Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

20 ஏப்ரல் 2014

தொழுகையில் கலந்துகொண்ட மாணிக்கம் முத்துசாமிக்கு கரையூர் கிராம நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தண்டனை விபரம் வெளியீடு!

அதிவீரராமபட்டினம் கரையூர்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி (64). இவர் கடந்த 17.04.2014 வியாழன் அன்று காலை அதிவீரராமப்பட்டினம் பிலால் நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட மழைத்தொழுகையில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து அவர்மீது கிராம நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதும், அவர்மீது விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர் அனைவர் முன்னிலையிலும் பகிரங்க மன்னிப்புக்கோரினார். இதன் காணொளி நேற்று(19.04.2014) நம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும் அவருக்கு கிராம நிர்வாகம் வழங்கிய தண்டனை விபரம் தெரிவிக்கப்படவில்லை என நேற்று கூறியிருந்தோம். 

இன்று காலை நமது அதிவீரராமபட்டினம் ஹிந்துக்கள் இணைய நிருபரை சந்தித்த கரையூர்தெரு ஹிந்து இளைஞர்கள் தண்டனை விபரத்தையும் இணையத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் விபரம் வருமாறு:

அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு கிராம பொதுமக்கள், ஹிந்து இளைஞர்கள், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணிக்கம் முத்துசாமி மீது புகார் கொடுத்தனர். இந்த புகார் நேற்று(19.04.2014) மாலை விசாரனைக்கு வந்தது.

புகாரை விசாரித்த கிராம நிர்வாகம், கட்டுக்கோப்பான நமது கிராமத்தில் நிர்வாக பொருப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இவர் செய்த இந்த செயளால் நமது கரையூர்தெருவின் பெருமைக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் அனைவர் முன்னிலையிலும் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைவர் பஞ்சாயத்தார் சார்பில் கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய ஹிந்து இளைஞர்கள், இதுபோன்ற அவச்செயளில்  ஈடுபட்ட ஒருவர் கிரம நிவாக பொருப்புகளில் நீடிக்க தகுதியற்றவர் அவரை உடனே கிராம நிர்வாக பொருப்புகளிலிருந்து நீக்கவேண்டும்,
மேலும் அவர் தொழுகை நடத்திய வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டதைப்போல்,  நடந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் இணையதளங்களில் வெளியிடப்படவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கையை ஆலோசித்த கிராம தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள்  மாணிக்கம் முத்துசாமி வகித்துவந்த கிராம பொருப்புகளில் இருந்து ஒருமாத காலம் இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், மேற்ப்படி புகார் ஒருமாதத்திற்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் கூரினர்.


தனது தவற்றை உணர்ந்த மாணிக்கம் முத்துசாமி தான் ஹிந்து மதத்திற்கு பெரிய கலங்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், கரையூர்தெரு கிராம மக்கள் மற்றும் அனைத்து ஹிந்து மக்களும் நான் அந்த தொழுகையில் கலந்துகொண்டமைக்காக என்னை மன்னித்தருளுமாறும், நிர்வாகிகளின் இந்த முடிவை நான் மணமாற ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கூறினார்.

இவை அனைத்தும் நடைபெற்று முடிந்த பிறகு  நமது நிருபருக்கு தகவல் ஹிந்து இளைஞர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு கரையூர் மாரியம்மன் ஆலயத்திற்கு விரைந்த நமது நிருபர் முன்னிலையில் அவர் இணையதளத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

மாணிக்கம் முத்துசாமி தொழுகை செய்த வீடியோ பதிவை நிர்வாகத்திற்கு வழங்கி, தங்களது கடுமையான முயற்சிகளின் மூலம் இந்த சம்பவத்திற்கு நல்லதொரு தீர்வை கண்டு மேலும் பஞ்சாயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நமக்கு வழங்கிய கரையூர்தெரு கிராம நிர்வாகத்திற்கும், கிராம ஹிந்து இளைஞர்களுக்கும் மற்றும் கரையூர்தெரு இந்து முன்னணி நன்பர்களுக்கும் 
"அதிவீரராமபட்டினம் இந்து முன்னணி" மற்றும் "அதிவீரராமபட்டினம் இந்துக்கள்(www.adiraihindus.blogspot.com) இணையம்" நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் அவர்களின் ஹிந்து எழுச்சியை பாராட்டுகிறது.

1 கருத்து: