Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

10 மே 2011

பின் லேடனை விட மாபெரும் அபாயம்


10 May 2011 | அச்சிட அச்சிட

osamaசர்வதேச பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒமாபா வென்று விடலாம்.
பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது.
பின்லேடன் யார்?
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒரு செல்வந்தர் வீட்டில் (1957) பிறந்த பின்லேடன் பயங்கரவாதி ஆனது எப்படி? கட்டுமான நிறுவனம் நடத்திவந்த ஒசாமாவை பயங்கரவாத படுகுழிக்குள் தள்ளியது யார்? கண்டிப்பாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும் அதில் பங்குண்டு.
சோவியத் ரஷ்யா என்ற மாயையான கம்யூனிச வல்லரசு அமெரிக்காவுக்கு போட்டியாக இருந்த காலகட்டத்தில், அண்டையிலுள்ள நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்திவந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ) பல நிழல் நடவடிக்கைகளை அரங்கேற்றியது. அதில் ஒன்று, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு எதிராக, முஜாகிதீன்களை வளர்த்துவிட்டது. அவர்களுக்கு உதவ அமெரிக்காவால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் (1979) தான் ஒசாமா பின் லேடன். இவரது உதவியுடன் முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்தது. 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யா படைகளை வாபஸ் பெற வேண்டியதானது; தவிர அதன் வல்லரசு பிம்பமும் தகர்ந்து பல நாடுகளாக சிதறுண்டது. இதனிடையே அல்குவைதா அமைப்பை முஜாகிதீன்களின் உதவியுடன் துவங்கினார் பின் லேடன் (1988).
osama
ஆப்கானிஸ்தான் பணி முடிந்தவுடன் ஒசாமாவின் கவனம் ஈராக் மீது திரும்பியது. குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது போர் தொடுத்த (1990) அமெரிகாவுக்கு சவூதி அரேபியா ஆதரவளித்தது. முஸ்லிம்களின் புனித நகரங்களான மெக்கா, மெதினா அருகே அமெரிக்கப் படைகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பின் லேடன், சவூதி அரச குடும்பத்திற்கு எதிராகவும் சதி செய்தார். அதன் விளைவாக அமெரிக்காவின் அதிருப்திக்கு ஆளான பின் லேடன் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு சூடான் (1991) சென்றார். தன்னால் வளர்த்துவிடப்பட்ட கையாளே தனக்கு எதிராக வளர்ந்து நிற்பது கண்டு சி.ஐ.ஏ அதிர்ந்தது. அவரை ஒழிக்க முயற்சிகள் துவங்கின.
1992 ல் ஏமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு பின் லேடனின் சுயரூபத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நியூயார்க் உலக வர்த்தக் மையத்தில் தாக்குதல் (1993), கென்யா, தான்சானியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் (1995), ஏமன் கப்பல் மீது தாக்குதல் (2000) என அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மீதான பின் லேடனின் தாக்குதல் நடந்தது. ரஷ்யாவிற்கு எதிராக இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரால் பயங்கரவாதிகளை வளர்த்துவிட்ட அமெரிக்காவுக்கு எதிராக, அதே இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் தாக்குதல்களை பின் லேடன் நடத்தியது. அமெரிக்க நெருக்குதலால் சூடானிலிருந்து துரத்தப்பட்ட பின் லேடன், ஆப்கானிஸ்தானில் (1996) தஞ்சம் அடைந்தார்.
2001, செப்டம்பர் 11 - உலக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்று தான் 4 விமானங்களைக் கடத்தி உலக வர்த்தக மைய கட்டடங்களையும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனையும் தாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பின் லேடன். அந்த நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர். இச்சம்பவம் தன்னால் தான் திட்டமிடப்பட்டது என்று அறிவித்தார் பின் லேடன் (2004).
இதற்கு பழிவாங்க அலைந்தது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுக்கு எதிராக போராடும் முஜாகிதீன்களையும் அல்குவைதா அமைப்பினரையும் ஒழிக்க ராணுவ நடவடிக்கை தொடங்கிய அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள், அங்கு பல அத்துமீறல்களில் ஈடுபட்டன. இந்தப் போரால் ஆப்கானிஸ்தான் சின்னாபின்னமானது. இப்போரில் பாகிஸ்தானையும் தனது கூட்டாளியாக்கிக் கொண்டது அமெரிக்கா.
கடைசியாக, 10 ஆண்டு தேடலுக்குப் பிறகு, பின் லேடனை பாகிஸ்தானிலுள்ள அப்போதாபாத்தில் உள்ள வசதியான வீட்டில் கமாண்டோ நடவடிக்கை மூலமாக சுட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா (2.5.2011). பேயை வளர்த்து விடுவானேன்? பிறகு அதை அழிக்க பேயாட்டம் ஆடுவானேன்?
நடந்தது என்ன?
உண்மையில் பின்லேடனின் கொலையில் பல மர்ம முடிசுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறப்பட்ட பின்லேடன் அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா பல ஆண்டுகளாகவே தகவல் கொடுத்து வந்துள்ளது. ‘பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் மாறிவிட்டது; அதற்கு ஆயுத உதவி செய்யாதீர்கள்’ என்றும் இந்தியா எச்சரித்து வந்துள்ளது. அப்ப்போதேல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்கா இப்போது அதிரடியாக செயல்பட்டுள்ளது.
இப்போதுதான் சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது தெரிந்ததா? உண்மை அதுவெனில், அதன் உளவுத்திறமையே கேள்விக்குறியாகும். ஏற்கனவே தெரிந்தது எனில், அமெரிக்க அரசின் நம்பகத் தன்மை கேள்விக்குறி ஆகும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பதுங்கி இருப்பது இந்தியாவுக்கு தெரிந்து, தகவல் கொடுக்க முடியும்போது, அமெரிக்கா இப்போது தான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறது என்பதே பல கேள்விகளை எழுப்புகிறது. உண்மையில் இது போலி மோதலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் சரிந்துவரும் தனது செல்வாக்கை உயர்த்த பராக் ஒபாமா நடத்திய நாடகமாகவும் இது இருக்கலாம்.
பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் குறித்த வீடியோ பதிவு, புகைப்படங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படாதது ஏன்? அவரது உடல் அவசர அவசரமாக கடலில் மூழ்கடிக்கப்பட்டது ஏன்? இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பிறர் யார் என்ற விபரங்களை இதுவரை அமெரிக்க ராணுவம் வெளியிடாதது ஏன்?
obama_announcement
எந்த அரசும் தன் மீது அதிருப்தி ஏற்படும் தருணங்களில் இத்தகைய சாகசங்களில் இறங்குவது வழக்கமே. சந்தன கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நாம் ஒப்பு நோக்கலாம். ஆனால், பின்லேடன் பாகிஸ்தானில் தங்கி இருந்தது தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்று அமெரிக்கா சொல்வதை எப்படி நம்புவது? இதைவிட பெரிய பொய்யர் பாகிஸ்தான் நாடு. பின் லேடன் தங்கள் நாட்டில் தங்கி இருந்ததே தனக்கு தெரியாது என்று சாதிக்கிறது, தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஊட்டி வளர்க்கும் பாகிஸ்தான். இந்த பொய்யை ஏன் அமெரிக்க சகித்துக் கொண்டிருக்கிறது?
பாகிஸ்தானின் காகுல் ராணுவ பயிற்சி மையத்தின் அருகில் உள்ள வசதியாகவும் மிக பாதுகாப்பாகவும் கட்டப்பட்ட கட்டடத்தில் தங்கி இருந்தது யார் என்று பாகிஸ்தான் அரசுக்கு தெரியவில்லையாம். அதை அமெரிக்க நம்புகிறதா? நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் தெருவில் செல்லும் ஒருவரைக்கூட தொலைதொடர்பு செயற்கைக்கோளால் படம் எடுக்க முடிவது சாத்தியமான இந்நாளில், பாகிஸ்தான் சொல்வதையும் அதை ஏற்கும் அமெரிக்காவையும் இந்த உலகம் எப்படி நம்புகிறது?
உண்மையில் பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பது அமெரிக்காவுக்கு தெரிந்தே இருந்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் ஆதரவின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உணவும் ஆயுதங்களும் எரிபொருளும் அனுப்புவது சிரமம் என்பதால்தான் அமெரிக்கா அமைதி காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் போருக்கு உதவுவதற்காகவே பாகிஸ்தானுக்கு பல்லாயிரம் கோடி ராணுவ உதவி அளித்து வருகிறது அமெரிக்கா என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், காந்தகார் விமானக் கடத்தல், அக்ஷர்தாம் கோயில் தாக்குதல், மும்பை படுகொலைகளில் தொடர்புடைய அதி பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் தான் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க பாணியில் பாகிஸ்தானில் நுழைந்து சுட்டுக் கொல்ல இந்திய ராணுவத்தை இதே அமெரிக்கா அனுமதிக்குமா? பிறிதொரு நாட்டில் சாவகாசமாக ஹெலிகாப்டரில் சென்று இறங்கி ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு மட்டும் விசேஷ உரிமை கொடுத்தது யார்? ஆரம்பத்தில் இதை மழுப்பிய பாக். அரசு பிறகு இதைக் கண்டிக்கிறது; ஆயினும் ஏன் அமெரிக்காவுடன் நட்பு கொண்டாடுகிறது?
அந்த ஆயுதங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு சென்று சேர்க்கிறது. இதன்மூலமாக ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்கிறது அமெரிக்கா. ஒன்று, பாகிஸ்தானை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பது; இரண்டு, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்வது; அதன்மூலமாக இந்திய துணைக்கண்ட பகுதியில் வலுவாக காலூன்றுவது. இந்த அமெரிக்காவைத் தான் நமது தலைவர்கள் நட்பு நாடு என்று இறுமாந்து போகிறார்கள்!
திசைமாறும் சர்வதேச அரசியல்
பின்லேடன் கொல்லப்பட்டது ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்ற தத்துவப்படி அமைந்து விட்டது (நன்றி: திமுக தலைவர் கருணாநிதி). இது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த சம்பவத்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள் சிலர் (திக்விஜய் சிங், முலாயம்) இதிலும் முஸ்லிம் மக்களைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறத் துடிப்பது அசூயையாக இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கும் இந்த கொள்ளையர்களை தண்டிப்பது யார்?
பின் லேடனின் சாவு, இத்துடன் நின்று விடாது என்பது மட்டும் திண்ணம். ஏனெனில், அவர் வளர்த்துவிட்ட அல்குவைதா பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையை கிறிஸ்தவ அரசின் நடவடிக்கையாக சித்தரித்து ‘ஜிகாத்’ நடத்தவும், அதன் பலனாக உலகில் அமைதி மீண்டும் குலையவும் பல வாய்ப்புக்கள் உள்ளன. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பல்கிப் பெருகியுள்ள நமது நாடு தான். ஒசாமாவை ஆதரித்து வளர்த்துவிட்ட அமெரிக்கா போலவே, இங்கும் இஸ்லாமிய பயங்கர வாதிகளை வளர்த்துவிட மதச்சார்பற்ற அரசியல்வியாதிகள் முண்டி அடிக்கிறார்கள். அதற்கான பலனை பொதுமக்கள் தான் அடைய வேண்டி இருக்கும்.
உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் இருப்பதாக இஸ்லாமிய நாடுகள் வெகுண்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாகவே பின் லேடன் மரணத்தைக் காண வேண்டும். இந்த நிகழ்வு, அமெரிக்காவின் பிடியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழுமானால், இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். ஆனால், நமது அரசோ, நாட்டை நாசாமாக்கும் பயங்கரவாதிகளைவிட கேவலமான நிலையில் இருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக