Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

12 ஜனவரி 2014

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா

திருவாதிரையான்



உலக இளைஞர்களின் வாழ்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தி தனது எழுச்சிமிக்க சொற்பொழிவுகளின் மூலம் இளைஞர்களை நெறிபடுத்தி வாழச்செய்த மாகா புருஷரும், சிகாகோ சர்வமத மாநாட்டில் உறையாற்றி உலமே ஹிந்து தர்மத்தை வியந்து உற்றுநோக்ககச்செய்த ஹிந்து ஆன்மீக வாதியுமான சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் இளைஞர்கள் தினமாக வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து அமைப்புகள் சுவாமியின் 150-வது ஜெயந்தியை கடந்த ஓராண்டை விவேகானந்தர் ஆண்டாக கொண்டாடிவருகின்றன. இதனை முன்னிட்டு 12.01.2014 ஞாயிற்றுகிழமை 150-வது ஜெயந்தி  தமிழகம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிலைகளிலும் கொண்டாடிவருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று(12.01.2014) காலை 8.00 மணியளவில் அதிவீரராமபட்டினம் பழஞ்செட்டித்தெருவில் உள்ள பயனிகள் நிலற்குடைக்கு அருகில் அதிவீரராமபட்டினம் நகர இந்து முன்னணியின் சார்பில் சுவாமி விவேகானந்தர் 150-வது ஜெயந்திவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

பாரத அன்னையின் படமும் சுவாமி விவேகானந்தரின் படமும் மலர்களால் அலங்கறிக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்து முன்னனி மாவட்ட பொருப்பாளர்கள் அதிவீரராமபட்டினம் ப.விஜயகுமார் ஜீ, பட்டுக்கோட்டை RVS.ராஜானந்தம் ஜீ, ஒன்றிய பொருப்பாளர்கள் V.பிரபாகரன் ஜீ, பாலா ஜீ, அதிவீரராமபட்டினம் நகர இந்து முன்னனி நிர்வாகிகள் V.ரமேஷ் ஜீ, V.சிவா ஜீ மற்றும் கிளையின் பொருப்பாளர்கள் தலைமையில் நகர ஒன்றிய இந்து முன்னனி நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும் மலர்தூவி வணங்கினர்.





விழாவின்போது மாவட்ட பொருப்பாளர் ப.விஜயகுமார் ஜீ இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் போதனைகளை வழங்கினார். நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக