July 20, 2014
- திருவாதிரையான் ஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி இந்து முன்னணி இன்று (20.07.2014) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செய்தது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக பேராவூரணியில் இன்று மாலை 5.00 மணியலவில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது சரியாக 5.00 மணியளவில் பேராவூரணி சேதுரோட்டில் தொடங்கியது. சி.பாஸ்கர், பேராவூரணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்,
இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் G.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் RVS.ராஜானந்தம் ,
இந்து முன்னணி மாவட்ட செயலாளர்P.விஜயகுமார் (அதிவீரராமபட்டினம்) , மாவட்ட துணைத்தலைவர் M.தமிழ்மோகன் ,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஸ்ரீ அசோக் குமார்,
தஞ்சை நகரப்பொருப்பாளர் ஸ்ரீ செல்லதுறை,
பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் V.பிரபாகரன்,
அதிவீரராமபட்டினம் நகர பொதுச்செயலாளர் S.V.சிவா,
பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஸ்ரீ சுதர்சன்,
பட்டுக்கோட்டை நகர தலைவர் A.S.பிரதாப்குமார்,
பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் G.வெங்கடேஷ்வரன், அதிவீரராமபட்டினம் நகர தலைவர் V.ரமேஷ்,
பட்டுக்கோட்டை நகர துணை தலைவர் A.S.மணிகண்டன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, பொன்.ராமசாமி, A.K.பழனிவேல், சிவேதி.நடராஜன், BA.LLB., M.வீரா, V.சக்கரவர்த்தி, R.ராமநாதன், துரை.சண்முகம், சீதாராமன், S.P.இளங்கோ, பொ.அண்ணராசு B.Sc., M.A.இளஞ்செழியன் M.A., ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி G.S. ராஜகுரு, சாக்கிரடீஸ் M.A.B.L., சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
1. எல்லாவித தரிசன கட்டணத்தையும் ரத்து செய்யவேண்டும்.
2. குத்தகை பாக்கிகளை கண்டிப்புடன் வசூல் செய்யவேண்டும்.
3. கடைகளில் வாடகை பாக்கிகளை முறையாக வசூல் செய்யவேண்டும்.
4. முஸ்லீம், கிருஸ்தவர்கள் பினாமியாக கடைகள் வாடகைக்கு கொடுப்பதை
நிருத்தவேண்டும்.
5. முஸ்லீம், கிருஸ்தவர்கள் ஹிந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதை
அகற்றவேண்டும்.
6. ஆலய நிலங்களை ரியலெஸ்டேட்காரர்கள் அபகரிப்பதை தடுத்து
நிருத்தவேண்டும்
7. உண்டியல், விக்ரகங்கள், நகைகள் திருட்டுப்போகாமல் இருக்க தகுந்த
காவல் ஏற்பாடு செய்யவேண்டும்.
8. சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பவர்களுக்கு ஆயுல்தண்டனை
வழங்கவேண்டும்.
9. கோவில் நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடக்கூடாது.
10. கோவில் நிதியை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பளத்திற்காக சம்பந்தி
போஜனத்திற்கு எடுக்கக்கூடாது.
11. பண்டிகை காலங்களில் விடப்படும் சிறப்பு பேருந்து கட்டணங்கள்
உயர்வதை ரத்து செய்யவேண்டும்.
12. நாத்திகர்களையும், அரசியல் வாதிகளையும் அறங்காவலர்களாக
நியமிக்கக்கூடாது.
13. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு ஆங்கிலப்புத்தாண்டுக்காக இந்து
ஆலயங்களை திறக்கக்கூடாது.
14. கோவிலுக்கு உரிய நிலங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
15. தற்போதைய மதிப்புப்படி வாடகை, குத்தகைகளை நிர்ணயம்
செய்யவேண்டும்.
16. கோவில் சொத்துக்களை, வாடகை, குத்தகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை கோவில் முன்பாக எழுதி வைக்கவேண்டும்.
17. கோவில் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு
வைக்கவேண்டும்.
18. கோவில் பெயர்களுக்கு தீவிபத்து நடக்காதபடி தகரசெட் அமைத்து
பூட்டுபோடவேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பேராவூரணி ஸ்ரீ.லோகேஷ்வரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் நகர, ஒன்றிய, கிராம கிளை நிர்வாகிகள், இந்து முன்னணி தொண்டர்கள், ஹிந்து இளைஞர்கள், மற்றும் ஊர் பெரியவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.












அதற்கிடையே ஜூலை 19 ஆம் தேதி ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்டார் – மிகக் கொடூரமான விதத்தில். இப்போது காவல்துறையின் சிறப்பு அதிகாரி கூட இந்த தொடர் கொலைகள் எல்லாம் தனிப்பட்ட விரோதம் என்கிற தொனியில் ஒரு அறிக்கை விட்டார். ஆனால் என்ன ஆயிற்று? இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலரை காவல்துறை கைது செய்தது. ஒரு சதி வலைப்பின்னல் இருப்பது கண்டறியப்பட்டது. 2011 இல் மதுரை, திருமங்கலத்தில், திரு. அத்வானி அவர்கள் வருகையின் போது அவரை கொல்ல பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர். இவர்களுடன் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில், நாகூர் அபுபக்கர் சித்திக் ஆகியோரும் உண்டு. இவர்கள் தேடப்பட்ட உடனேயே தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு இந்த தொடர்கொலைகளுக்கும் தொடர்பு உண்டு என புலனாய்வு துறை சந்தேகித்தது. இதே காலகட்டத்தில் நெல்லை மேலப்பாளயத்தில் 17 கிலோ வெடி மருந்துகளுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். மட்டுமல்ல கட்டை சாகுல் என்பவரின் வீட்டிலிருந்து ரூ 6 இலட்சம் கண்டெடுக்கப்பட்டது. இந்து அமைப்பினரை கொலை செய்ய பண உதவி திரட்டப்பட்டு இவை செயல்படுத்தப்படுவது தெரிந்தது. இதற்கு பின்னர்தான் ஆந்திரா எல்லையில் போலீஸ் பக்ருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
உதாரணமாக போலீஸ் பக்ருதீன் கைது செய்து சில நாட்களில் ‘மவுண்ட்ரோடு மாவோ’ என அழைக்கப்படும் ‘தி இண்டு’ என்கிற சீன-சிங்கள மார்க்சிய பிரச்சார நாளேடு ஒரு நெஞ்சை உருக்கும் காதல் கதையை வெளியிட்டது. அதில் போலீஸ் பக்ருதீன் என்கிற கொலைகாரனின் உள்ளே எத்தனை நல்ல காதலன் ஒருவன் இருக்கிறான் என அது கூறியது. காவல்துறை அந்த காதலை பயன்படுத்தி அவனுக்கு வலை விரித்தது. அவனது காதலியும் மனைவியுமான இளம் பெண் படும் கஷ்டத்தை நெஞ்சுருக விவரித்தது. இனி என்ன! போலீஸ் பக்ருதீன் பெயரில் காதல் கதை எடுக்க கோடம்பாக்கத்திலிருந்து அமீரும் அங்கே மும்மரமாக இயங்கி வரும் மதமாற்ற கும்பலும் வர வேண்டியதுதான் பாக்கி. போலீஸ் பக்ருதீன் குறித்து ஹிந்து விரோத பிரச்சார நாளேட்டில் சொல்லப்படுவதை கவனியுங்கள்: “கல் நெஞ்சையும் கரைத்த காதல் கதையை அறிய மதுரையில் நாம் விசாரணையை துவக்கினோம். “அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று திரும்பியபோது, பக்ருதீனுக்கு ஏரியாவுக்குள் ஹீரோ இமேஜ் உருவானது. அப்போது மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காதலித்தார். வயதில் பாதிதான் இருக்கும் அந்த பெண்ணும் விரும்பியிருக்கிறார். … இஸ்லாம் முறைப்படி, மகராக (பணம், பொருள்) அந்தப் பெண்ணுக்கு பக்ருதீன் 2 பவுன் சங்கிலி கொடுத்தான். ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை. ஏரியாவே அவன் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசியது” என்றார்கள் ஏரியாவாசிகள். யார் கண்பட்டதோ அந்த புதுவாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதி இளைஞர் ஒருவர் கூறுகையில் “திருமணத்தின் போது அந்தப் பெண்ணுக்கு வெறும் 14 வயது தான். பாவம், குடும்பம் நடத்தும் அளவுக்கு பக்குவமும் இல்லை. பக்ருதீனுக்கு மனைவி மீது அளவுகடந்த பாசம். ஆனால், தீவிரவாதத் தொடர்பு மற்றும் போலீஸ் தொந்தரவு காரணமாக அவனால், நிம்மதியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை. ” வார்த்தைகளை கவனியுங்கள். படிக்கும் போது உங்களுக்கு நாயகன் திரைகதை நினைவுக்கு வந்தால் கூட ஆச்சரியமில்லை. 14 வயது பெண்ணை சட்டவிரோதமாக பால்ய விவாகம் செய்திருக்கிறான் ஒரு கொலைகாரன். ஆனால் தி இண்டு பத்திரிகைக்கோ அவனை ஒரு ஹீரோவாக காட்டுவது நியாயமாக இருக்கிறது. யார் கண்டது நிர்ப்பந்தமாக கூட இருக்கலாம்!
மெல்ல அறிவுசீவி கூலி போராளிகள் ’சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய’ இளைஞர்கள் குறித்து ஆரம்பிப்பார்கள். காவல்துறைக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்படும். இதை ஏற்கனவே இவர்கள் செய்து வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 70 பேருக்கு மேல் காவு வாங்கிய இஸ்லாமிய பயங்கரவாத வெறிச்செயலான கோவை குண்டு வெடிப்பில் இதை இவர்கள் செய்தார்கள். இன்றைக்கும் பெங்களூர் குண்டு வெடிப்பில் கைதாகி உச்சநீதி மன்றத்தால் பிணை கூட மறுக்கப்பட்ட மதானி கோவை குண்டு வெடிப்பு சிறை கைதியாக பல்லாண்டு இருக்க வைக்கப்பட்டான். அவனது விசாரணை வேண்டுமென்றே கால தாமதமாக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பின்னர் சிறை சாலையிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டான். அவனது குடும்பத்தினரின் சோக கதைகள் பத்திரிகைகளில் எழுதப்பட்டன.
அறிவுசீவி கும்பல்கள் 2004-2006 வரை தீவிரமாக அவனை விடுவிக்க ஒரு கையெழுத்து இயக்க நாடகத்தை நடத்தின. அவனுக்கு அரசு செலவில் ஆயுர்வேத மசாஜ் அறிவிக்கப்பட்டது. பின்னர் கோவை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான். பின்னர் அவனேதான் பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டான். இவனது விடுதலையை எதிர்த்து தமிழக அரசோ காவல்துறையோ மேல் முறையீடு செய்தனவா? குறைந்த பட்சம் கோவை குண்டு வெடிப்பில் பலியான 70க்கும் மேற்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க இந்து இயக்கங்கள் செய்தனவா? அவை மேல் முறையீடு செய்ய முடியுமா? இந்த கேள்விகள் அப்படியே நிற்கின்றன. இதற்கிடையில் 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை அடைய செய்யப்பட்ட மதானி 2008 பெங்களூர் குண்டு வெடிப்பு சதியில் கைதானான். அவனுக்காக வாதாடுகிறவர் வேறு யாருமில்லை. பரம சுத்தமான ஆம் ஆத்மி கட்சியில் பூஷண் வக்கீலேதான். 2012 இல் நீதியரசர் சதாசிவம் தலைமையிலான உச்ச நீதி மன்றம் பிணைக்கான கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இப்போது மீண்டும் பூஷண் மதானியின் உடல்நிலை அடிப்படையில் பிணை கேட்க, உச்ச நீதிமன்றம் தேவையாக இருக்கும் பட்சத்தில் மணிபால் மருத்துவமனையில் அவனுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமென்றும் அப்போது உற்றார் உடனிருக்கலாம் என்றும் ஆனால் பிணை கொடுக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறது. இதை பயன்படுத்தி மதானி மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்பதால் இவனுக்கு உண்மையிலேயே மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்பதை தேசிய நலனில் அக்கறை உள்ள வழக்கறிஞர்கள் அமைப்புகள் கண்டறிய வேண்டும்.
2014 ஜூன் இல் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்ஜி அவர்களை கொடூரமாக கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் என்கிற பழனி பாபு 1998 கோவை குண்டு வெடிப்பில் கைதானவன். 27 ஜூன் 2006 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் (நீதியரசர் கற்பகவிநாயம் & ராமலிங்கம்) இவன் மற்றும் எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை நீதிமன்றத்துக்கு திருப்திகரமாக நிரூபிக்கவில்லை என ஐயத்தின் பலனால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டான். தமிழ்நாடு காவல்துறையும் உளவுத்துறையும் கோவை குண்டு வெடிப்பின் பிரதான குற்றவாளி மதானி தொடங்கி அப்துல் கரீம் வரை என அனைவரையும் இத்தனை பலவீனமான குற்றச்சாட்டில் கைது செய்யும் திறமையற்றவர்கள் அல்ல என்பதும் உலகத்தரம் கொண்டவர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள். சமூகத்தின் அக்கறையின்மை. இதற்கு நாம் கொடுக்கும் விலை இது. வெள்ளையப்பன்ஜி எனும் தேசபக்தரின் பலிதானத்தின் ஒன்றாம் ஆண்டு நினைவேந்தல் இன்று. இன்று இந்துக்களாகிய நாம் ஒரு உறுதி ஏற்கவேண்டும். இயக்க ரீதியாக அமைப்பு ரீதியாக இந்த வழக்குகளின் போக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம். ஊடகங்கள் மூலம் தொடர்ந்து நம் பலிதானிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அந்த உணர்வை மறக்காமல் முன்னெடுப்போம். வந்தே மாதரம்!