14.1.2011-ஆம் தேதி வெள்ளிக் கிழமை டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருந்தரங்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.ஜி.கே.பிள்ளை ஆற்றிய உரை அபதமானதும், ஆபத்தானதுமாகும். குறிப்பாக இஸ்லாமிய மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரை- இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்துறை செயலாளரின் பேச்சு அமைந்துள்ளது. இரண்டு முக்கியமான முரண்பாடான செய்திகளைத் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டார்கள்; பின்பு இதுசம்பந்தமாக பேச்சுவார்ததை நடத்த 3 பேர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்கின்ற இந்நிலையில், உள்துறை செயலாளரின் பேச்சு அபத்தமானதாகும்; இதுவே பயங்கரவாதிகளுக்கு வழிவகை செய்து கொடுக்கும் பேச்சாகவும் உள்ளது.
“ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் இரு நாடுகளுக்கும் சென்று வர இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதி அளித்துள்ளது. இவர்களுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய அனுமதி பெறுபவர்கள் தங்களைப் பற்றிய முழுத் தகவல்களை அளித்து, அது சரிபார்க்கப்பட்டு, பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக 6 மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் பல தடவை சென்று திரும்பும் அனுமதியை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,” எனப் பேசியுள்ளார். இந்த முடிவு ஆபத்தான முடிவாகும். ஏன் எனில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக வந்தவர்கள் என்பது உலகளாவிய உண்மையாகும்.
85,793 கி.மீ பரப்பளவு உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 75 சதவீதமானவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாளர்கள் என்பதும், இவர்களின் நோக்கம்- காஷ்மீர் மாநிலத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பாரதத்தின் மீது ஜிகாத் யுத்தம் நடத்துவதாக பல நேரங்களில் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். பல்வேறு அமைப்புகள் இந்தப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமே பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில்தான் என்ற முழு உண்மை வெளிவந்துள்ளது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, J-e-M . Huji போன்ற பயங்கரவாத அமைப்புகள் பயிற்சி கொடுக்கும் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாகும். Kotli, Garhi Dupatta, Nikial, Sensa, Gulpur, Barnala, Jhandi Chauntra, முஸப்பரபாத் போன்ற பகுதிகளில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைந்துள்ளது.
காஷ்மீர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர்கள் குலாம் முகமது, Nasir Mohammad Soudozi, Rahil Ahmad Hoshmi, Saifullah Khalid, Syed Khalid Hussain, யேளசை இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கோடலி, முஸப்பரபாத், ரவால்காட், பாக், பூஞ்ச் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள்.
காஷ்மீர் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர்கள் குலாம் முகமது, Nasir Mohammad Soudozi, Rahil Ahmad Hoshmi, Saifullah Khalid, Syed Khalid Hussain, யேளசை இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள கோடலி, முஸப்பரபாத், ரவால்காட், பாக், பூஞ்ச் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள்.
உள்துறை அமைச்சாராக இருந்த போது பாராளுமன்றத்தில் பேசிய திரு.பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை முற்றிலும் பாகிஸ்தான் அழித்தால் மட்டுமே அவர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் பயன் உள்ளதாக அமையும் என்றார். ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன என பாகிஸ்தான் தகவல் கொடுத்தாலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மாற்று இடங்களுக்கு பயிற்சி முகாம்கள் மாற்றப்பட்டன, அவைகள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்பது உளவுத் துறையின் தகவலாகும்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மட்டும் 17 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், அவை இந்தியா பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டிய பகுதியில் உள்ளவையாகும்; இந்த முகாம்களில் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டாயித்துக்கு மேல் இருக்கும்… என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன் பி.பி.சி உருது சேனலில் ஒலிபரப்பப் பட்ட செய்தியில் லஷ்கர்-இ-தொய்பாவில் பயிற்சி பெறுவதற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற இஸ்லாமிய இளைஞர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்தப் பயிற்சியில் 20 சதவீதமான இளைஞர்கள் காஷ்மீர் மாநிலத்திலிருந்தும் 10சதவீதமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து– குறிப்பாக அரபு நாடுகளிலிருந்து– பயங்கரவாதப் பயிற்சி பெறுவதற்கு வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
12.1.2011-ஆம் தேதி வெளியாகிய பாகிஸ்தான் பத்திரிக்கையான டானில் வரும் ஏப்ரல் மாதம் எகிப்தில் நடக்க இருக்கும் 57 இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து ஒருவர் கலந்து கொள்வதற்காக ஓ.ஐ.சி (Organisation of Islamic Conference) அமைப்பின் பொறுப்பாளர் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வருகை தருவதாகச் செய்தி வெளியிட்டது. ஆகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்த இந்தியாவில், பயங்கரவாதச் செயல்பாடுகளை செய்வதற்காகவே லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள். ஏற்கனவே 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐ.எஸ்.ஐ-யினால் தீட்டப்பட்ட ’ஆபரேஷன் டோபக்’ மூலமாக காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியவர்களால் அரசின் நிர்வாகமே இஸ்லாமிய மயமாகின்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களை களையெடுக்க இயலாமல், மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனமாக இருக்கும் இச் சமயத்தில, உள்துறை செயலாளரின் பேச்சு– அதைச் செயல்படுத்த முனையும்போது, காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கல்லெறி சம்பவத்திற்குப் பதிலாக துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கும் சப்தம் பெருகும் என்பது நிச்சயமாகும்.
ஆகவே உள்துறை செயலாளர் பேச்சு அபத்தமானது; அதைச் செயல்படுத்தும்போது அது இந்திய தேசத்திற்கு ஆபத்தாகவும் முடியும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக