Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

25 ஜூலை 2011

தமிழக பயங்கரவாதிகள் 11 பேர் எங்கே?



மதிவதணன்.க


கோவை: தமிழகத்தில், கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகள், மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய 11 பயங்கரவாதிகள், பல ஆண்டுகளாக போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். மும்பையில் சமீபத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு மற்றும் மத்திய உள்துறையின் எச்சரிக்கை தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் தமிழக பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடிப்பது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில், கடந்த 13ம் தேதி தாதர், ஜாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள், அப்பாவி மக்கள் 20 பேரை கொன்றனர். மும்பை மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க முடியாமல் தடுமாறும் மத்திய உள்துறை, பிற மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும், பயங்கரவாத வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்யுமாறும் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த உஷார் தகவல்கள் தமிழக போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் அவ்வப்போது நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய 11 பயங்கரவாதிகள் போலீசாரிடம் பிடிபடாமல் இன்றுவரை தலைமறைவாகவே உள்ளனர். இவர்களில் சிலர் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், öளிநாடுகளுக்கும் தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நபர்கள் மீண்டும் ஒருங்கிணைந்தோ அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதலின் பேரிலோ தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் அபாயமிருப்பதாக புலனாய்வு ஏஜன்சிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இதனால், இவர்களை எப்படியாவது கைது செய்தாகவேண்டிய நிர்பந்தத்தில் தமிழக போலீசார் உள்ளனர்.

தலைமறைவு பயங்கரவாதிகளை பற்றிய விபரம்:


முஜிபுர் ரகுமான்: கோவை, போத்தனூர், நூராபாத், ஷேக் முகைதீன் சாகிப் வீதியைச் சேர்ந்த இவன், கோவை, பெரியகடைவீதி போலீஸ் எல்லைக்குள் கடந்த 1991ல் நடந்த மத ரீதியான கொலை வழக்கிலும், 1997ல் உடுமலையில் நகராட்சி வணிக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும், 1998 பிப்.,14ல் கோவை நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவன். இவன் மீது கொலை, வெடிமருந்து சட்டப்பிரிவுகளில் கோவை மற்றும் உடுமலை போலீசில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனை பற்றி தகவல் அளிப்போருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

முஸ்டாக் அகமது: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, எம்.பி., வீதியைச் சேர்ந்த இவன், தடை செய்யப்பட்ட "அல்-உம்மா' அமைப்பின் தீவிர உறுப்பினர். கடந்த 1992ல் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஸ்ரீதரை சென்னையில் கொலை செய்ய முயன்றது, 1993ல் சென்னை, சேத்துப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவைத்து 11 பேரை கொலை செய்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவன். கடந்த 1992 முதல் தலைமறைவாக இருக்கும் இவனது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.




சாதிக் (எ) டெய்லர் ராஜா: கோவை, தெற்கு உக்கடம், லால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவன், "அல் - உம்மா' இயக்கத்தின் முக்கிய நபர். கடந்த 1996ல் கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள டி.ஐ.ஜி., அலுவலகத்துக்குள் கூட்டாளிகளுடன் நுழைந்து சிறை டி.ஐ.ஜி.,யை கொல்ல முயன்றான். 
தடுக்க முயன்ற சிறைக்காவலர் பூபாலன் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். அடுத்து, 1997ல் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் கொல்லப்பட்டார். இவ்விரு வழக்குகளிலும் டெய்லர் ராஜாவை போலீசார் தேடிவந்தனர். எனினும் பிடிபடவில்லை. இந்நிலையில், கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி.,- எஸ்.ஐ.டி., போலீசார், டெய்லர் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். பல இடங்களிலும் தேடியும் தகவல் இல்லாததால், இவனது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது.



அபுபக்கர் சிக்திக்: நாகபட்டினம், நாகூரைச் சேர்ந்த இவன், "அல் - உம்மா' பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர். 
கடந்த 1995ல் நாகபட்டினம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், திருச்சி மாவட்ட பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஜீவரத்தினம் ஆகியோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொல்ல முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவன். விருதுநகரைச் சேர்ந்த அகமது அம்மான், கோவை நகரைச் சேர்ந்த ஜாகிர்உசேன் ஆகியோருடன் வெடிகுண்டு தயாரித்து, கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்து தகர்த்தவன். கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவன். போலீசார் பல இடங்களில் தேடியும் அபபூக்கர் சித்திக் பிடிபடாததால், இவனது தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது. மும்பைக்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.


அஷ்ரப் அலி: கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவன், கேரளாவில் செயல்படும் ரகசிய பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர். கடந்த 2002ல், கோவை, ஆர்.எஸ்.,புரத்தைச் சேர்ந்த சுல்தான் மீரான் என்பவன் இந்து அமைப்பினரால் வெட்டிக்கொல்லப்பட்டான். இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் முருகேசன் பி.கே.,புதூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அஷ்ரப் அலி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான்.


அயூப்(எ) அஷ்ரப் அலி: கோவை, செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த இவன், முன்பு "இஸ்லாமிக் டிபன்ஸ் போர்ஸ்' என்ற இயக்கத்திலும், பின்னர் "அல் -உம்மா' இயக்கத்திலும் அங்கம் வகித்தவன். கடந்த 1997ல், பாண்டியன், சேரன் மற்றும் ஆலப்புழா எக்ஸ்பிரல் ரயில்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்வங்களில் தொடர்பு உள்ளவன். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 10 பயணிகள் பலியாகினர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அயூப், கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளான். இவர் மீது ஈரோடு, திருச்சி, திருச்சூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்கள், சென்னை கே.கே.நகர், வேப்பேரி, புளியந்தோப்பு, ராயப்பேட்டை, அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்களில் வெடிகுண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவனது தலைக்கும் தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், தகவல் இல்லை.


இப்ராகிம்: கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவன், கடந்த 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் முருகேசன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி. போத்தனூர் போலீசாரால் "தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகிறது.




குஞ்சுமுகமது(எ) கனி: கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், ராமபுரம், பனங்கங்கரா பகுதியைச் சேர்ந்த இவன், கடந்த 1998, பிப்., 14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவன்.


முகமது அலி (எ) யூனுஸ்: நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், இப்ராகிம் தாய்க்கா வீதியைச் சேர்ந்த இவன், கடந்த 1999ல் சென்னை, சிறைத்துறை ஐ.ஜி., அலுவலக குண்டுவெடிப்பில் தொடர்புடையவர். சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவன் மீது பல்வேறு வெடிகுண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.





நூகு(எ) ரஷீத்: கேரளா மாநிலம், கோழிக்கோடு, திருவன்னு பன்னியங்கரா பகுதியைச் சேர்ந்த இவன், கடந்த 1998, பிப்.,14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவன். பல ஆண்டுகளாக தேடியும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரசூல் மைதீன்: நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவன், மேலப்பாளையத்தில் கடந்த 1997ல் நடந்த மத ரீதியான இரு கொலைகளில் தொடர்புடையவன்.     இந்நபர்களை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தொடர்பாக, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.




கைது செய்ய முடியாதது ஏன்?கோவை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தின் தலைமறைவு பயங்கரவாதிகளில் சிலர் 10 ஆண்டுகளாகவும், மேலும் சிலர் 20 ஆண்டுகளாக கூட போலீசாரிடம் பிடிபடாமல் உள்ளனர். இதற்கு காரணம், அந்நபர்களின் "லேட்டஸ்ட் போட்டோ' உள்ளிட்ட விபரங்கள் போலீசார் வசம் இல்லை. கைவசம் இருக்கும் சிலரது போட்டோக்களும் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. இவற்றை ஆதாரமாக வைத்துக்கொண்டு தேடத் துவங்கினால் ஏமாற்றமே மிஞ்சும். 
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முன்பு விசாரித்த சி.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ.டி., போலீசார், அவ்வழக்கில் தொடர்புடைய 167 பேரை கைது செய்து, முக்கிய குற்றவாளிகளுக்கு சிறப்பு கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தந்தனர். எஸ்.ஐ.டி., போலீசாருக்கு போதிய படை பலமும், பொருளாதார பலமும் வழங்கப்பட்டிருந்த போதே, தலைமறைவு பயங்கரவாதிகள் சிலரின் பதுங்கு மிடத்தை கண்டறிந்து கைது செய்ய முடியவில்லை. தற்போதும் கோவையில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ.டி., பிரிவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் மட்டுமே உள்ளனர். தலைமறைவு பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிப்பதற்கான வசதி, வாய்ப்புகளும் கிடையாது. இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.     நன்றி: தினமலர் நாளேடு

10 ஜூலை 2011

தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ளது தொக்காலிக்காடு என்ற சிரிய கிராமம். அதிவீரராமபட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவிரியின் கடைமடை பகுதியான இந்த கிராமத்தில் சுமார் 400 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவிகிதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லீம்களால் கடந்த 12 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக்கொடுமைகளை கேட்டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.
                                                                                              அதிவீரராமபட்டினம் பேரூராட்சின் அன்றைய துணைத்தலைவராக இருந்தவர் M.M.S.அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலுக்கு அருகில் சர்வே எண்-153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977 ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்க்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைத்து ஹிந்து சமூகத்தினருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பினத்தை தஹனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தை ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் உறுத்தியது. ஒதியமரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாமல் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை 05/05/1999 இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர் அப்துல் வஹாப்பும் அவரது பயங்கரவாத கும்பழும்.
                                                                          மறுநாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததை பார்த்த அவர்களின் மணம் கொதிப்படைந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட பிரதினிநியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 06/05/1999 அன்று ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோவிலைக் கட்டக்கோரியும் போலீசில் புகார் செய்தனர்.


    அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். இக்குழுக்களுக்கு இடையே அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலை பெரிதாக கட்டக்கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமரிசயாக கொண்டாடக்கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக்கூடாது என முஸ்லீம்கள் நிபந்தனைகள் விதித்தனர். எங்கே கோவில் நம்மை விட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த குள்ளநரிக் கயவர்களின் நிபந்தனைகளை ஏற்ப்பதாக உர்தியலித்தனர். அதன்படியே ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை கட்டி , சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
      முனீஸ்வரர் கோவில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு என்றாவது ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லீம் கயவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தினால் அதிகாரவர்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரமிப்பு கோஸ்டியினர் போலிசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில்  தொக்காலிக்காடு கிராமத்திர்க்குள் நுலைந்த நூற்றுக்கணக்கான போலீசார், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் வீடுபுகுந்து அடித்து துவைத்தனர். ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமை செய்தனர்.


தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் இந்த ஹிந்து விரோத கொடுமைகளை கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்   முனீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதமிருங்கள் என்று ஆலோசனை கூறினார்.  அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபால் மனைவியும், அவ்வூர் ஊராட்சிமன்ற தலைவியுமான திருமதி.செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச்சென்றனர். அவர்களை கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்புகை குண்டுகள் வீசும் (வஜ்ரா) வாகனங்களுடன் காத்திருந்தனர். போலிசார் செல்வராணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறை வாசத்திற்க்கு பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற போராடியவர்களை கைது செய்தனர்.


                                                                        தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற தலைவி திருமதி.செல்வராணி ஜெயபால் மாவட்ட ஆட்சி தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12/12/2005 அன்று மீட்கப்போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்க்குச் சொந்தமானது என்பதற்கு அடையலமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையை செய்த பஞ்சாயத்து தலைவர் செல்வராணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. அவர் மீது கொலை முயற்சி(307) வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள்  சிறைபட்டு கிடக்க, அவர்களின் 3 பெண் குழந்தைகளும் பொங்கள் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள் போல தவித்தனர்.


 செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லீம் பெண், முஸ்லீம்களையா எதிர்க்கிராய்? என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறால்.                      தங்கள் பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற உறுப்பினர் புஷ்பவள்ளியும் சிறையில் 45 நாட்கள் பல சொல்லோனாத்துயரத்திற்கு ஆலாகியுள்ளார். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவர்கள் ஜாமீனில் வரமுடிந்தது.


  பணபலத்தாலும், அடியால் பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லீம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூலியங்களை தொக்காலிக்காடு மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலையத்தையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டேதீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி.செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோவிலை மட்டுமல்ல, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.....
(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999-லிருந்து 12 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லீம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

06 ஜூலை 2011

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி


கொச்சி:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.


கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.

கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.

பத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.