Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

07 பிப்ரவரி 2011

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று


ஆக்கம்: பல்பீர் புன்ஜ்

(நன்றி: “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” 10/11/10)
தமிழாக்கம்: எஸ். ராமன்
காங்கிரஸ் கட்சி ஒன்றே பாரதத்தை ஒன்றாய் இணைக்கும் திறமை பெற்ற தேசியக் கட்சி என்று தன்னைக் காட்டிக் கொள்ள டெல்லியில் நடந்த தேசியக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் முயற்சி செய்தது.
ஆனால், அந்த காங்கிரசின் சரித்திரம் தான் என்ன?
அந்தக் கட்சிதானே  தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத்  தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தது?
அதன் ஆட்சியில்தானே தேசத் துரோகத்தை ஆதரிக்கும் வாதத்தை வாழ்த்துபவர்கள் என்று பகிரங்கமாக தன்னை அறிவித்துக் கொள்ளும் பிரிவுகளுக்கு தனது நேர்முக, மற்றும் மறைமுக ஆதரவை அளிக்கிறது?
தனக்கு எதிராக வந்த நீதிமன்றத் தீர்ப்பினால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் 1975-77 -ல் அவசர நிலையைப் பிரகடனம் செய்த இந்திரா காந்தி நம் தேசத்தையே அச்சம் கொள்ளச் செய்தார்.
1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின்  தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.
maoist_india_map_20091026கேரளா, மற்றும் வேறு மாநிலங்களில் செயல்படும் Popular Front of India என்ற குழு அங்கங்கே Sharia Court தண்டனைகளைக் கொடுக்கின்றது. இந்தியாவிற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றது. தேர்ந்தெடுத்த அரசுகளைக் கவிழ்க்கவும் இஸ்லாமிய அரசை நிறுவவும் ஆயுதங்களை சேமிக்கின்றது. இந்த தேசிய முள்ளை பிடுங்கி எறியும் வல்லமை காங்கிரஸ் அரசுக்கு இல்லை என்பதோடு, அதன் கட்சியோ இந்தக் குழுவுக்குப் பரிந்தும் பேசுகிறது. நல்ல வேளையாக கேரளாவின் மார்க்சீய அரசு அதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்க முனைந்திருக்கிறது.
நம் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நக்சலைட்டின் பிடிக்குள் வந்திருக்கிறது. மைய அரசு தனது ஆளுமையை அங்கு உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கும் போது, காங்கிரசின் பொதுக் காரியதரிசி ஒருவரே அந்த முயற்சியை தடுப்பதோடு மட்டும் அல்லாது எந்தக் குழு தேசத்தின் மேலேயே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறதோ அதற்காக பரிந்தும் பேசுகிறார்.
மைய அரசில் உள்ள ரயில்வே மந்திரியோ அந்தக் குழுக்களுடன் கை கோர்த்துச் செல்ல விரும்புகிறார். தடுக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான SIMI நாட்டின் பல மூலைகளில் வெடி குண்டு வைத்து அமைதியைக் குலைக்க பயங்கர திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும்போது, மையத்தில் உள்ள கூட்டணி அரசோ தனது பார்வையை குஜராத்தின் பா.ஜ.க. அரசின் அங்கத்தினரைப் பழி வாங்கும் இழிச்செயலில் திருப்பியிருக்கிறது.
எழுத்தாளர் அருந்ததி ராயுடன் சேர்ந்துகொண்டு பிரிவினைவாதத் தலைவர் ஜீலானி, தலைநகர் டெல்லியிலேயே காஷ்மீரத்தை “அபகரித்துக் கொண்ட” நாடு என்று இந்தியாவை குற்றம் சாட்டுகிறார். அத்தகையவர்கள் மேல் எந்த நடவடிக்கை எடுக்கும் தைரியமும் காங்கிரஸ் அரசுக்கு இல்லை.
bigdeal5junesmallஅவ்வளவு ஏன்?  பயங்கர வாதத்தில் ஈடுபடும் தண்டேவடா நக்சலைட்களையோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேசும் காஷ்மீரத்து கல்லெறி கயவர்களையோ  காங்கிரஸ் பொதுக் குழுக் கூட்டத்தில் யாராவது கண்டித்தார்களா? அவர்களைப் பற்றித்தான் ஏதாவது பேசினார்களா? ஆனால் அதை மறைக்கும் முகமாக, அவர்களுக்கு RSS பற்றி குற்றம், குறை சொல்லத்தான் தெரிந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள்  “அது ஒரு தேசிய இயக்கம் என்று” போற்றிய RSS -ஐ ஒரு பயங்கரவாத இயக்கம் என்று ஆத்திரத்துடன் கூவத்தான் அவர்களுக்குத் தெரிந்தது. முழுப் பூசணிக்காயை சோற்றிலா மறைக்கப் பார்க்கிறார்கள்? இப்படி உள்ளதை மறைத்து, இல்லாததைப் பேசுவதால் டெல்லியில் காங்கிரசுக்கு “கனா காணும் இயக்கம்” என்ற பெயரைத் தான் வாங்கித் தந்திருக்கிறது.
தேசியப் பற்று என்பதன் மதிப்பையே குறைக்கும் அளவில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள்  அமைந்துள்ளன. சுதந்திர இந்தியாவை வெகு காலத்திற்கு ஆண்ட ஒரே ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரையே, தனது அறுநூறுக்கும் மேற்பட்ட தன்  திட்டங்களுக்கு, காங்கிரசின்  மைய அரசு வைத்திருக்கின்றது. தேசியப் பற்று கொண்டவர்களில் வேறு எவர் பெயரும் அந்தக் கட்சிக்கு ஞாபகம் இல்லை. சுதந்திரம் பெற்ற சமயம், சுயேச்சையாக ஆண்டுகொண்டிருந்த சுமார் அறுநூறு சமஸ்தானங்களை தனது சாதுரியத்தாலும், தேச பக்தி மேலீட்டாலும் ஒன்றிணைத்த மிக உயர்ந்த மனிதரான சர்தார் படேல் காங்கிரசில் இருந்தும் அவர் பெயர் கூடவா அக்கட்சிக்கு மறந்து போய்விட்டது? 
பாகிஸ்தானிடம் அபிமானம் கொண்ட அளவில் வெகுச் சிறிய ஜுனகத் சமஸ்தானத்திலிருந்து மிகப் பெரிய ஹைதராபாத் சமஸ்தானம் வரை அறுநூறையும் வெகு வேகமாக இணைத்து நமது சுதந்திர இந்தியாவை உருவாக்கியது ஒன்றே சர்தார் படேலின் அணுகுமுறைக்கு சான்றாகப் போதும். ஆனால் ஒரே ஒரு காஷ்மீர் இணைப்பை நேரு தன்னந்தனியே கையாண்டார். விளைவு? இன்றும் நாம் தொங்கலில் தான் இருக்கிறோம். இன்னும் எத்தனை தலைமுறைகள் இதனால் அவதிப்படப் போகிறதோ?
சுதந்திர இயக்கத்திலும், சமூக சீர்திருத்தத்திலும் பங்கு கொண்டு தியாகம் செய்த பற்பல தலைவர்களில், நேரு-காந்தி குடும்பத்தின் பங்கு மட்டுமே நினைவில் நிற்கும்படி எல்லா  திட்டங்களுக்கும், இடங்களுக்கும் பெயரிடுவது என்பது தான் காங்கிரசின் தேசியப் பற்று! சிந்தனை உடையவர் எவருமே இந்தப் போக்கை ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்வர். ஆக காங்கிரஸ் வளர்ப்பது ஒரு குடும்பத்தின் வழிபாட்டையே அன்றி தேசியப் பற்றை அல்ல.
SIMI, நக்சலைட் இயக்கங்கள், மதச் சார்பின்மை பற்றி அலட்டிக் கொள்வோர், தான் தோன்றி அறிவுஜீவிகள் என்று இவர்கள் எல்லாம் கட்டற்ற சிந்தனை, முன்னேற்றம் தரும் எழுத்துக்கள் என்ற போர்வையில் செய்து கொண்டிருப்பதெல்லாம் தேசத் துரோக வேலைகளே. இவர்கள் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தெரியுமா?
shreyas_sketchராணுவம் நம்மை அடக்குகிறது, போலீசோ கொலை, கற்பழிப்புகளில் ஈடுபடுகிறது, இந்த அரசு ஏழை மக்களுக்காக அல்ல, இந்திய தொழில் நிறுவனங்கள் மக்களின் எதிரிகள், மேலும் அவைகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, அதனால் இந்திய நிறுவனர்களோடு இந்திய அரசையும் அகற்ற வேண்டும் என்று சொல்கின்றன.
இவர்கள் பார்வையில் போலீசைக் கொல்லும் மக்கள் குற்றவாளிகள் அல்ல, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் போலீசும், ராணுவமும் தான் அகற்றப்பட வேண்டும்!
பழம் பெரும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் நான் என்று காட்டிக்கொள்வது இவர்களுக்கு ஒரு பிற்போக்கு எண்ணம், ஆனால் முஸ்லீமின் பழமைவாதத்தை ஆதரிப்பதோ ஒரு முற்போக்குக் கொள்கை. இந்துக் கடவுளர்களை நிர்வாணமாகச் சித்தரிப்பது ஒரு கலைஞனுக்கு உள்ள சுதந்திரம், ஆனால் இஸ்லாமிய வழிகளைப் பற்றி ஒரு சொல் கூடச் சொன்னால் அது மதவாத பயங்கரம். தேசிய கலாச்சாரத்திற்கு எதிராக விஷ விதைகளைத் தூவுவது இவர்களுக்குத் தனி மனித சுதந்திரம், ஆனால் நம் நாட்டின் கலாச்சார ஒற்றுமையின் அடித்தளமாக இருப்பதைப் பற்றி எழுதினால் அது ஒரு பிற்போக்குத்தனம். இப்படியாக முன்னுக்குப் பின் முரணாக உள்ளதுதான் இவர்கள் எண்ணமும், பேச்சும், செயலும்.
பழமைவாதம் கொண்ட இஸ்லாமை ஆதரிக்கும் அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்களும், இடதுசாரி கருத்துக்கள் கொண்ட அறிவுஜீவிகளும் இஸ்லாமியத்தை மட்டுமே அனுமதிக்கும் நாடுகளிலோ, அறிவுஜீவிகளின் மார்க்சீய நாடுகளிலோ ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசக்கூட மாட்டார்கள்.
எங்கெல்லாம் மார்க்சீய வழியில் ஆட்சியை பிடித்திருக்கிறார்களோ அங்கெல்லாம் கருத்து வேற்றுமை என்பதை அனுமதிக்காது முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். பழமைவாதம் பழகும் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்லாது தடுக்கப்படுகிறார்கள்; வெளி உலகில் பர்தா அணியாது இருந்தால் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் சிறையில் தள்ளப்பட்டோ, கல்லால் அடிக்கப்பட்டோ கொலை செய்யப்படுகிறார்கள்.
271010satishஎழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோர் இஸ்லாமிய நாடுகளிலோ, மார்க்சீய நாடுகளிலோ இங்கு பேசுவதுபோல் பேச முடியுமா? இந்த விவரங்களை எல்லாம் அவர்கள் சொல்லாது மறைப்பதனால், அவர் போன்றோர்களுக்கு அவர்களது பேச்சு, எழுத்து போன்ற அவர்களது ஆயுதங்களாலேயே அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். தனது அரசியல் நோக்கங்களுக்காக காங்கிரஸ் அவரது பேச்சை பொருட்படுத்தாது விட்டுவிடலாம். ஆனால் RSS  போன்ற தேசிய இயக்கங்களை அக்கட்சி தாக்கும் போது, இந்திய இறையாண்மையையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பதை விட, காங்கிரஸ் ஒரு குடும்ப அரசியலை மேலாக நினைத்துச் செயலாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அருந்ததி ராயின் தேசத் துரோகப் பேச்சைப் பற்றி சிறிது கூட மூச்சு விடாத காங்கிரஸ் தேசியக் குழு, RSS  இயக்கத்தை ஒரு பெரிய பிரச்சினை போல விவரித்து முழு மூச்சுடன் தாக்கியதே, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மையத்தில் ஆளும் கட்சியின் எண்ணப் போக்கினைத் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக