Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

18 செப்டம்பர் 2012

ராணுவ ரகசியங்களுடன் திருச்சியில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி கைது

திருச்சி : விசாகப்பட்டின கடற்படைத் தளம், ஊட்டி ராணுவ முகாம் உள்ளிட்ட பல்வேறு இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்த ஐஎஸ்ஐ உளவாளியான அதிராம்பட்டினம் இளைஞரை க்யூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அதிராம்பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). சில வருடங்களாக இலங்கைக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக தமீம் அன்சாரி வாரத்திற்கு ஒரு முறை திருச்சி விமான நிலையம் வழியாக கொழும்பு சென்று வந்தார். காய்கறி வாங்குவதாக கூறி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு அவர் அடிக்கடி சென்று வந்தார்.

 சமீப காலமாக அன்சாரியிடம் அதிக அளவில் பணப் புழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக நண்பர்கள் கேட்டதற்கு காய்கறி ஏற்றுமதி தொழிலில் அதிக அளவு லாபம் கிடைப்பதாக அவர் பதிலளித்தார். இருந்தபோதிலும் அவரது நடவடிக்கை அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக க்யூ பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் அன்சாரியை கண்காணித்து வந்தனர். காய்கறி வாங்குவதாக கூறி அன்சாரி விசாகப்பட்டினம் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று வந்ததும், அங்கு சில இளைஞர்களை அவர் சந்தித்தது பேசுவதும் தெரியவந்தது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிராம்பட்டினத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் கிளம்பிய அன்சாரியை வழிமறித்து க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரிடம் இருந்து ஏராளமான சிடிக்கள் கைப்பற்றப்பட்டன. 

அவற்றை சோதனை செய்து பார்த்த போது, அதில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படைத் தளம் மற்றும் அமைப்பு, அங்கு நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பல்கள் பற்றிய விவரம், ஊட்டியில் உள்ள ராணுவ முகாமின் அமைப்பு மற்றும் அவற்றில் நடைபெறும் பணிகள் பற்றிய விவரங்கள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த க்யூ பிரிவு போலீசார் அன்சாரியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த சில வருடங்களாக இலங்கையில் உள்ள ஐஎஸ்ஐ அதிகாரி ஒருவருடன் தமீம் அன்சாரி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஐஎஸ்ஐ அதிகாரியின் உளவாளியாக அன்சாரி செயல்பட்டு வந்துள்ளார். இங்கிருந்து இந்திய ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் லட்சகணக்கில் பணம் பெற்று வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அன்சாரியை கைது செய்த க்யூ பிரிவு போலீசார், நேற்று மாலை திருச்சி ஜேஎம்,2 கோர்ட் மாஜிஸ்திரேட் ராஜேந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஎஸ்ஐ உளவாளியாக கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என போலீசார் கூறினர். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமீம் அன்சாரி ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

திருச்சி இலக்கா?

ராணுவ தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ முகாம் ஆகியவை திருச்சியில் உள்ளன. தமீம் அன்சாரியிடம் தென்னிந்தியாவின் ராணுவ ரகசியங்களை சேகரித்து கொடுக்குமாறு ஐஎஸ்ஐ  உத்தரவிட்டிருந்த நிலையில் திருச்சியைப் பற்றிய ரகசியங்களையும் தமீம் அன்சாரி சேகரித்து கொடுத்தாரா? என்பது குறித்த விசாரணையில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என க்யூ பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

செல்போன் கண்காணிப்பு

கடந்த சில வாரங்களாக தமீம் அன்சாரியின் செல்போன் எண்ணை க்யூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போதுதான் இலங்கையில் இருக்கும் ஐஎஸ்ஐ அதிகாரியுடன் அவர் அடிக்கடி பேசி வந்ததும், அவர் கேட்ட விவரங்களை சேகரித்து சிடியாக தயாரித்ததும் தெரியவந்தது. இந்த வகையில் சுமார் 13 சிடிக்களையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பென்டிரைவில் ரகசியம்

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாதம் ஒரு முறை தமீம் அன்சாரி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று வந்துள்ளார். காய்கறி வியாபாரம் என்ற போர்வையில் சென்றபோதெல்லாம் பென் டிரைவ்களாகவும், சிடிக்களாகவும் இந்தியா பற்றிய ரகசியங்களை அவர் கொழும்பு சென்று கொடுத்த திடுக்கிடும் தகவலும் க்யூ பிரிவு போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   நன்றி: தினகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக