Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

01 ஜனவரி 2011

அதிவீரராமபட்டினம் : "" இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.க.வும், அ.தி.மு.க., வும் முயற்சி செய்கின்றன,'' என, அதிரையில் பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

அதிவீரராமபட்டினம் : " இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்துஓட்டுக்களை பெற தி.மு..வும்.தி.மு.., வும் முயற்சி செய்கின்றன,'' எனஅதிரையில் பா.., தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.




கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்குவது போல, இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தாமரை யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். அதிரையில் கடந்த 01.12.2010 அன்று அதிரை வண்டிப்பேட்டை முக்கத்தில் யாத்திரையை துவக்கி அவர் பல பகுதிகளுக்கு சென்றார். அவர் பேசியதாவது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்குவதை பா.., எதிர்க்கவில்லை. சிறுபான்மை ஒட்டுக்களை பெற காங்., தி.மு.., அரசுகள் இதை செயல்படுத்துகின்றன. இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி, இந்த யாத்திரை நடக்கிறது. ஓட்டு வங்கியை மனதில் வைத்து .தி.மு.., தே.மு.தி.., போன்றவை இந்து மாணவர்களுக்கு குரல் கொடுக்க தயங்குகின்றன. மெக்கா, மதீனா செல்லும் முஸ்லிம்களுக்கும் அரசுகள் உதவிகள் வழங்குகின்றன. ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாக ஜெயலலிதா, கருணாநிதி அறிவிக்கின்றனர். காசி, கயிலாலயம் செல்லும் இந்துக்களுக்கு நிதியுதவி வழங்குவார்களா?


இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து, ஓட்டுக்களை பெற தி.மு.., - .தி.மு.., முயற்சிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற தி.மு.., திட்டமிடுகிறது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் ஆளுங்கட்சியினரால் அபகரிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் மாஜி அமைச்சர் ராஜா ஆதரவாளர்கள், 1,600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர். நதி நீர் பிரச்னைகளில் தி.மு.., அரசின் மெத்தனத்தால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. காவிரியில் உரிய பங்கை பெற்று தர கர்நாடகா அரசை தட்டி கேட்க கருணாநிதி பயப்படுகிறார். வாஜ்பாய் அரசு நீடித்திருந்தால், இந்திய நதிகள் இணைக்கப்பட்டு இருக்கும். காங்., பொது செயலர் ராகுல் நதிகளை இணைக்க முடியாது. என, வெளிப்படையாக கூறுகிறார். கலாம் போன்றவர்கள் நதி நீர் இணைப்பு சாத்தியம் என்கின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி என்பது ஏமாற்று திட்டம். இந்த அரிசியை வெளிநாடுகளுக்கு ஆளுங்கட்சியினர் கடத்துகின்றனர்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக