Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

22 மார்ச் 2011

இந்து ஓட்டுகள் புறக்கணிப்பு?


தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக வழக்கம் போல், அரசியலில் இரண்டு பிரதான அணிகள் உருவாகியுள்ளன. இரு அணியிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்து அமைப்புகளின் மீது அரசியல் தீண்டாமை நிலவுகிறது.இந்து அமைப்புகள், கூட்டணியில் இடம்பெற்றாலே, இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ்ட் அமைப்புகள் தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவர் என்ற எண்ணமும், இந்து அமைப்புகளை அங்கீகரித்தாலே சிறுபான்மையினர் ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்ற அச்சமும் தான் இதற்கான முக்கிய காரணங்கள்.இதனால், இந்துக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. 
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை, இந்து யாத்திரீகர்களுக்கும் வசதிகள் மற்றும் நிதியுதவி, கோவில்களை நிர்வகிக்க அரசியல் மற்றும் அரசு கலப்படமில்லாத சுயேச்சை வாரியம் அமைத்தல் உள்ளிட்டவற்றில் இந்துக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.அதேபோல, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், தாழ்த்தப்பட்டோருக்கென தனி தொகுதிகளை உருவாக்கி, அதில் இந்து தாழ்த்தப்பட்டோர் மட்டுமே போட்டியிட முடியும் என சட்டம் செய்துள்ளனர்.குறிப்பாக அம்பேத்கர், தனித் தொகுதிகளை உருவாக்கும்போது, அதில் இந்து அல்லாதவர்கள் போட்டியிடுவது சட்டப்படி மோசடி என்றும், சட்டம் செய்து, அதற்கான தண்டனைகளையும் உறுதி செய்துள்ளார்.
ஆனால், கடந்த காலங்களில் இந்து அல்லாத பலர், தாங்கள் இந்து தாழ்த்தப்பட்டோர் என போலி சான்றிழ்களைக் கொடுத்து, தனித் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு வழக்குகள் நடந்து, அவர்களின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருவதற்குள், பதவிக்காலமே முடிந்துவிடுகிறது. இது, இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் அநீதி.எனவே, இந்தத் தேர்தலில் தனி தொகுதிகளில் மனு தாக்கல் செய்பவர்கள், இந்து தாழ்த்தப்பட்டோர் தானா என கண்காணிக்க சிறப்பு தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.(கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சி நிறுவனர்): அர்ஜுன் சம்பத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக