ஈரோடு ஆ.சரவணன்
02 Jun 2011 | அச்சிட
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அஇஅதிமுக, மிகப் பெரிய தவறுக்குத் துணைசென்றுள்ளது. இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதியும் அதற்கு முன்பும் பலமுறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும், சிறுபான்மையினரின் வாக்குக்காகவும் அஇஅதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. தடைசெய்யப்பட்ட சிமி இயக்கம் பல்வேறு காலகட்டங்களில் தனது பெயரை மாற்றிக் கொண்டு அரசியல் களத்தில் வலம் வருகிறது. தமிழகத்தில் அதன் பெயர், “மனித நேய மக்கள் கட்சி”யாகும்.
இந்திய அரசியலில் தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுகவும், அஇஅதிமுகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். 2006-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மனித நேய மக்கள் கட்சி, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தவுடன் 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மூன்று இடங்களைப் பெற்று, இரண்டு இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரை மாற்றி அரசியல் அரங்கில் அங்கீகாரம் பெற்றுள்ளது, மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.
2011-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னையில் சேப்பாக்கம் தொகுதியிலும் இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு இடங்களில் பெற்ற வெற்றி, ‘இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும்’ என்கிற கோரிக்கைக்கு இந்துக்களும் ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள நடத்திய நாடகமாகும். இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்.
1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்குக் குண்டு வைத்து 11 பேர்களைக் கொன்ற செயலில் ஈடுபட்டவார்கள் அல்-உம்மா இயக்கத்தினார். நாடு முழுவதும் சிமி இயக்கத்திற்கு முதன்முதலில் தடை விதித்தபோது தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினார் அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி எனும் புதிய பெயரில் இயக்கத்தை நடத்தினார்கள். பழனிபாபா கொலைக்குப்பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டபின் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில் 1995-இல் ஒரு புதிய அரசியல் இயக்கம் துவக்கியவர்கள் அல்-உம்மா இயக்கத்தினர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்கிற நோக்கில் துவக்கப்பட்ட இயக்கம் தமுமுக (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்) என்பதாகும். இதன் தலைவார் ஹைதர் அலி முன்னாள் சிமியில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். 1998-இல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பின் ஹைதர் அலி கைது செய்யப்பட்டதால் தமுமுக-வின் தலைவராக பொறுப்புக்கு வந்தவார் ஜவாஹிருல்லா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
1993-ஆம் ஆண்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கம் அல்-உம்மாவும் பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆகும். 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகூரில், இந்து முன்னணியின் பொறுப்பாளருக்குக் குறிவைத்து, அவரது மனைவியைக் கொன்ற சம்பவத்திலும், 1996-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் தமுமுக-விற்குப் பங்கு உண்டு. இந்தச் சம்பவங்களுக்காக நைனா முகமது, சேட் சாகீப், ராஜா ஹூசைன், பக்குரூதீன் போன்ற தமுமுக-வின் பொறுப்பாளார்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சாவூரில் உள்ள தூர்தார்ஷன் மீது 6.6.1997-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள், 6.12.1997-ஆம் தேதி பிரச்சினைக்குரிய கட்டடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நினைவுதினத்தை ஒட்டி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியிலும் ஆழப்புழா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டுவைத்து சிலரைக் கொன்ற குற்றவாளிகள்- தமுமுகவினர். இது போல பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட இயக்கம் தமுமுக-வாகும். 10.1.1998-ஆம் தேதி சென்னை அண்ணா மேல்பாலத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல், 18.9.1997-இல் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஐந்து இந்து இயக்கங்களின் ஆதரவாளார்கள், 9.12.1997-ஆம் தேதி கோவையின் வெளிப்பகுதியில் நடத்திய தாக்குதல்களில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டதும், இதற்காக சுல்தான் நாஸார், அப்துல் காயும் என்பவர்கள் கைது செய்யப்பட்டதும், இவ்வாறு நடந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள், தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் என அனைவருமே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள்.
1980-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அனைத்திலும் ஜவாஹிருல்லாவின் பங்கு உண்டு என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஜவாஹிருல்லா, 1995-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவார். 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கோவையில் திரு.அத்வானி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட இயக்கங்களில் ஒன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமாகும். இவ்வாறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தமுமுகவினர் ‘மனித நீதிப் பாசறை’ என்கிற பெயரில் சில காலம் தங்களது ‘பணிகளை’ச் செய்துகொண்டு இருந்தார்கள். தீவிரவாதம் தவிர்த்து இவர்களின் முக்கியப் பணி பல்வேறு இடங்களில் உள்ள தலித்களை இஸ்லாமியார்களாக மதமாற்றம் செய்வதாகும். 2005-ஆம் ஆண்டு மீண்டும் தங்களது இயக்கத்தின் பெயரை மனித நேய மக்கள் கட்சி என பெயர்மாற்றம் செய்து, தமிழக அரசியலில் புதிய அவதாரம் எடுக்க முனைந்தார்கள்.
இவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டு கழகங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது முழு ஆதரவை அளித்தார்கள், கிடைத்த ஆதரவில், பயங்கரவாதிகள் என்கிற பெயரை மாற்றுவதற்கு தேர்தல் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். தமிழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. 1996-ஆம் வருடம் நடந்த தேர்தலில் திமுக வேட்பாளார் கோவை மு.ராமநாதன் பொதுமேடைகளில் பகிரங்கமாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். கோவையில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது, இதற்கு இஸ்லாமியார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக கோட்டைமேடு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அப்புறப்படுத்தப்படும் என பகிரங்கமாகத் தெரிவித்தார். திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற செய்தி வந்தபோது அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அந்த செக்போஸ்ட் இஸ்லாமியார்களின் துணையோடு அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது.
இதே ஆண்டில் சிறையில் இருந்த அல்-உம்மா கைதிகள் எவ்விதக் காரணமுமின்றி விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹருல்லாவும் ஒருவர். 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பிற்குக் காரணமான அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், “மனித நீதிப் பாசறை” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
19.2.2009-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அது, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கேரளத்தில் உள்ள கள்ளிக்கோட்டையில் நடந்த தேசிய அரசியல் மாநாடு (National Political Conference) பற்றியது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் டெல்லி உட்பட 16 மாநிலங்களில் உள்ள முன்னாள் சிமி ஆதரவாளார்களால் துவக்கப்பட்ட பாப்புலார் பிரண்ஃட் ஆப் இந்தியாவின் மாநாடாகும். இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஜவஹிருல்லா கலந்து கொண்டார், இவருடன் மனித நேய மக்கள் கட்சியின் சில முக்கியப் பொறுப்பாளார்களும் கலந்து கொண்டார்கள்.
rss i vida bayangaravaatha amaippu iruppathaga enakku theriyavillai...
பதிலளிநீக்கு