Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

05 மார்ச் 2011

குஜராத் பெருமையை கூறிபிரசாரம் செய்ய பா.ஜ., தீவிரம்


சேலம்:வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு இணையான வேட்பாளர்களை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. தொகுதி வாரியாக விருப்பம் தெரிவிப்போர் விவரங்களை பெற்று, மாநில தலைவர் உட்பட, பத்து பேர் கொண்ட குழு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக உள்ளது. பிரசாரத்திற்கு, குஜராத் மாநில பெருமையை எடுத்துக் கூற, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., எந்த கூட்டணியிலும் இடம் பெறவில்லை. வரும் தேர்தலில், தனித்து நின்று பலத்தைக் காட்ட, அக்கட்சி முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள, 234 தொகுதிகளில், வெற்றி பெறும் 20 தொகுதிகள், வெற்றி வாய்ப்புக்கான, 80 தொகுதிகள், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை, மக்களிடத்தில் கொண்டு செல்லும், 134 தொகுதிகள் என, கட்சி தலைமை பட்டியல் தயார் செய்துள்ளது. வெற்றி மற்றும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில், எதிர்கட்சியினருக்கு சவால் விடும் வகையிலான வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
ஒன்றியம், மாவட்ட வாரியாக விருப்பமுள்ளவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களை தேர்வு செய்து, அதை டில்லிக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது முதல் சுற்று முடிவடைந்துள்ளது. வேட்பாளர் தேர்வில், மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல. கணேசன், லட்சுமணன், பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ், ராஜா உள்ளிட்ட பத்து பேர் இடம் பெற்றுள்ளனர்.15ம் தேதிக்குள், 234 தொகுதியின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.இத்தேர்தலில், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் நடக்கும் பா.ஜ., ஆட்சியின் பெருமையை கூறி, ஓட்டு கேட்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி, நிதின்கட்காரி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நடிகை ஹேமமாலினி உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
thanks to : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக