Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

11 நவம்பர் 2012

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 10

ம.வெங்கடேசன்

periyar_marubakkam 
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் முரணானவையே!
சாமி சிதம்பரனார் ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தில் ‘சொல்லும் செயலும்’ என்ற தலைப்பில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். அதாவது இறுதிவரை ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார் என்ற கருத்திலே சாமி சிதம்பரனார் சொல்கிறார்:-
nagammaiyar_periyar

‘‘அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம் அழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது. பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”
சாமி சிதம்பரனார் குறிப்பிட்டுள்ள இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தி. க. நண்பர் ஒருவரிடம் ‘‘இறந்தபின் அவர்களுக்காக அழுவது கூட தவறா?’’ என்று கேட்டபோது, அந்த நண்பர் ‘‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’’ ஒரு பகுத்தறிவுவாதி. பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்று பெரியார் சொல்லிவிட்டார்’’ என்று கூறினார். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இந்த நிகழ்ச்சி ‘சொல்லும்-செயலும்’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. முன்னரே கூறியபடி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் இறுதிவரை ஒன்றாகவே இருக்கும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக் கூறுப்பட்டுள்ளது. வீரமணியும் 14-08-98 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேசும்போது ‘‘தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினார்களோ அதைச் செய்தார்கள். எதைச் செய்தார்களோ அதை மட்டும்தான் பேசினார்கள். இதுதான் பெரியாரின் ஒரு தனித்தன்மை. சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற அந்தக் கட்டத்திற்கு அய்யா அவர்கள் போகவில்லை’’ என்று சொல்கிறார்.
இவர் சொல்கின்றாற்போல ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்ததா? வீரமணி சொல்வதும் கூட உண்மையா?
rajajiபேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலில் “தமது தள்ளாத வயதிலும் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் பெரியார் கண்ணீர் உகுத்ததும் இன்னும் நம் கண்களில் நிற்கிறது’’ என்று குறிப்பிடுகிறார். இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மேலும் ஓர் ஆதாரம் இதோ!
சின்னராசு அவர்கள் ‘சோவின் குடுமி சும்மா ஆடாது’ என்ற புத்தகத்தில் ‘மூதறிஞர் காலமாகி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்த நேரம், தள்ளாத வயதிலும் மயானத்திற்கே வந்து பெரியார் சிறுபிள்ளை மாதிரி குலுங்கி குலுங்கி அழுதாரே’ என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு எதை விளக்குகின்றன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் எதைச் சொன்னரோ அதைச் செய்யவில்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் வீரமணி என்ன சொல்கிறார்? தந்தை பெரியார் அவர்கள் எதைப் பேசினாரோ அதைச் செய்தார்கள் என்று சொல்கிறார். அதனால் வீரமணி எழுதிய புத்தகத்திலிருந்தே வீரமணி சொன்னது பொய் என்று நிரூபிக்கலாம். இதோ!
வீரமணி கூறுகிறார்:- ‘‘கொள்கைகளில் நேருக்கு நேர் எதிரியாக இருந்த திரு. ராஜாஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் எத்தனை முறை தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிப் பார்த்தார்கள்!ஆச்சாரியார் மறைந்தபோது முடியாத உடல்நிலையிலும் மயானம் வரை சென்று கசிந்துருகிய தந்தை பெரியாரின் மனிதாபிமானத்தையும்…” சங்கராச்சாரியார் என்ற புத்தகத்திலே இவ்வாறு கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் புகழ்கிறார்.
ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கே படிக்காத காரியத்தை ஈ.வே. ராமசாமி நாயக்கரே செய்கிறபோது அதை பாராட்டுகிறாரே வீரமணி. இதுதான் பகுத்தறிவா? அதாவது பிணத்தைப் பார்த்து மக்கள் அழுவதால் அது மூடநம்பிக்கை; அதே பிணத்தைப் பார்த்து ஈ.வே. ராமசாமி நாயக்கரோ அல்லது அவரது வாரிசுகளோ அழுவதால் அது மனிதாபிமானம்; பகுத்தறிவு. இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அகராதி போலும்!
பிணத்தைப் பார்த்து அழக்ககூடாது என்று கட்டளையிட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர் இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதது ஏன்? சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற அந்த கட்டத்திற்கே ஈ.வே. ராமசாமி நாயக்கர் போகவில்லை என்று வீரமணி பொய் சொல்கிறாரே-அப்படியென்றால் பிணத்தைப் பார்த்து அழக்கூடாது என்று சொன்னக் கட்டத்திலிருந்து இராஜாஜியின் பிணத்தைப் பார்த்து அழுதக்கட்டத்திற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் சென்றது ஏன்?
இதிலிருந்து நமக்கு தெரிவதென்ன?
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை நாம் அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய வாழ்க்கையில் முரண்பாடாக நடந்துக்கொண்டதை மறைத்துப் பொய் சொல்வதுதான் அவருடைய சீடரான வீரமணியின் வேலை. பொய் சொல்வதில் வீரமணியும் விலக்கல்ல என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
இதில் மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது மூன்று மதத்துக்கும் பொதுவான ஏற்றாற்போல நாகம்மையாருடைய பிணத்தை எடுத்துச் சென்று எரிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கின்றனர். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதைவிட ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய கொள்கை முரண்பாடுதான் தெரிகிறது.
எப்படி?
நாகம்மையார் 1933-ல் இறந்தார். 1933-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பழுத்த நாத்திகவாதியாக, பகுத்தறிவாளராக இருந்தார் என்பதை அவருடைய சீடர்கள் சொல்கின்றனர். 1927-லே இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று காந்தியிடம் சொன்னார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்தார். அந்த அளவுக்கு நாத்திகவாதியாக இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய மனைவியின் பிணத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப்படி எடுத்துச்சென்று எரித்தது கொள்கை முரண்பாடு அல்லவா? தன்னுடைய மனைவியின் பிணத்திற்காக எல்லா மதப்படியும் எடுத்துச் சென்றதுதான் பகுத்தறிவா? ஆனால் இவர் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா மதத்திற்கும் எதிராகத்தானே அடக்கம் செய்திருக்க வேண்டும்! அப்படி செய்பவர்தான் நாத்திகவாதி, பகுத்தறிவுவாதியாக இருக்கமுடியும்?
அதைவிட்டு தனக்காக, தன் குடும்பத்திற்காக ஒரு கொள்கையும், மக்களுக்கு ஒரு கொள்கையும் சொல்வதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பகுத்தறிவுக்கொள்கையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக