Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

05 பிப்ரவரி 2012

இந்தியாவின் கபட மதச்சார்பின்மைவாதிகள்.


February 3, 2012
ஆங்கிலத்தில் எஸ்.குருமூர்த்தி  
தமிழில் ல.ரோஹிணி 
மதசார்பற்ற இந்தியாவின் உண்மையான சொரூபத்தை இனம் கண்டு கொள்ள மக்பூல் பிடா ஹுசைனும், சல்மான் ருஷ்டியும் மிகச் சிறந்த ஒப்பீட்டாளர்களாக, மாறுபட்டவர்களாக  உள்ளனர். இருவருமே பிறப்பால் முஸ்லிம்கள். இருவருமே காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவின் பம்பாய் பகுதியில் பிறந்தவர்கள். சல்மான் ருஷ்டி குழந்தையாக இருந்த போது ஹுசைனுக்கு வயது 32. ஹுசைன் சென்ற வருடம்தான் இறந்தார். ஹுசைன் ஒரு ஓவியர். ருஷ்டி ஒரு எழுத்தாளர். இருவருமே உலக அளவில் புகழ் பெற்றவர்கள். ஹுசைன் தான் வரைந்த ஓவியங்களால் புகழ் அடைந்தார். ருஷ்டி தன்னுடைய எழுத்துகள் மூலம் புகழ் பெற்றார். 2006 ஆம் ஆண்டு குவெட்டார் நாட்டுக்கு குடி பெயர்ந்து அந்நாட்டு குடிமகன் ஆனார்  ஹுசைன். அதுவரை தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஹுசைன் இந்தியாவில்தான் கழித்தார். ஆனால் சல்மான் ருஷ்டி பிரிட்டனில், பிரிட்டிஷ் குடிமகனாக வாழ்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பு நிறைந்த முஸ்லிம்களைத் தொட்டதால் ருஷ்டிக்கு எதிராக முஸ்லிம்கள் திரும்பினர். உணர்ச்சி அவ்வளவாக இல்லாத ஹிந்துக்களை ஹுசைன் எரிச்சல் மூட்டினார்.
முதலில் ஹுசைனை எடுத்துக் கொள்வோம். இவ்வாறுதான் ஹுசைன் ஹிந்துக்களுக்கு எரிச்சல்  உண்டாக்கினார். மிக நேர்த்தியாக உடை உடுத்திக் கொண்டிருக்கும் எல்லா ஹிந்து கடவுள்கள், ஹிந்து தேவியர்களை தன்னுடைய கற்பனை திறனைக் கொண்டு, தன்னுடைய ஓவியத்திறனைக் கொண்டு, ஹுசைன் நிர்வாண மாக்கினார். கோடிக்கணக்கான  ஹிந்துக்கள் வழிபடும் ஹிந்துக் கடவுளர்களை ஹுசைன் நிர்வாணமாக வரைந்து, தன்னுடைய புகழைப் பயன்படுத்தி, அந்த ஓவியங்களை விற்றுக் காசாக்கினார்.
லக்ஷ்மிதேவி விநாயகரின் தலையில் நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஓவியத்தை ஹுசைன் தீட்டினார். துர்காதேவி புலியுடன் புணர்ச்சி செய்யும் ஓவியமும் ஹுசைன் தீட்டியதே. சரஸ்வதிதேவி நிர்வாணமாக வீணையைக் கையில் வைத்துக் கொண்டு இருக்கும் ஓவியத்தை ஹுசைன் வரைந்தார். பார்வதிதேவி நிர்வாணமாக தன்னுடைய மகன் கணேசருடன் இருக்கும் ஓவியமும் ஹுசைனின் கை வண்ணத்தில் உருவானதுதான். ஹனுமானை ஹுசைன் நிர்வாணமாக வரைந்து நிர்வாணமாக இருக்கும் ராவணின் தொடையில் சீதாதேவி நிர்வாணமாக உட்கார்ந்து இருப்பதை பார்ப்பது போல் சித்தரித்து இருந்தார். பாரதமாதாவை ஹுசைன் இரண்டு முறை நிர்வாணமாக ஓவியம்  வரைந்து இருந்தார். ஒரு ஓவியத்தில் பாரத மாதாவின் நிர்வாண உடலில் இந்தியாவின் மாநிலங்களின் பெயரை வரைந்து இருந்தார். இன்னொரு ஓவியத்தில் வங்காள விரிகுடா கடலில் ஒரு நிர்வாண சாது உட்கார்ந்து இருப்பதுபோல் வரைந்து இருந்தார்.
ஆனால் முஸ்லிம்களை ஓவியம் தீட்டும் போது ஹுசைனின் அணுகு முறை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. முற்றிலும் நன்றாக உடை உடுத்திக் கொண்டு இருந்த ஒரு முஸ்லிம் அரசனை ஹுசைன் ஓவியம் வரைந்து பக்கத்தில் ஒரு நிர்வாணமாக நிற்கும் பிராம்மணனை சித்தரித்து இருந்தார். தான் வரைந்த முஸ்லிம் பெண்கள் உருவங்களை ஹுசைன் முற்றிலுமாக ஆடையால் மறைத்து இருந்தார். அந்த முஸ்லிம் பெண்கள் ஓவியங்களுக்கு “பர்தா” கூட போட்டு இருந்தார். ஹுசைனின் மனைவி மற்றும் மகளின் ஓவியங்கள் கூட இவ்விதம்தான் மறைக்கப்பட்டு இருந்தன. தான் வரைந்த முஸ்லிம் கவிஞர்களின் உருவங்கள் அனைத்தையும்  முழுவதுமாக உடை உடுத்திக் கொண்டு இருப்பதுபோல்தான் ஹுசைன் ஓவியம் தீட்டி இருந்தார்.
ஹுசைனின் மூளை குழம்பிய கிறுக்குத்தனமான ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தும்  இத்தகைய ஓவியங்களைப் பார்த்த சில ஹிந்துக்கள், அவருடைய ஓவியக் கண்காட்சிகள் நடக்கும் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அவருக்கு எதிராக குற்ற வழக்குகளைத் தொடுத்தனர். தனக்கு எதிர்ப்பு அதிகமாவதையும், தனக்கு எதிராக வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படுவதையும் கண்டு ஹுசைன் இந்தியாவில் இருந்து வெளியேறினார். இந்திய அரசாங்கம், நீதித்துறை, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என எல்லோருமே ஹுசைனின் “கருத்து சுதந்திரத்தை” பாதுகாக்க வேண்டும் என ஓரணியில் திரண்டு எழுந்தனர். ஹிந்துக்களை புண்படுத்த, அவர்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்த ஹுசைனுக்கு உள்ள உரிமை மதிக்கப் பட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். ஹுசைனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் எவருமே அவர் கொல்லப்பட வேண்டும் என்று ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. ஹுசைனுக்கு எதிரான போராட்டங்களில் ஒருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை ஒருவரும் கொல்லப் படவில்லை. ஒருவரும் புண்படுத்தப்படவில்லை. இருந்தும் கூட ஹுசைனுக்கு எதிராக போராடியவர்களை “இந்தியாவின் மதசார்பற்றவாதிகள்”  “காவி பயங்கரவாதிகள் ” என்று அடைமொழி சூட்டினர்.
இப்போது ஹுசைனின் நிலைக்கு மாறுபாடாக இருக்கும் சல்மான் ருஷ்டிக்கு வருவோம். ”சாத்தானின் வரிகள்” என்னும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதியதிலிருந்து ருஷ்டியின் வாழ்க்கை ஒரு “வாழும் நரகமாக” மாறிவிட்டது. இப்போது சல்மான் ருஷ்டி உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் பெப்ரவரி 4,1989 ஆம் ஆண்டில் ஆயதுல்லா கொமைனி ருஷ்டியைக் கொல்லுமாறு பாத்வா இட்டதில் இருந்து சல்மான் ருஷ்டி லட்சம் முறையாவது செத்து செத்துப் பிழைத்து இருப்பார். ஆனால் ஆயதுல்லா கொமைனி இன்னொரு சக முஸ்லிமை ஏன் கொலை செய்யச்  சொல்லி பத்வா பிறப்பிக்க வேண்டும்?
ஆயதுல்லா கொமைனி
1988 ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி இந்த புத்தகத்தை எழுதினார். இப்போது ஒரு தலைமுறையே அதன் பிறகு வந்துவிட்டது. எனவே கொஞ்சம் சரித்திரத்தை பார்ப்போம். ருஷ்டியின் புத்தகம்  இஸ்லாமில் சர்ச்சைக்குரிய ஒரு பாரம்பரியத்தைப் பற்றி பேசுகிறது. அதன்படி, முஹம்மது குரானில் மூன்று வாக்கியங்களை (சுறா) சேர்த்தார். மெக்காவில் வழிபாடு செய்யப்பட்ட மூன்று தேவிகளை தெய்வீகமாக ஏற்றுக் கொண்டு அவர் இந்த மூன்று வாக்கியங்களை குரானில் சேர்த்தார். (முகம்மதுவை சல்மான் ருஷ்டியின் புத்தகத்தில் மகௌந்த் என்று குறிப்பிட்டுள்ளனர்). ஆனால் பிறகு முஹம்மது இந்த மூன்று வாக்கியங்களை நீக்கிவிட்டார். மெக்காவில் இருந்தவர்களை தாஜா செய்ய சாத்தான் இந்த மூன்று வாக்கியங்களையும் சேர்க்க தன்னை மயக்கிவிட்டதாக முஹம்மது கூறி அவற்றைப்  பிறகு நீக்கி விட்டார். இந்தப் பின்னணியில்தான் சல்மான் ருஷ்டி தான் எழுதிய புத்தகத்திற்கு “சாத்தானின் வரிகள்” என்று பெயர் சூட்டினார். சர்ச்சைக்கு உள்ளான அந்த மூன்று வரிகளை குறிப்பிட்டுத்தான்  ருஷ்டி தன்னுடைய புத்தகத்திற்கு  சாத்தானின்  வரிகள் என்று பெயர் சூட்டினார்.ருஷ்டீயின் புத்தகத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர்.
சல்மான் ருஷ்டியைக் கொலை செய்வதற்காக  முஸ்தபா மஹ்மூத் மழெஹ் (Mustafa Mahmoud Mazeh) என்பவர் சதி செய்தார். இதற்காக குண்டு தயாரித்துக் கொண்டு இருக்கும் போது லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் விபத்தில் குண்டு வெடித்து சிதறி அவர் இறந்தார். ஹிடோஷி இகரஷி (Hitoshi Igarashi) என்னும் ஜப்பானியர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாக 1991  ஜூலை மாதத்தில் அவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதே மாதத்தில் ருஷ்டியின் புத்தகத்தை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்த எட்டோரே காப்ரிலோ (Ettore Capriolo) என்பவர் கத்திக்குத்துக்கு ஆளானார். அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. துருக்கிய மொழியில் ருஷ்டியின் புத்தகத்தை அஜிஸ் நேசின் (Aziz Nesin) என்பவர் மொழி பெயர்த்தார். இதனால் அவரைக் குறி வைத்துத் தாக்கினார்கள். இதன் பின்னணியில் நிகழ்ந்த கலவரங்களில் ஜூலை 1993 இல் 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நார்வே நாட்டில் ருஷ்டியின் புத்தகத்தை வில்லியம் ந்யகார்ட் (William Nygaard)  என்பவர் வெளியிட்டார். அக்டோபர் 1993 இல் ஒஸ்லோவில் அவரை அனேகமாக கொன்று விட்டனர். அந்த அளவுக்கு அவரை மிருகத்தனமாக தாக்கினர். பெல்ஜியம் நாட்டில் இரண்டு முஸ்லிம் தலைவர்கள் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று ஆயதுல்லா கொமைனி பிறப்பித்த  பாத்வாவை எதிர்த்தனர். இதற்காக அவர்களைக் கொலை செய்தனர். கலிபோர்னியாவில்  இரண்டு புத்தகக் கடைகளையும் இங்கிலாந்தில் ஐந்து புத்தகக் கடைகளையும் தீ வைத்துக் கொளுத்தினர். மும்பையில் நடந்த கலவரங்களில் 12 பேர் கொல்லப் பட்டனர். இந்த கொடூர சம்பவங்களின் பட்டியல் இதோடு முடிவது இல்லை .ஆனால் அவைகள் அனைத்தையும் விளக்க இங்கு இடம் இல்லை!
அன்று ஆரம்பித்த அந்த சமயத்தில் இருந்து  இன்றுவரை ருஷ்டியின் பெயர் தப்பான காரணங்களுக்காக  தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகிறது. இப்போது ருஷ்டியின் பெயர் மீண்டும் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. ஜெய்பூர் இலக்கிய விழா 2012 க்கு சல்மான் ருஷ்டியை அழைத்து இருந்தார்கள். இந்த விழா ஆசியாவில்  மிகப் பெரியதாகும். இந்த விழா ஒரு வாரத்திற்கு முன்புதான் நடைபெற்றது. முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்தப் போவதாக அச்சுறுத்தினர். ருஷ்டி வந்திருந்தால்  வன்முறை வெடித்து இருக்கும். எனவே இந்தியா புலனாய்வுத் துறை ஒரு செய்தியை இட்டுக் கட்டியது. 4  ஆயுதம் தாங்கிய கொலையாளிகள் ருஷ்டியைக் கொல்ல திரிந்து கொண்டு இருப்பதாக அது ஒரு புளுகு மூட்டையை  அவிழ்த்துவிட்டது. இது ஒரு போலி கட்டுக்கதை என்பது இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது. ருஷ்டியை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ருஷ்டியின் சாத்தானின் வரிகள் புத்தகத்தில் இருந்து சிலவற்றைப்  படித்த  4 பேர் கைதாகாமல்  தப்பிக்க இந்தியாவில் இருந்து ஓடி விட்டனர். வில்லியம் டல்ர்யம் ப்லே  என்னும்  நபர்தான் இந்த விழாவின் டைரக்டர். அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இறுதியாக ருஷ்டியின் வீடியோ உரையைக் கூட ரத்து செய்தனர். ஏன் என்றால் விழாப் பந்தலுக்கு வெளியே இருந்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களால் உள்ளே பங்கெடுத்துக் கொண்டு இருந்த இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று காரணம் சொன்னார்கள்.
ஹுசைனுக்கும் ருஷ்டிக்கும் இடையே உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக் கனியாகும். இஸ்லாமில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை பற்றி எழுதியதற்காக  ருஷ்டியை பல வருடங்களாக வேட்டை ஆடி வருகின்றனர். இப்போது கூட ருஷ்டிக்கு கொலை மிரட்டல் தொடர்கிறது. ருஷ்டியுடனோ அல்லது அவர் எழுதிய புத்தகத்துடனோ  எந்த சம்பந்தமும் இல்லாத பலரும் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இப்போது கூட ருஷ்டியின் பெயரால் பலர் கொலை செய்யப்படும் அபாயம் நீடிக்கிறது. ஜெய்பூர்  இலக்கிய விழா இந்த விஷயத்தை வெளிப் படையாக்கி உள்ளது .
ஆனால் ஹுசைன் சுதந்திரம் என்ற பேரால் ஹிந்துக்களை புண்படுத்தினார். மகாத்மா காந்தி உலகத்தில் ஹிந்துக்கள்தான்  மிகவும் மென்மையானவர்கள், மிக அதிக பட்ச நாகரீகம் உடையவர்கள் என்று சொன்னார். ஹுசைனுக்கு ஹிந்துக்களிடம் இருந்து சாதரணமான  எதிர்ப்புகள்தான் வந்தன. ருஷ்டியின் புத்தகத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கட்டு அவிழ்த்து விட்ட வன்முறையுடன் ஒப்பிடும் போது ஹுசைனுக்கு எதிராக ஹிந்துக்கள் நடத்திய எதிர்ப்புகள் “ஒரு எறும்பு கடிப்பது போல்தான்  இருந்தன”. இத்தனைக்கும் ஹுசைனின் கிறுக்குத் தனமான ஓவியங்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களின்  மத உணர்வுகளை, நம்பிக்கைகளை குதறிக் கிழித்து இருந்தன. ஹுசைனின் செயல்கள் ஹிமாலய தவறாக அதுவும் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்ததாக அமைந்து இருந்தன. ஆனால் இவை அனைத்திலும்  கொடுமையான  அவமானம் என்னவென்றால் “முரண்பாடு நிறைந்த அரசியல் ஆகும்.” ஹிந்துக்களை காயப்படுத்த, ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்த, ஹிந்து தேவியர்களை இழிவுபடுத்த  ஹுசைனுக்கு உரிமை உள்ளது என்று மதசார்பின்மை ஊடகங்களும், கட்சிகளும், தலைவர்களும்,  அரசுகளும் “பேச்சு, எழுத்து சுதந்திரத்தின் பெயரால்” மல்லு கட்டி நின்றனர். ஆனால் இதே மதசார்பின்மை  கபட வேஷதாரிகள் முஸ்லிம்களைக் காயப்படுத்த சல்மான் ருஷ்டிக்கு உரிமை உள்ளதை மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக சல்மான் ருஷ்டி மீது அவர்கள் வசை மாறி பொழிந்தனர்.இப்போது இதைவிட இன்னும் ஒரு பெரிய அவமானம் ஏற்ப்பட்டுள்ளது .ஹுசைனின் ஓவியக் கண்காட்சிகளில் ஹிந்து கடவுளர்களை இழிவு படுத்தும் ஓவியங்கள் இடம் பெறக் கூடாது என்று இயல்பான முறைகளில் ஹிந்துக்கள் போராடினர் . ஆனால் மதசார்பின்மை வாதிகள் “சகிப்புத்தன்மையை” சுட்டிக்காட்டி ஹிந்துக்கள் அவ்வாறு போராடக் கூடாது என்று உபதேசம் செய்கின்றனர். இந்த மதசார்பற்ற வாதிகளின் பட்டியலில் ஊடகங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த “மதசார்பின்மைவாதிகள்” முஸ்லிம்களின் வன்முறைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இன்றுவரை பேசவில்லை. சகிப்புத்தன்மையோடு இருக்குமாறு முஸ்லிம்களை அவர்கள் கேட்கவும் இல்லை. இதற்கான காரணம் மிகவும் தெளிவு .இந்த மதசார்பின்மை வாதிகள் “அயோக்யர்கள்” “நேர்மை இல்லாதவர்கள்”.
சல்மான் ருஷ்டியின் புத்தகம் தங்களைப் புண்படுத்தி விட்டடாக முஸ்லிம்கள் கருதியது நியாயமே. இதே மாதிரிதான் ஹுசைனின் அயோக்யத்தனமான, ஹிந்துக்  கடவுளர்களை இழிவு படுத்திய ஓவியங்கள் ஹிந்துக்களை காயப்படுத்தின. மிக அதிகமாக  உணர்ச்சி வசப்படும் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு. தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். ருஷ்டி, ஹுசைன் இருவருமே தவறு இழைத்து விட்டனர் என்று சொல்வதற்கு மாறாக, மதசார்பின்மைவாதிகள் ருஷ்டீயின் மீது குற்றம் கண்டு பிடித்தனர். ஹுசைனை புகழ்ந்தனர். ஏன்? என்ன காரணம்?
ஒருவர் ஹிந்துக்களின் உணர்வுகளை எட்டி உதைத்து, மிதித்து, ஹிந்துக்களின் உணர்வுகளைக்  கண்டு கொள்ளாமல், அதே சமயம் முஸ்லிம் உணர்வுகளை மதிப்பது போல் நடிப்பது அவரை “மதசார்பின்மைவாதி “ஆக்க போதுமானதாகும். இத்தகைய மதசார்பின்மை ஆபத்து நிறைந்தது. பித்தலாட்டமானது.
இக்கட்டுரை தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் கடந்த 31/01/2012 தேதியன்று பிரசுரமானது. அதைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக