Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

05 செப்டம்பர் 2011

அதிவீரராமபட்டினத்தில் சிறப்பு மிக்க 22-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஹிந்து எழுச்சி ஊர்வலம்..


ஐய்யப்பன்.க
அதிவீரராமபட்டினம்: தமிழகத்தில் திண்டுக்கள், கோவை, முத்துப்பேட்டை ஆகிய சிறப்பு வாய்ந்த ஊர்களின் பட்டியலில் இவ்வாண்டு அதிவீரராமபட்டினம் முதலாவதாக இடம்பெற காரணமாக அமைந்தது 22-வது ஆண்டாக நடத்தப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலம். அது யாதெனில்.... ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து முன்னணியினரால் மாநிலம் முழுவதிலும் வெகு விமரிசையாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மேற்கண்ட இடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவ்வாண்டு இந்த பட்டியளில் நமதூர் அதிவீரராமபட்டினம் முதலிடத்தை பெற்றுள்ளது. காரணம் ஒன்றுபட்ட ஹிந்து சக்தியின் வெளிப்பாடாக இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3000க்கும் அதிகமான ஹிந்து இளைஞர்கள் பங்கேற்று சிறப்பித்ததேயாகும். 

அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து சமைய மக்கள் இணைந்து நடத்திய 22-ம் ஆண்டு விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் ஸ்ரீ கர ஆண்டு ஆவணி திங்கள் 18-ம் நாள் 04/09/2011 அன்று நடைபெற்றது. இதற்க்காக விநாயகர் 9-அடி,8-அடி,5-அடி உயரங்களில் நான்கு விநாயகர் சிலைகள் திருச்சி ஹிந்து முன்னணி காரியாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு 31/07/2011 அன்று காலை 9.15 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கிருந்து சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோயில்), வாழக்கொள்ளை( பெருமாள் கோயில்) ஆகிய பகுதிகளுக்கு மூன்று சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நான்கு சிலைகளும் அப்பகுதி ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து சமய மக்களால் ஐந்து நாட்கள் வழிபாடுகள் செய்யப்பட்டது. பின்னர் 04/09/2011 அன்று மாலை 03:00 மணியளவில் சேதுரோடு, கரையூர்தெரு(மாரியம்மன் கோவில்), வாழக்கொள்ளை( பெருமாள் கோவில்) ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மூன்று சிலைகளும்  அருள்மிகு ஸ்ரீ துர்க்கா செல்லியம்மன் ஆலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து நான்கு விஸ்வரூப விநாயகர் சிலைகளும் மாலை 04:00 மணிக்கெல்லாம் வண்டிப்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இவற்றுடன் பட்டுக்கோட்டை ஒன்றிய நகர ஹிந்து முன்னண்யினரால் வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சிலைகளும் வண்டிப்பேட்டைக்கு வந்தன. 
அங்கு நகர இந்து முன்னணி துணைதலைவர் V.ரமேஷ் ஜீ வரவேற்புரையாற்றினார்,   இந்து முன்னணி நகர தலைவர் P.விஜயகுமார் ஜீ தலைமையில்,மாநில பா.ஜ.க அமைப்பு செயளாலர் ஸ்ரீ. மோகன்ராஜிலு ஜீ அவர்கள் சிறப்புரையற்றினார், பா.ஜ.க மாநில செயளாலர் ஸ்ரீ. கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் ஹிந்து எழுச்சியுறையாற்றி ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.                                                             பின்னர் விஸ்வரூப விநாயகருக்கு கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கிதெரு கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்களால் பட்டு சார்த்தப்பட்டு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அங்கிருந்து விஸ்வரூப விநாயகர் அதிவீரராமபட்டினத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஏரிப்புறக்கரை கிராமத்தை நோக்கி சென்றார்.அங்கு ஏரிப்புறக்கரை கிராம நிற்வாகிகள் மற்றும் இளைஞர்களால் சிலம்பாட்டத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு விஸ்வரூப விநாயகர் வங்கக்கடலிலே சங்கமமானார். நிறைவாக நகர இந்து முன்னணி செயளாலர் V.பிரபாகரன் ஜீ நன்றியுரையாற்றினார்.        


 இந்த ஊர்வலத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் A.K.பழனிவேல் ஜீஇந்து முன்னணி மாவட்ட செயளாலர் R.V.S.ராஜானந்தம் ஜீஇந்து முன்னணி ஒன்றிய பொருப்பாளர் புலவஞ்சி.C.P.போஸ் ஜீஇந்து முன்னணி கிளை நிர்வாகிகள். நமசு.ராஜா ஜீஸ்ரீ.மோகன் ஜீ, சூரை.சண்முகம் ஜீ, பார்த்திபன் ஜீ, மற்றும் நகர, ஒன்றிய, கிராம, கிளை பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.                                                                                                                                 
 இந்த விழாவில் அதிவீரராமபட்டினம் ஹிந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்களோடு, பட்டுக்கோட்டை, பள்ளிகொண்டான்,சேண்டாக்கோட்டை, மாலியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மிலாரிக்காடு, மதுக்கூர்,துவரங்குறிச்சி, மழவேனிற்காடு, பழஞ்சூர், புதுப்பட்டினம், வெலிவயல், ராஜாமடம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, கரிசக்காடு,மஞ்சவயள்,  கருங்குளம், வள்ளிக்கொள்ளைக்காடு, ஆகிய சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட ஹிந்து இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.         காவல்துறையின் கணிவான ஒத்துலைப்பு விழா சிறக்க உதவியாக இருந்தது.