Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

09 ஆகஸ்ட் 2011

கச்சத்தீவை பா.ஜ.,வால் மட்டுமே மீட்க முடியும்..

 

ராமேஸ்வரம்: ""தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த கச்சத்தீவை, பா.ஜ.,வால் மட்டுமே மீட்க முடியும்,'' என, பா.ஜ.,வின் அகில இந்திய செயலர் முரளீதர் ராவ் பேசினார். தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்து, நேற்று, ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் பா.ஜ., சார்பில் நடந்த கடல் முற்றுகை போராட்டத்தில் பா.ஜ., அகில இந்திய செயலர் முரளீதர் ராவ் பேசியதாவது: தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு எதிராக போராடும் பா.ஜ., தொண்டர்களுடன் தர்மம் நிற்பதால், பா.ஜ.,வின் போராட்டம் வெற்றி பெறும். சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் உட்பட இலங்கை கடற்படையினரால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகியுள்ளனர். நமது முன்னோர்களின் சொத்தான கச்சத்தீவை, மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்துள்ளது. இங்கு மீனவர்கள் செல்ல முடியவில்லை; படகுகளை நிறுத்தவோ, வலைகளை உலர வைக்கவோ முடியவில்லை. அங்கு நடைபெறும் திருவிழாவிற்கு தமிழர்கள் செல்ல முடியவில்லை. ஆனால், சீன நாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு, கச்சத்தீவில் கூடாரங்கள் அமைத்துள்ளனர். நாம் இதை அனுமதிக்க முடியாது. இழந்த உரிமையைப் பெறுவதற்கு போராடுகிறோம். இலங்கையிலிருந்து வரும் அரசு பிரதிநிதிகளை மன்மோகன் சிங் வரவேற்று உபசரிப்பதால், ராஜாபக்ஷேவுக்கு தமிழக மீனவர்களை தாக்கும் அளவு துணிவு வந்துள்ளது. மத்திய அரசின் கையாலாகாத்தனத்தால், தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை. கச்சத்தீவை மீட்க பா.ஜ., கட்சியால் மட்டுமே முடியும். தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரண்டு கட்சிகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை காட்டவில்லை. விரைவில் இலங்கை செல்லும் பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ், அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து, தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், இலங்கை கடற்படையினரின் செயலுக்கு கண்டனத்தையும் தெரிவிக்க உள்ளார். இவ்வாறு முரளீதர் ராவ் பேசினார்.
மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலர் சரவணபெருமாள், மாவட்டத் தலைவர் சண்முகராஜ், மீனவர் பிரிவு தலைவர் காந்தி, நிரபராதி மீனவர்களை மீட்கும் அமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம், மீனவர் சங்க பிரதிநிதிகள் அன்டனிகோமஸ், ராயப்பன், போஸ் உட்பட பலர் பேசினர்.
* கடந்த ஜன., 22ல் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரின் மனைவியும், குழந்தைகளும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மீனவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

3 கருத்துகள்:

  1. அடே...பி ஜே பி மாக்கான்களே. இந்த திராவிட மண்ணில் உங்க சால்சாப்பு வேலையெல்லாம் பலிக்காது வர்ர தேர்தலுக்கு அஸ்த்திவாரமா? எங்க தமிழக மக்கள் ரொம்ப உஷாருடி..

    பதிலளிநீக்கு
  2. உன்மையிலேய பா ஜா காவினால் மட்டுமே கச்ச தீவை மீட்க முடியும் ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள்

    பதிலளிநீக்கு
  3. வாதங்களில் இரண்டு உண்டு ஒன்று உண்மையைக் கொண்டு பேசுவது மற்றொன்று தன்னிடம் உண்மை இல்லாவிட்டாலும் பேசுவது.

    இதில் இது இரண்டாம் வகை bjp ஆட்சியில் இருக்கும் போதே செய்யாததை இப்பொழுது செய்ய போரிங்கலா நல்ல சொன்னிங்க....

    பதிலளிநீக்கு