Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

21 நவம்பர் 2012

பச்சை பயங்கரவாதி கசாப் தூக்கில் இடப்பட்டான்; மும்பை தாக்குதல் நடந்து 4 ஆண்டுக்குப் பின் நிறைவேற்றம்



புதுடில்லி: மும்பை தாக்குதல் பச்சை பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டான். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பச்சை பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட, சிறப்பு கோர்ட்டில், நடைபெற்றது; அதில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்ததுள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்த கசாப், புனே எர்வாட சிறைக்கு மாற்றப்பட்டு உடனடியாக இன்று காலை 07:30 மணிக்கு தூக்கில் இடப்பட்டான்.

நன்றி : www.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக