இந்த நாள் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
ஆங்கிலத்தில்: தருண் விஜய்
தமிழாக்கம்: லா.ரோஹிணி
நம்முடைய தலைவர்களான ஜோஷி, ஹுக்கும் தேவ் நாராயண்ஜி ஆகியோரை ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாராட்டும் போது, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், மகாதாப், காங்கிரஸ் தலைவர்கள் அருண் குமார், பவன் பன்சல் ஆகியோரையும் நான் பாராட்டிப் பேசினேன். அதைக் கேட்டு பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் ஏற்பட்டது. நான் குறிப்பிட்டவர்கள் அனைவருமே ஒரே குரலில், ரஷ்யாவில் பகவத் கீதைக்குத் தடை விதிக்கக் கூடாது என்று பேசினர். எனவேதான் இது போன்ற தேசியப் பிரச்சனைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு, ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டுமே கவலை தருவதாக இருக்ககூடாது என்று நான் குறிப்பிட்டேன். இத்தகைய தேசிய பிரச்சனைகள் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே கவனத்திற்கு உரியதாகும்.இந்த நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். ஏன் என்றால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு “ரஷ்யாவில் பகவத் கீதையை” தடை செய்யும் விஷயத்தில் எல்லா கட்சிகளுமே ஒன்றுபட்டு நின்றனர். இதில் விதி விலக்காக தனித்து நின்றது “இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட்கள்” மட்டுமே.
நம்முடைய சரித்திரத்தில் இந்த நாள் ஒரு பொன்னாள் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடட்டும். இந்த நாளில் எல்லா வேற்றுமைகளும் களையப்பட்டு, இந்தியாவின் நூலான பகவத் கீதையின் பால் ஒருமை உணர்வு வெளிக்காண்பிக்கப்பட்டது. எனவே இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
ரஷ்யாவில் பகவத் கீதாவை தடை செய்ய முயற்சிப்பதைக் கேட்டு பாரத மக்கள், சினம் கொண்டார்கள். வேதனைக்கு ஆட்பட்டார்கள். டிசம்பர் 19 இல் நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் , அருண் குமார் போன்றவர்கள் வெகு மிகத் தெளிவாக பாரத மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசினர். எனவே இந்த நாள் ஒரு பொன்னாள்.
ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விநோதமாக ரஷ்யாவின் வக்கீல் பகவத் கீதையை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துமாறு, தோம்ஸ்க் “டோம்ச்க் மாநில பல்கலைக் கழகத்தைக்” கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இப்பல்கலைக் கழகம் இப்பணியை மேற்கொள்ள தகுதி உடையது அல்ல. சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இப்பல்கலைக் கழகத்தில் இல்லை. இந்திய தேசத்தின் கலாச்சாரம், மொழிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தறிந்து கொள்ளும் நிபுணத்துவம் கொண்டவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் இல்லை. பகவத்கீதைக்கு எதிரான இந்த வழக்கில் “மதப் (கிருஸ்துவ மத) பாரபட்சம் உள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு பெரும்பான்மை மதக்குழுவினர் சகிப்புத்தன்மை அற்று இந்த வஷக்கை தொடுத்துள்ளனர். எனவே ரஷ்யாவில் உள்ள ஹிந்துக்களின் மத வழிபாட்டு உரிமைகளை, அவர்களின் நம்பிக்கைகளைப் பாதுகாக்க ரஷ்ய அரசை வலியுறுத்த வேண்டுமென நான் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பகவத்கீதை வெறுப்பை போதிக்கவில்லை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் ஆணித்தரமாக பேசினார். எனவே இது ஒரு பொன்நாள் தானே?
லாலு பிரசாத் யாதவ் இது விஷயமாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினார். ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறித்தினார். லாலு கூறியதை முரளி மனோகர் ஜோஷியும், ஹரேன்பதக்கும் ஆதரித்து பகவத்கீதையை தடை செய்யும் விஷயம் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள் விவாதம் வேண்டும் என்று கேட்ட போது கொந்தளிப்பான காட்சிகள் நிகழ்ந்தன. இதனால் சபாநாயகர் மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைத்தார். அதன் பிறகு விவாதம் நடைபெறும் என அவர் உறுதி அளித்தார்.
அருண் குமார் உண்டவல்லி ஆந்திரப் பிரதேசக் காங்கிரஸ் உறுப்பினர். முழு மனித சமூகத்தின் நன்மைக்காக கீதையின் கோட்பாடுகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் மிக சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்.
கீதையின் பல ஸ்லோகங்களை தூய சம்ஸ்க்ருதத்தில் அவர் மேற்கோள் காட்டிப் பேசினார். இது அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
உத்திராகண்ட மாநிலத்தைச் சேர்ந்த சத்பால் மகாராஜ் அவை நடவடிக்கைகளின் தலைவராக இருந்தார். அவரும் கீதையின் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். கீதையில் விவரிக்கப்பட்டுள்ள மனிதகுல மேம்பாட்டிற்கான உண்மைகளை அவர் விளக்கினார்.
அதன் பிறகு பா.ஜா.க.வைச் சேர்ந்த ஹுக்கும்தேவ் நாராயண் பேசினார். அவருடைய பேச்சு மிகவும் கவரும் வகையில் அமைத்திருந்தது. ரஷ்யா பகவத் கீதையை தடை செய்வதை எதிர்த்து முழு அவையும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்த ஒற்றுமையைக் கண்டு தாலிபான் மயமாக்கப்பட்ட போலி மதசார்பின்மைவாதிகள் வாயடைத்துப் போயினர். திக்பிரமை பிடித்துப் போயினர். இந்த ஒற்றுமை அவர்களை வாய் பிளக்க வைத்துவிட்டது. இதில் ஏதாவது அரசியல் செய்ய முடியுமா? என்று அவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் “ஹிந்து ஒற்றுமைக்கு மேலாக” “யாதவ ஒற்றுமை” எழுந்து வருவதாக கூறினர். இதற்கு நான் வன்மையாக மறுப்பு தெரிவிக்கிறேன். இப்போது வெளிப்பட்டது ஹிந்து உணர்வின் சாராம்சமாகும். இந்தியாவின் வாழ்க்கை மூல்யங்கள் இப்போது வெளி வந்துள்ளன. இதை எந்த சுனாமியாலும் வீழ்த்திவிட முடியாது. இம்மாதிரி விஷயங்களில் ஏன் ஒரே ஒரு இயக்கமோ அல்லது சித்தாந்தமோ மட்டும் பேச அனுமதிக்கப் படவேண்டும்? அரசியல் செயல்பாடுகள் என ஆயிரம் விஷயங்களில் நமக்குள் வேற்றுமைகள் இருக்கட்டும். ஆனால் நம் அனைவரையும் இந்தியராக இணைக்கும் சில விஷயங்கள் உள்ளன. நம்முடைய அரசியல் சட்டம் மற்றும் மூவர்ணக் கொடிக்கு அதுதான் மூலாதாரமாக உள்ளது.
இக்கட்டுரை டிசம்பர் 21 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும். http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/entry/gita-unites-india-a-historic-day-in-our-history
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து சங்க செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக