Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

25 மார்ச் 2012

ஆர்.எஸ்.எஸ். புதிய நிர்வாகிகள்


ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக சுரேஷ் (பையாஜி) ஜோஷி  மீண்டும் தேர்வு.


நாகபுரியில் மார்ச் 17ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபா உறுப்பினர்களால் சுரேஷ்(பையாஜி) ஜோஷி அவர்கள் ஏகமனதாக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
2009ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் ஜோஷி அவர்கள் அப்பொறுப்பில் 3 ஆண்டுகாலமாக இருந்துவந்தார்.   நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி சபாவில் கடந்த ஆண்டின் அறிக்கையை சமர்ப்பித்த அவர் தனது பதிவிக்காலம் முடிந்து விட்டதாகக் கூறி அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
ஆர்.எஸ்.எஸ்.சட்ட விதிமுறைகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அப்பதவில் 3 வருடங்கள் மட்டுமே இருக்கமுடியும்.  எனவே அவரது பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் ராவ் குக்கடே அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று புதிய பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். வடக்குப் பிராந்தியங்களின் தலைவர் ஸ்ரீ.பஜ்ரங்லால் குப்தா அவர்கள் ஸ்ரீ.சுரேஷ் ஜோஷி அவர்களின் பெயரை முன்மொழிய, தெற்குப் பிராந்தியங்களின் செயலாளர் திரு.ஏ.ஆர்.மோகனன் மற்றும் கிழக்குப் பிராந்தியங்களின் சங்கசாலக் திரு.ரானேந்திரா நாத் ஆகியோர் வழிமொழிந்தனர். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திரு.சுரேஷ் பையாஜி ஜோஷி அவர்கள் ஏகமனதாக ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி டாக்டர் அசோக் ராவ் குக்கடே அறிவித்தார். அப்பொறுப்பினை ஏற்றுக்கொன்ற சுரேஷ் ஜோஷி அவர்கள் அடுத்து வருகின்ற 3 வருடங்களுக்கு அப்பொறுப்பில் இருப்பார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 3  வருடத்திற்கு ஒருமுறை அகில பாரத அளவில் தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பிரதிநிதி சபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அகில பாரதப் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் 
தலைவர் டாக்டர் மோகன் பாகவத்
பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி
4 இணை பொதுச் செயலாளர்கள்
1) சுரேஷ் சோனி
2) தத்தாத்ரேயா ஹோசபளே
3) கிருஷ்ணா கோபால்
4) கே.சி.கண்ணன்
பெளதிக் பிரமுக் பாகையா
ஸஹ பெளதிக் பிரமுக் மகாவீர்
ஷாரீரிக் பிரமுக் அணில் ஓக்
சஹ ஷாரிரிக் பிரமுக் ஜகதீஷ் பிரசாத்
சம்பர்க்க பிரமுக் ஹஸ்திமல்
சஹ சம்பர்க்க பிரமுக் 3 பேர்
1) அருண் குமார்
2) ராம் மாதவ்
3) அனிருத் தேஷ்பாண்டே
சேவா பிரமுக் சுகாஸ் ஹிரேமத்
சஹ சேவா பிரமுக் அஜித் மகாபத்ரா
வ்யவஸ்தா பிரமுக் சாஹல் சந்த் பக்ரேச்சா
சஹ  வ்யவஸ்தா  பிரமுக்
1) மங்கேஷ் பிண்டே
2) பாலா கிருஷ்ணா திரிபாதி
பிரசார் பிரமுக் மன் மோகன் வைத்யா
சஹ பிரசார் பிரமுக் நந்த குமார்
பிரசாரக் பிரமுக் சுரேஷ் சந்திரா
சஹ பிரசாரக் பிரமுக் வினோத் குமார்
அகில பாரத செயற்குழு உறுப்பினர்கள்
1) சீதாரம் கேடிலைய
2) இந்திரேஷ் குமார்
3) மதுபாய் குல்கர்னி
4) ந.கிருஷ்ணப்பா
5) ஸ்ரீகாந்த் குல்கர்னி
6) மதன்தாஸ் தேவி
7) கே.எஸ்.சுதர்சன்
8) அசோக் பேரி
கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் அடங்கிய தக்ஷிண க்ஷேத்தர ப்ரசாரக்காககோ.ஸ்தாணுமாலயன், தக்ஷிண க்ஷேத்திர கார்யவாஹ் (செயலாளர்) ஆகஎஸ்.ராஜேந்திரன் (திருச்சி) தக்ஷிண க்ஷேத்திர சங்கசாலக்காக (தலைவர்) டாக்டர்ஆர்.வன்னியராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு