக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்று தான் 4 விமானங்களைக் கடத்தி உலக வர்த்தக மைய கட்டடங்களையும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனையும் தாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பின் லேடன். அந்த நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தன்னால் தான் திட்டமிடப்பட்டது என்று அறிவித்தார் பின் லேடன் (2004).
இதற்கு பழிவாங்க அலைந்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுக்கு எதிராக போராடும் முஜாகிதீன்களையும் அல்குவைதா அமைப்பினரையும் ஒழிக்க ராணுவ நடவடிக்கை தொடங்கிய அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள், அங்கு பல அத்துமீறல்களில் ஈடுபட்டன. இந்தப் போரால் ஆப்கானிஸ்தான் சின்னாபின்னமானது. இப்போரில் பாகிஸ்தானையும் தனது கூட்டாளியாக்கிக் கொண்டது அமெரிக்கா.
கடைசியாக, 10 ஆண்டு தேடலுக்குப் பிறகு, பின் லேடனை பாகிஸ்தானிலுள்ள அப்போதாபாத்தில் உள்ள வசதியான வீட்டில் கமாண்டோ நடவடிக்கை மூலமாக சுட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா (2.5.2011). பேயை வளர்த்து விடுவானேன்? பிறகு அதை அழிக்க பேயாட்டம் ஆடுவானேன்?
நடந்தது என்ன?
உண்மையில் பின்லேடனின் கொலையில் பல மர்ம முடிசுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறப்பட்ட பின்லேடன் அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா பல ஆண்டுகளாகவே தகவல் கொடுத்து வந்துள்ளது. ‘பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறிவிட்டது; அதற்கு ஆயுத உதவி செய்யாதீர்கள்’ என்றும் இந்தியா எச்சரித்து வந்துள்ளது. அப்ப்போதேல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்கா இப்போது அதிரடியாக செயல்பட்டுள்ளது.
இப்போதுதான் சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது தெரிந்ததா? உண்மை அதுவெனில், அதன் உளவுத்திறமையே கேள்விக்குறியாகும். ஏற்கனவே தெரிந்தது எனில், அமெரிக்க அரசின் நம்பகத் தன்மை கேள்விக்குறி ஆகும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பதுங்கி இருப்பது இந்தியாவுக்கு தெரிந்து, தகவல் கொடுக்க முடியும்போது, அமெரிக்கா இப்போது தான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்பதே பல கேள்விகளை எழுப்புகிறது. உண்மையில் இது போலி மோதலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் சரிந்துவரும் தனது செல்வாக்கை உயர்த்த பராக் ஒபாமா நடத்திய நாடகமாகவும் இது இருக்கலாம்.
பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் குறித்த வீடியோ பதிவு, புகைப்படங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படாதது ஏன்? அவரது உடல் அவசர அவசரமாக கடலில் மூழ்கடிக்கப்பட்டது ஏன்? இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பிறர் யார் என்ற விபரங்களை இதுவரை அமெரிக்க ராணுவம் வெளியிடாதது ஏன்?
obama_announcement
எந்த அரசும் தன் மீது அதிருப்தி ஏற்படும் தருணங்களில் இத்தகைய சாகசங்களில் இறங்குவது வழக்கமே. சந்தன கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நாம் ஒப்பு நோக்கலாம். ஆனால், பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்று அமெரிக்கா சொல்வதை எப்படி நம்புவது? இதைவிட பெரிய பொய்யர் பாகிஸ்தான் நாடு. பின் லேடன் தங்கள் நாட்டில் தங்கி இருந்ததே தனக்கு தெரியாது என்று சாதிக்கிறது, தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தான். இந்த பொய்யை ஏன் அமெரிக்க சகித்துக் கொண்டிருக்கிறது?
பாகிஸ்தானின் காகுல் ராணுவ பயிற்சி மையத்தின் அருகில் உள்ள வசதியாகவும் மிக பாதுகாப்பாகவும் கட்டப்பட்ட கட்டடத்தில் தங்கி இருந்தது யார் என்று பாகிஸ்தான் அரசுக்கு தெரியவில்லையாம். அதை அமெரிக்க நம்புகிறதா? நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் தெருவில் செல்லும் ஒருவரைக்கூட தொலைதொடர்பு செயற்கைக்கோளால் படம் எடுக்க முடிவது சாத்தியமான இந்நாளில், பாகிஸ்தான் சொல்வதையும் அதை ஏற்கும் அமெரிக்காவையும் இந்த உலகம் எப்படி நம்புகிறது?
உண்மையில் பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பது அமெரிக்காவுக்கு தெரிந்தே இருந்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் ஆதரவின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உணவும் ஆயுதங்களும் எரிபொருளும் அனுப்புவது சிரமம் என்பதால்தான் அமெரிக்கா அமைதி காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் போருக்கு உதவுவதற்காகவே பாகிஸ்தானுக்கு பல்லாயிரம் கோடி ராணுவ உதவி அளித்து வருகிறது அமெரிக்கா என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், காந்தகார் விமானக் கடத்தல், அக்ஷர்தாம் கோயில் தாக்குதல், மும்பை படுகொலைகளில் தொடர்புடைய அதி பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் தான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க பாணியில் பாகிஸ்தானில் நுழைந்து சுட்டுக் கொல்ல இந்திய ராணுவத்தை இதே அமெரிக்கா அனுமதிக்குமா? பிறிதொரு நாட்டில் சாவகாசமாக ஹெலிகாப்டரில் சென்று இறங்கி ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு மட்டும் விசேஷ உரிமை கொடுத்தது யார்? ஆரம்பத்தில் இதை மழுப்பிய பாக். அரசு பிறகு இதைக் கண்டிக்கிறது; ஆயினும் ஏன் அமெரிக்காவுடன் நட்பு கொண்டாடுகிறது?
அந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு சென்று சேர்க்கிறது. இதன்மூலமாக ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்கிறது அமெரிக்கா. ஒன்று, பாகிஸ்தானை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; இரண்டு, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்வது; அதன்மூலமாக இந்திய துணைக்கண்ட பகுதியில் வலுவாக காலூன்றுவது. இந்த அமெரிக்காவைத் தான் நமது தலைவர்கள் நட்பு நாடு என்று இறுமாந்து போகிறார்கள்!
திசைமாறும் சர்வதேச அரசியல்
பின்லேடன் கொல்லப்பட்டது ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்ற தத்துவப்படி அமைந்து விட்டது (நன்றி: திமுக தலைவர் கருணாநிதி). இது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த சம்பவத்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் (திக்விஜய் சிங், முலாயம்) இதிலும் முஸ்லிம் மக்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறத் துடிப்பது அசூயையாக இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கும் இந்த கொள்ளையர்களை தண்டிப்பது யார்?
பின் லேடனின் சாவு, இத்துடன் நின்று விடாது என்பது மட்டும் திண்ணம். ஏனெனில், அவர் வளர்த்துவிட்ட அல்குவைதா பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையை கிறிஸ்தவ அரசின் நடவடிக்கையாக சித்தரித்து ‘ஜிகாத்’ நடத்தவும், அதன் பலனாக உலகில் அமைதி மீண்டும் குலையவும் பல வாய்ப்புக்கள் உள்ளன. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பல்கிப் பெருகியுள்ள நமது நாடு தான். ஒசாமாவை ஆதரித்து வளர்த்துவிட்ட அமெரிக்கா போலவே, இங்கும் இஸ்லாமிய பயங்கர வாதிகளை வளர்த்துவிட மதச்சார்பற்ற அரசியல்வியாதிகள் முண்டி அடிக்கிறார்கள். அதற்கான பலனை பொதுமக்கள் தான் அடைய வேண்டி இருக்கும்.
உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் வெகுண்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாகவே பின் லேடன் மரணத்தைக் காண வேண்டும். இந்த நிகழ்வு, அமெரிக்காவின் பிடியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழுமானால், இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். ஆனால், நமது அரசோ, நாட்டை நாசாமாக்கும் பயங்கரவாதிகளைவிட கேவலமான நிலையில் இருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

03 மே 2011

அதிராமபட்டினத்தில் தொடங்கியது கிருஸ்த்தவ மதமாற்றம்..

அதிராமபட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு விடுமுறை நாட்களில் கரையூர்தெரு, சேதுரோடு, வெக்காளியம்மன் கோவில் தெரு, துரெளபதையம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களை சேர்ந்த ஹிந்து குழந்தைகள் விளையாடுவது வலக்கம். இவ்வாரு 03/05/2011 செவ்வாய் கிழமை காலையும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேனில் ஒரு கிருஸ்தவ பாதிரி உட்பட 4 இளைஞர்களும் இருந்த வேன் அந்த குழந்தைகளின் அருகில் நின்றது. அந்த வேனிலிருந்து பாதிரி இறங்கி குழந்தைகளை நோக்கி சென்றார். அவர் குழந்தைகளுக்கு கையிலிருந்த இனிப்புகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார். சில நிமிடம் கலித்து குழந்தைகள் அனைவரும் வேனில் ஏரினர். இதனை கண்ட கரையூர்தெருவை சேர்ந்த ஒருவர் கிராம தலைவருக்கு தகவல் கொடுக்க கிராம தலைவர் விரைந்து வந்து அந்த வேனை மடக்கி பிடித்தார். இந்த தகவல் இந்துமுன்னணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு தெரிந்து அவர்களும் அங்கு விரைந்தனர். பாதிரியாரை விசாரித்தபோது அவர் அனைக்காடு சர்ச்சை சேர்ந்தவர் என தெரிந்தது. அவரிடம் மிக கண்ணியமான முறையில் எடுத்து கூறி அனுப்பி வைத்தனர் பொதுமக்கள். மேலும் அந்த குழந்தைகளிடம் கேட்டபோது                                       அவர்கள் விடுமுறை நாட்களில் தினமும் காலை வந்து போதனை வகுப்பு எடுப்பதாகவும்,ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் வந்து தங்களை வேனில் ஏற்றி சென்று ஏசுவை வணங்க செய்ததாகவும், விட்டில் உள்ளவர்களிடம் எசுவின் பெருமைகளை கூறுமாரு பனித்ததாகவும், இலவசமாக கல்வி தருவதாகவும் கூறியது தெரியவருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம நிர்வாகியுடன் இணைந்து இந்து முன்னணி அன்பர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று விழிப்புனர்வுடன் இருந்து குழந்தைகளின் எதிர்காலத்தை காக்குமாரு கேட்டுக்கொள்ளபட்டது.மேலும் அதிராமபட்டினம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அழிக்கப்பட்டது.