Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

05 பிப்ரவரி 2011

பிற மதங்களில் இருந்து 51 பேர் இந்து மதத்திற்கு திரும்பினர்:வி.எச்.பி.விழாவில் வரவேற்பு

திருநெல்வேலி: பிற மதங்களில் இருந்து, இந்து மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி, நேற்று நெல்லையில் நடந்தது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நெல்லையில் நேற்று மதமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் என, மொத்தம் 51 பேர் மதமாறும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பார்வதி சேஷ மகாலில் நடந்தது. இதில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் கிறிஸ்தவர்கள். சுத்தி ஹோமம் நடத்தப்பட்டு, அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமிகள் அவர்களுக்கு வீட்டில் பூஜை செய்ய விளக்குகள் வழங்கி, ஆசிர்வதித்தார்.
இது குறித்து வி.எச்.பி.,மாநில கோபாலரத்தினம் கூறுகையில், ""இந்தியா முழுவதும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, இந்து மக்கள் மட்டுமே கேட்டு அதன்படி நடக்கிறார்கள். இதனால், மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மக்கள் தொகை விகிதாச்சாரம் குறைந்து வருகிறது. மதமாற்றத்திற்காக, ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் விதைக்கின்றன. "இந்தியாவில் அறுவடை' என்ற பெயரில் முகாம் நடத்தி, மதமாற்றங்களை நடத்துகின்றனர். ஆனால், மற்ற மதங்களுக்கு செல்லும் மக்கள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. அங்கேயும் ஆலய வழிபாட்டில் பேதம், இடுகாடு போன்றவற்றில் ஜாதிப் பிரச்னை நீடிக்கிறது. எனவே, தாய் மதமான இந்து மதத்திற்கு பலரும் தாங்களாகவே விண்ணப்பித்து மாறுகிறார்கள். நாங்களும் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்களா... அரசின் நலத் திட்டங்களுக்காக மாறுகிறார்களா... என, ஆலோசித்தே சான்றிதழ் வழங்குகிறோம், என்றார். நிகழ்ச்சியில் தர்மபிரசார் அமைப்பாளர் பெருமாள், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                                                                   நன்றி: தினமலர் நாளிதழ்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக