Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

14 ஏப்ரல் 2014

தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

இன்று (14.04.2014) தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார்.




தஞ்சை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் நேற்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் வழியாக ஊருக்குள் போக வாகனங்கள் திரும்பியது.

அப்போது பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்தவர்களும், உள்ளே இருந்தவர்களும் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் கூட வந்தவர்களை ஊருக்குள் வரக்கூடாது என தடுத்து நிறுத்தினர். 

இந்த நிலையில் திடீரென சிலர் கூட்டத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும், கட்டைகளையும் சரமாரியாக வீசினர். ரோடு ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் பக்கத்தில் இருந்த குளத்திற்குள் தூக்கி வீசப்பட்டது. அந்த இடம் போர்க்களமாக மாறியது. பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கற்கள் வீசப்பட்டதால் சுற்றுப்பயணத்தில் சென்ற பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாதுரை, வெளிமடத்தைச் சேர்ந்த ராஜன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயம்பட்ட பலர் வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டனர். பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தின் மீதும் ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. இதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 


(தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு முன்கூட்டியே குவித்துவைக்கப்பட்ட கற்குவியல்)






சம்பவம் அரிந்ததும் மற்ற கிராமங்களில் உள்ள பா.ஜ.க மற்றும் கூட்டனி கட்சி தொண்டர்கள் அங்கு வந்தனர்.  திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர். திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்குமாரும் பதில் தாக்குதலில் ஈடுபடக்கூடாது என கேட்டுக்கொண்டதாலும் தொண்டர்கள் அமைதிகாத்தனர்.

 தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் தொண்டர்களிடம் பிடிபட்டனர். அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


இதன் பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டரியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டமையாலும் திரு.கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் அமைதிகாக்கும்படி வேண்டிக்கொண்டமையாலும் தொண்டர்கள் அமைதியடைந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சில இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த சம்பவத்தை தொடர்ந்து மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், அதிவீரராமபட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் அதிரடிப்படை போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மல்லிப்பட்டினம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனிடையே தாக்குதல் சம்பவத்திற்கு மதிமுக பொதுசெயலர் வைகோ கண்டனம்:


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளருமான முருகானந்தம் அவர்கள் இன்று பகலில் மல்லிப்பட்டினத்துக்கு வாக்காளர்களைச் சந்திக்க பிரச்சாரத்துக்குச் சென்றபோது, ஊருக்குள் வரக்கூடாது என்று வன்முறையாளர்கள் பலர் தடுத்துள்ளனர்.
வாக்குக் கேட்பது ஜனநாயக உரிமை என்றும், வாக்காளர்கள் அவர்கள் விருப்பப்படி ஓட்டுப் போடலாம் என்றும், நியாயமான வாதங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யாமல், ஒருதலைபட்சமாகவே நடந்துகொண்டனர். வேட்பாளருடன் சென்ற வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல், வேட்பாளர் வாகனத்தை மட்டும் மல்லிப்பட்டினத்துக்குள் அனுமதித்துள்ளனர்.
இதன்பின் வன்முறையாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வேட்பாளரையும், அவர் உடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. வேட்hபளர் மயிரிழையில் உயிர் தப்பினார். உடன் வந்தவர்களும் பலத்த காயமுற்றனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவே முடியாது என்று அக்கிரமமாக மறுத்துள்ளனர். நீண்ட அறப்போராட்டத்துக்குப் பிறகு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக நிந்தித்து விமர்சித்துள்ளார். இதன் பின்னணியில் இன்றைய மல்லிப்பட்டினம் சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சை வேட்பாளர் மீதும், அவருடன் சென்றோர் மீதும் வன்முறை தாக்குதல் நடத்திய அராஜக ரௌடி கும்பலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
14.04.2014 மறுமலர்ச்சி தி.மு.க

1 கருத்து: