சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் நடந்த சில குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, பொய் பிரசாரம் நடக்கிறது. இந்து பயங்கரவாதம் என, பிரசாரம் செய்ததற்கு, எதிர்ப்பு கிளம்பியதும், காவி பயங்கரவாதம் என சொல்கின்றனர்.
கோவில் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக பிரசாரம் செய்து, இவற்றின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குலைக்க சதி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., மீது காவி பயங்கரவாதம் என, அபாண்டமாக பழி போடுவதன் மூலம், நாட்டில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் மத்திய அரசும், ஒரு சில அரசியல் கட்சிகளும் ஈடுபடுகின்றன. இந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்படும், மத்திய அரசின் அணுகுமுறை குறித்து, மக்களிடம் விளக்க, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நாடு முழுவதும் மக்கள் தொடர்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், 15 நாட்கள் மக்களை சந்திக்கும், இத்திட்டம், தமிழகத்தில், பிப்., 6ம் முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில், 5ம் தேதி, 100 இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில், அயோத்யா, காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் பற்றிய நோட்டீஸ் மற்றும் புத்தகங்கள் மூலம், பிரச்னையைப் பற்றி மக்களை சந்திக்கும் போது எடுத்து விளக்கவுள்ளோம். இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக