ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது ….
மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்
வங்காளப் பிரிவினை
8. இந்த விஷயத்துடன் நான் வங்காளப் பிரிவினையை எதிர்த்தேன் என்பதும் இந்த இடத்தில் சொல்லப்படவேண்டும். இதன் தொடர்பாகப் பரப்புரையை தொடங்கிய போது எல்லா பக்கங்களில் இருந்தும் பெருவாரியான எதிர்ப்பை மட்டுமல்லாது சொல்லமுடியாத அவமானம், இழிசொற்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.
மிகுந்த வேதனையோடு இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் இருந்த முப்பத்திரண்டு கோடி இந்துக்களும் என்னை புறக்கணித்து என்னை இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் எதிரி என்று சொல்லிய நாட்களை நினைவுகூர்கிறேன். ஆனால் என்னுடைய பாகிஸ்தானிய விசுவாசம் இவற்றால் பாதிக்கப்படவோ அல்லது மாறவோ இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று பதிலளித்த வங்காளத்தின் 70 லட்சம் பட்டியல் வகுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அவர்கள் எனக்கு மாறாத ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்கள்.
9. ஆகஸ்டு 14, 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு பின் நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சரவையை அமைத்தீர்கள். அதில் நான் ஓர் அமைச்சராக பதவியேற்றேன். அதே போல் காஜா நஜிமூதீன் மேற்கு வங்களாத்தில் தற்காலிக அமைச்சரவையை அமைத்தார். ஆகஸ்ட் 10 இல் நான், காஜா நஜிமூதீன் கராச்சியில் இருந்தபோது பேசி, அவருடைய அமைச்சரவையில் இரண்டு பட்டியல் வகுப்பினரை அமைச்சர்களாக சேர்க்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை இன்னும் சில காலங்களில் செய்து விடுவதாக உறுதியளித்தார். ஆனால், அதன்பின்பு நீங்கள், காஜா நஜிமூதீன், மற்றும் இப்போதைய முதல் அமைச்சர் நூருல் அமீன் ஆகியோருடன் இதன் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏமாற்றமளிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.
எப்போது எனக்கு காஜா நஜிமூதீன் எதாவது ஒரு [வலுவற்ற] காரணத்தைச் சொல்லி இந்த விஷயத்தை தவிர்க்கிறார் என்று புரிந்ததோ அப்போது நான் பொறுமையிழந்து எரிச்சலடைந்தேன். மேலும் பாகிஸ்தானின் முஸ்ஸீம் லீக் தலைவருடனும் மேற்கு வங்களா முஸ்ஸீம் லீக்கின் தலைவருடனும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினேன். கடைசியாக இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
நீங்கள் இந்த விஷயத்தை காஜா நஜிமூதீனுடன் என் முன்னால் உங்களுடைய வீட்டில் பேசினீர்கள். காஜா நஜிமூதீன் ஒரு பட்டில் வகுப்பு உறுப்பினரை தனது அமைச்சரவையில், தான் டாக்கா திரும்பியவுடன் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இந்த விஷயத்தில் காஜா நஜிமுதீனின் உறுதிமொழி மீது எனக்கு சந்தேகம் இருந்ததால் ஒரு காலரீதியான வரையறை செய்யுமாறு கேட்டேன். ஒரு மாதத்திற்குள் காஜா நஜிமுதீன் இதில் செயல்படவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நான் பதவி விலகிவிடுவேன் என்று வலியுறுத்தினேன். நீங்கள் மற்றும் காஜா நஜிமுதீன் இருவரும் இதற்கு ஒப்புக்கொண்டீர்கள். ஆனால் கடவுளே, நீங்கள் உண்மையோடு அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.
காஜா நஜிமூதின் தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. நூருல் அமீன், கிழக்கு வங்காள முதலமைச்சர் ஆன பின்பு இன்னும் ஒரு முறை இந்த விஷயத்தை அவருடன் பேசினேன். அவரும் முன் போல் பழைய தவிர்க்கும் செயல்களையே செய்தார். அப்போது நான் மீண்டும் அந்த விஷயத்தை உங்களின் 1949 டாக்கா பயணத்திற்கு முன் உங்களிடம் கொண்டு வந்தேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக சிறுபான்மையினர் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என உறுதியளித்தீர்கள். கூடவே அந்தப் பதவிக்கு இரண்டு அல்லது மூன்று பெயர்களைக் கேட்டீர்கள்.
உங்களுடைய சொல்லிற்கு மதிப்பளித்து நான் கிழக்கு வங்காளத்தில் பெடரேஷன் குழுமத்தில் இருந்து மூன்று பெயர்களை உங்களுக்கு அனுப்பினேன். பின்பு அதைப்பற்றி நீங்கள் டாக்காவில் இருந்து திரும்பிய பின்பு விசாரித்தபோது, நீங்கள் வெறுமனே “நூருல் அமின் தில்லியில் இருந்து வரட்டும்” என பதிலளித்தீர்கள். சில நாட்களுக்குப் பின்பு கேட்ட போதும் நீங்கள் அந்த விஷயத்தை தவிர்த்தீர்கள். நான் இந்த விஷயத்தில் நீங்களோ அல்லது நூருல் அமீனோ ஒரு பட்டியல் வகுப்பினரை அமைச்சவரையில் கொண்டுவர விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள தள்ளப்பட்டேன்.
இது மட்டுமல்லாது நூருல் அமீன் மற்றும் பல கிழக்கு வங்காள லீக் தலைவர்கள் பட்டியல் வகுப்பு உறுப்பினர்களிடையே பிரிவினையை உண்டாக்க முயல்கிறார்கள் என்பதும் என் கவனத்திற்கு வந்தது. என்னுடைய தலைமையும் மிகப்பரவலான புகழும் தவறாக கருதப்படுகிறது என எனக்குத் தோன்றியது. பயமின்றி பேசும் என்னுடைய திறன், கண்காணிப்பு, மற்றும் பொதுவாக பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் விருப்பங்களையும் பட்டியல் வகுப்பினருடைய விருப்பங்களையும் அதிக கவனத்துடன் காப்பாற்றுவதில் காட்டும் நேர்மை சில மேற்கு வங்காள அரசுக்கும், லீக் தலைவர்களுக்கு கவலை அளித்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாகிஸ்தானின் சிறுபான்மையினரை காப்பாற்றுவதில் நான் உறுதி பூண்டேன்.
இந்துக்களுக்கு எதிரான கொள்கை
10. வங்காளப்பிரிவினை பற்றிய கேள்வி எழுந்தபோது, பட்டியல் வகுப்பு மக்கள் பிரிவினையின் விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டனர். அவர்களின் சார்பாக அப்போதைய வங்காள அமைச்சர் ஸரஹ்ர்தியிடம் இந்த பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கு அவர் பட்டியல் வகுப்பினரின் எந்த உரிமைகளும் பிரிவினையினால் பாதிக்கப்படாது எனவும் அவர்கள் அந்த உரிமைகளை அனுபவிக்கவும் கூடவே சில உரிமைகளும் அவர்களுக்கு தரப்படும் என்ற அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.
இந்த உறுதிமொழி, ஸூரஹர்தியின் தனிப்பட்ட தகுதியினாலும் வங்காளத்தின் லீக் அமைச்சரவையின் முதலமைச்சர் என்ற முறையிலும் தரப்பட்டது. ஆனால், கடும் வருத்ததுடன் சொல்லப்படவேண்டியது என்னவென்றால் பிரிவினைக்குப் பின் அதுவும் முகம்மது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்பு பட்டியல் வகுப்பினர் அவர்களுடைய உரிமைகளைப் பெறவில்லை.
உங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன், பட்டியல் வகுப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் அவ்வப்போது கொண்டு வந்தது. கிழக்கு வங்காள அரசின் திறமையற்ற நிர்வாகத் திறமைகளைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கியது நினைவு இருக்கும் என நம்புகிறேன். நான், காவல்துறைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.
ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் துறை எடுத்த கொடூர நடவடிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். கிழக்கு வங்காள அரசினால், குறிப்பாகக் காவல் துறையினாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களினாலும் கடைப்பிடிக்கப்படும் இந்துக்களுக்கு எதிரான கொள்கை பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது பற்றி எந்த தயக்கமும் நான் காட்டியதில்லை.
சில சம்பவங்கள்
11. என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முதல் சம்பவம் கோபால்கஞ் அருகில் இருக்கும் டிக்காகுல் (Digharkul ) எனும் கிராமத்தில் நடைபெற்றது. அங்கு போலியான குற்றச்சாட்டின் பேரில் முஸ்ஸீம்களின் கொடுமைகள் உள்ளூர் நாமசூத்திரர்கள் மீது நடைபெற்றது.
நடந்தது என்னவென்றால் ஒரு முஸ்ஸீம் படகில் சென்று மீன் பிடிக்க வலை வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த நாமசூத்திரர் ஒருவரும் அதே இடத்தில் வலை வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த முஸ்ஸீம், அருகில் இருக்கும் முஸ்ஸீம் கிராமத்திற்கு சென்று அவரும் அவருடன் வந்த பெண் ஒருவரும் நாமசூத்திரர்களின் கும்பலால் தாக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார்.
சமீபத்தில் வன்புணரப்பட்ட பங்களாதேச இந்துப் பெண்
அப்போது கோபால்கஞ் கால்வாய் வழியாக வந்த கோபால்கஞ் சப் டிவினசல் ஆபீசர் எந்த விசாரணையும் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை உண்மை என ஒப்புக்கொண்டு ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அந்த நாம சூத்திரர்களை தண்டிப்பதற்காக அனுப்பினார். ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் வந்தபோது உள்ளூர் முஸ்ஸீம்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.
முஸ்ஸீம்கள், நாம சூத்திரர்களின் வீடுகளை கொள்ளையிட்டது போதாமல் ஆண்களையும் பெண்களையும் கடுமையாக தாக்கி, வீடுகளை சேதப்படுத்தினார்கள். இவர்களின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் ஒரு கர்ப்பிணி பெண் அந்த இடத்திலேயே கரு கலைந்தாள். உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதல் அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
12. இரண்டாவது சம்பவம், 1949 ஆம் ஆண்டின் முதல் பகுதியில், பாரிசால் மாவட்டத்தில் இருக்கும் பி எஸ் கோர்னாடி (P.S. Gournadi) எனும் இடத்தில் நடைபெற்றது. அங்கு யூனியன் போர்டில் (உள்ளூர் பஞ்சாயத்து போன்ற அமைப்பு) இருந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருந்தது. இதிலே ஒரு குழு உள்ளூர் காவல் துறை அதிகாரிகளின் நல்லெண்ணத்தை பெற்று இருந்ததால் அவர்களின் எதிரிகளைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி ஒழிக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.
இந்தக் குழு தந்த போலியான தகவலான, உள்ளூர் காவல் நிலையம் தாக்கப்படும் என்பதின் அடிப்படையில், கோர்னாடி காவல் தலைவர் ஆயுதம் தாங்கிய படையை அனுப்புமாறு தலமையகத்தை கேட்டுக்கொண்டார். காவலர்கள், ஆயுதம் தாங்கிய படையுடன் உதவியோடு நிறைய வீடுகளை சோதனையிட்டு விலையுர்ந்த பொருள்களை கொள்ளையிட்டனர், இந்த வீடுகளில் இருந்தவர்கள் அரசியலிலேயே ஈடுபட்டதில்லையாதலால் கம்யூனிஸ்டுகளாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. பெருவாரியான மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆங்கில பள்ளிகளில் படித்த மாணவர்களும் வேலை செய்த ஆசிரியர்களும் அவர்கள் கம்யூனிஸ்டாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டனர். அந்த பகுதி என்னுடைய பூர்வீக கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் எனக்கு இந்த சம்பவம் தகவல் சொல்லப்பட்டது. மாவட்ட நீதிபதிக்கும் காவல்துறை கண்கானிப்பாளருக்கும் இந்த நிகழ்வு பற்றி விசாரணை தேவை என கடிதம் எழுதினேன்.
அங்கிருக்கும் உள்ளூர் மக்களில் பலரும் சப் டிவிசனல் ஆபிசருக்கு விசாரணை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாவட்ட தலமையகத்திற்கு என்னால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு கூட பதில் இல்லை. இந்த விஷயத்தை நீங்கள் உட்பட பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்களிடம் கொண்டு வந்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை.
இரவு முழுவதும் இழிவுக்குள்ளான இந்துப் பெண்கள்
13. ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரால் அப்பாவி இந்துக்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மீது ஷில்ஹெட் மாவட்டத்தில் இருக்கும் ஹபிப்கார் எனும் ஊரில் நடத்தப்பெற்ற கொடூரங்களை பற்றி சொல்லியாகவேண்டும். அப்பாவி ஆண்களும் பெண்களும் கொடூரமாக தாக்கப்பட்டனர், பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், முஸ்ஸீம்களாலும் காவல் துறையினராலும் வீடுகள் தாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ராணுவத்தினர் உள்ளூர் மக்களை கொடுமை படுத்துதல், இந்துக்கள் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் போனற கொடூரங்களுடன் இந்துக்களை துன்புறுத்தி இந்து பெண்களை இரவு ராணுவ முகாமுக்கு வரவைத்து அவர்களின் ஆசையை தீர்த்துக்கொண்டார்கள். இந்த உண்மையும் கூட உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தீர்கள், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.
14. அதன் பின்பு, ராஜ்சாஷி மாவட்டத்தில் இருக்கும் நாச்சோல் (Nachole) எனும் இடத்தில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் காவல் துறையும் உள்ளூர் முஸ்ஸீம்களும் இணைந்து இந்துக்களை துன்புறுத்தி அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தார்கள். அந்த சந்தால்கள் எல்லையை தாண்டி மேற்கு வங்காளத்திற்கு வந்தார்கள். அவர்கள் முஸ்ஸீம்களும் காவல்துறையும் இணைந்து நடத்திய கொடுமைகளை விவரித்தார்கள்.
15. கொடும் கோரமான அடக்குமுறைகள் டிசம்பர் 20, 1949 இல் காகுலானா (Khulna) மாவட்டத்தில் பி.எஸ், மோல்ஹாரட் (P.S. Mollarhat ) கீழிருக்கும் கால்ஷிரா (Kalshira ) கிராமத்தில் நடந்தன. நடந்தது என்னவென்றால், ஜோய்தேவ் பிராஹ்மனா எனபவரின் வீட்டில் சில தேடப்படும் கம்யூனிச குற்றவாளிகள் இருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையில் பின்னிரவு வேளையில் நான்கு காவலர்கள் ஈடுபட்டார்கள். காவலர்கள் வரும் அறிகுறியில் கம்யூனிஸ்டுகளாகச் சொல்லப்படும் சில இளைஞர்கள் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்கள்.
ஒரு காவலர் ஜோய்தேவ் இன் வீட்டில் நுழைந்து அவருடைய மனைவியை தாக்கியுள்ளார், அவருடைய சத்தம் கேட்டு ஜோய்தேவும் அவருடன் தப்பித்த இளைஞர்களும் திரும்பி வந்தார்கள். அவர்கள் அவரசத்திலும் வேறு வழியில்லாததாலும் வீட்டினுள் நுழைந்த போது அங்கு துப்பாக்கியுடன் இருந்த நான்கு காவலர்களைக் கண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் உந்தப்பட்டவர்களாக அந்த காவலரை அடித்தார்கள். அந்த அடியில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இளைஞர்கள் அடுத்த காவலரை தாக்கும் போது மற்ற இருவரும் தப்பித்து ஓடி அருகில் இருக்கும் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து வந்தார்கள். இது சூரிய உதயத்திற்கு முன்பு நடந்ததால் இளைஞர்கள், இறந்தவரின் உடலோடு தப்பித்து விட்டார்கள்.
காலானா வின் காவல்துறை கண்காணிப்பாளர், அன்று மதியம் அந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரோடு வந்தார். இடைப்பட்ட வேளையில் அந்த தாக்குதல் நடத்தியவர்களும் பக்கத்து வீட்டினரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் பெரும்பான்மையான கிராமத்தினர் நடந்த சம்பவத்தின் விளைவுகள் பற்றி அறியாமல் வீட்டிலே தங்கியிருந்தார்கள். தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழுள்ள காவல்துறையினர் இணைந்து அப்பாவி இந்து கிராம மக்களை அடித்துத் துன்புறுத்த தொடங்கினார்கள்.
கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்த வீடுகளை கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள், ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
இப்படி, நரகக் கொடூரங்கள், ஒன்றில் இருந்து ஒன்றரை மைல் நீளம் இருக்கும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட கால்ஷீரா கிராமத்தில் மட்டுமல்லாது அருகில் இருக்கும் பல கிராமங்களிலும் கட்டவிழக்கப்பட்டது. இந்த கால்ஷிரா கிராமம் ஆனது ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் இருந்ததாக சந்தேகப்படாத கிராமம் ஆகும்.
இன்னோரு கிராமம் ஆன ஜலார்தண்கா (Jhalardanga). கால்ஷிரா கிராமத்தில் இருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது, அது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனது ஆகும். ஒரு தடவை காவல்துறையினரின் பெரும் படை கம்யூனிஸ்டுகளை தேடும் வேட்டையில் வந்தபோது ஜலார்தண்கா கிராம மக்கள் இந்த கால்ஷீரா கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார்கள், ஏனென்றால், இந்த கால்ஷீரா கிராமம் பாதுகாப்பான கிராமம் ஆகும்.
16. நான் அந்த கால்ஷிரா கிராமத்திற்கும் அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களுக்கும் பிப்ரவரி 28, 1950 இல் சென்றேன். குலானாவின் காவல்துறை கண்காணிப்பாளரும் முஸ்ஸீம் லீக்கின் சில தலைவர்களும் என்னுடன் இருந்தனர். எப்போது அந்த கால்ஷீரா கிராமத்திற்கு போன போது அந்த கிராமம் உருக்குலைந்து இடிபாடுகளாக இருந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அந்த கிராமத்தில் 350 குடும்பங்கள் இருந்ததாகவும் ஆனால் இப்போது மூன்று வீடுகளைத் தவிர மற்றவை இடிக்கப்பட்டதாகவும் என்னிடம் சொல்லப்பட்டது. நாம சூத்திரர்களுக்கு சொந்தமான படகுகளும் கால்நடைகள் எல்லாமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நான் இந்த உண்மைகளை முதலமைச்சர், முதன்மை செயலாளர், தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் உங்களுக்கும் எழுதினேன்.
17. இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லப்படவேண்டும். இந்த சம்பவங்கள் மேற்கு வங்காள பத்திரிக்கைகளில் வெளிவந்து அங்கிருந்த இந்துக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கால்ஷீராவில் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என அனைவரும் கல்கத்தாவுக்கு வந்து அவர்களின் கொடுமைகளைச் சொல்லினர். அதனால் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது.
பிப்ரவரி தொந்தரவின் காரணங்கள்
18. இந்த இடத்தில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் கால்ஷீரா மற்றும் அதன் தொடர்புடைய சம்பவங்களுக்குப் பதிலடியாக சில மதக்கலவரங்கள் நடந்த செய்திகள் கிழக்கு வங்காள பத்திரிக்கைகளில் உருப்பெருக்கி சொல்லப்பட்டன. 1950 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் கிழக்கு வங்காள சட்டமன்றத்தின் நிதிநிலை கூடுகை ஆரம்பித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், கால்ஷீரா மற்றும் நச்சோலி பற்றி விவாதிக்க இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வர அனுமதி கேட்டார்கள். ஆனால், அந்தத் தீர்மானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அப்பாவி ரிக்ஷாக்காரர்களையும் அழித்த அமைதி மார்க்கம்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள். இந்து உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அமைச்சர்களை மட்டுமல்லாது மாநிலத்தின் முஸ்ஸீம் தலைவர்களையும் அதிகாரிகளையும் எரிச்சலடையச் செய்தது. இதுதான் ஒருவேளை பிப்ரவரி 1950 இல் நடந்த டாக்கா மற்றும் கிழக்கு வங்காள கலவரங்களின் முதன்மை காரணமாக இருக்கலாம்.
19. பிப்ரவரி 10, 1950 ஆம் திகதி காலை பத்துமணிக்கு ஒரு பெண் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டதாகக் காண்பிக்க சிகப்பு நிற மையால் வண்ணம் தீட்டப்பட்டு கிழக்கு வங்காள தலைமைச் செயலகம் முன்பு கொண்டு வரப்பட்டாள். உடனே செயலகத்தில் இருந்த அரசு அதிகாரிகள் வேலையை நிறுத்தி விட்டு வெளியேறி ஊர்வலமாக புறப்பட்டு இந்துக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பழிவாங்க கோரினார்கள். இந்த ஊர்வலம் ஒரு மைல் தூரம் போன போது கூட்டம் சேர ஆரம்பித்தது.
அது 12 மணிக்கு விக்டோரியா பூங்காவில் சேர்ந்தது, அங்கு இந்துக்களுக்கு எதிரான இன்னும் மோசமான பேச்சுக்கள் பல தலைவர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பேசப்பட்டன. இந்த இடத்தில் சிரிப்பான செயல் என்னவென்றால் இந்த முழு நாடகம் செயலகத்தின் ஊழியர்களால் நடத்தப்படும் போது கிழக்கு வங்காளத்தின் தலைமைச் செயலர், மேற்கு வங்காள தலைமைச் செயலருடன் எவ்வாறு இரண்டு வங்காளங்களிலும் மதக்கலவரங்களை ஒழிப்பது என்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அரசு அதிகாரிகள் கொள்ளையர்களுக்கு உதவினர்.
20. கலவரம் மதியம் ஒரு மணிக்கு நகரத்தின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. முழு மூச்சில் நகரத்தின் எல்லா இடங்களிலும் தீ வைத்தல், இந்து கடைகள், மற்றும் வீடுகளைக் கொள்ளையிடுதல், மற்றும் இந்துக்களைக் கொல்லுதல் என்பவை இந்துக்களைக் கண்ட இடத்திலே செய்யப்பட்டன. இந்தக் கொலை, கொள்ளை போன்றவை காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையிலே நடைபெற்றதற்கான ஆதாரம் எனக்கு முஸ்ஸீம்களிடம் இருந்தும் கூட கிடைத்தன.
எம்மதமும் சம்மதம் என்றோமே....
இந்துக்களுக்குச் சொந்தமான நகைக்கடைகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே கொள்ளையிடப்பட்டன. அந்தக் காவலர்கள், கொள்ளையை தடுக்கத் தவறியது மட்டுமல்லாது கொள்ளையடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி உதவினர். என்னுடைய துரதிர்ஷ்டவசமாக நான் அதே நாள் 5 மணிக்கு டாக்காவிற்கு சென்றேன். என்னுடைய கடும் வருத்ததிற்கு காரணமாக இந்த சம்பவங்களை அருகில் இருந்து பார்க்கும் துர்ப்பாக்கியத்தை பெற்றேன். நான் அங்கு பார்த்ததும் அருகில் இருந்தவர்களிடம் கேட்டதும் இதயத்தில் வலியை உண்டாக்குவதும் நம்பமுடியாததும் ஆகும்.
(தொடர்ச்சியாக நடக்கும் வரலாற்று உண்மைகள் தொடரும்…)