Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

03 செப்டம்பர் 2012

இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை



 இறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான்
கவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும் குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமான பகுதிகளைக் கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.

விஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட யாத்திரையோ அல்லதுவைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எல்லா இடங்களிலும் "நம்பிக்கைதான் உச்ச பட்சமாக" உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

 அமர்நாத் கோயில்
அமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400 வருடங்களுக்கு முன்பு "பச்சை பையன்" பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு முன்பிருந்தே இந்த உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின் மணிமுடி) ஹிமாலய மலைத் தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. "அமர்நாத் யாத்திரை" இரண்டு மாதங்கள் நடந்து வந்தது. இப்போது காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24 மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின் முக்கியத்துவம் அன்றும் இன்றும் "கைலாஷ் யாத்திரை" மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை "அம்புர்நாத்" என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய "ராஜ தரங்கணியில்" இந்த யாத்திரை "அமரேஷ்வர் யாத்திரை " என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ் தரங்கனி 7 -183).

பகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு "அமிர்தம்" கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும் கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் "அமர்நாத்" (என்றும் உள்ளது) என்றும் அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான் அமர்நாத் யாத்திரைக்கும் இந்த மாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில் அங்கு சிவன் "பனி லிங்க வடிவில்" காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில் "ஸ்தான் பூஜா" (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.

 அமர்நாத் யாத்திரை அமர்நாத்துக்கு போகும் வழியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. பார்க்கடல் போன்று வெண்மை என்ற பொருளில் அந்த ஏரி "டுக்தாப்தி தவல்" என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை "சேஷ்நாக் ஏரி" என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம் ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16 அடி வரை உயரமாக வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள் காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும் அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா? குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் "கல்லைப் போன்று" அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.

இந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால் பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம் பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்சி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.

அமர்நாத்  பனிலிங்கம்காஷ்மீரை "ஆனந்த்" என்ற அரசர் ஆண்டார். அவருடைய மனைவி "சூர்யமதி" என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய பண்டைய, இடைக்கால அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.

இன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.

ஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக் குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள், பக்தர்கள் மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வாதங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.

ஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள் மட்டுமே,

அமர்நாத் பனிலிங்கம், அமர்நாத் யாத்திரை, கோயில்,  அம்ரிஸ்தர்

ஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா தமிழாக்கம்: லா.ரோஹிணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக