முக்கிய செய்திகள்
28 ஏப்ரல் 2011
அதிராம்பட்டினம் சிவன் கோவில் முன் சாக்கடையை கொட்டியது ஏன்?
Labels:
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
25 ஏப்ரல் 2011
சாய்பாபாவின் சரித்திரம்
குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.
இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.
சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.
சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.
ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை
பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.
""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.
Labels:
ஹிந்துத்வா,
Hindu,
hinduism
22 ஏப்ரல் 2011
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?
22 Apr 2011 | (தமிழ் ஹிந்து இணையத்திலிருந்து)
பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.
இது வெறுமே பரந்த மனப்பான்மை எனக்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ பெரும்பாலான இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.
ஆகவே, பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணிகோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. அருகே இருக்கும் மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.
ஆனால், நம் இந்து மக்களுக்கு நாகூர் தர்காவை பற்றி முஸ்லீம்களிலேயே ஒரு சாரார் என்ன கருதுகிறார்கள் என்று தெரியாது. அதே போல வேளாங்கண்ணி கோவிலுக்கு தமிழக கிறிஸ்துவர்களிலேயே கணிசமான அளவு கிறிஸ்துவர்கள் போகமாட்டார்கள் என்பதும் தெரியாது.
நாகூர் தர்கா ஒரு சூஃபி தர்கா. தர்கா என்பதே இஸ்லாமுக்கு முரணானது என்று தீவிர இஸ்லாமியர்களான வஹாபிஸ்டுகள் கருதுகிறார்கள். தர்காக்களுக்கு செல்லும் முஸ்லீம்களை கப்ரு வணங்கிகள் என்று இழிவாக குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தனி அரசியல் கட்சிகளும் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகள், அமைப்புகளாக பீப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தவஹீத் ஜமாத் ஆகியவற்றை குறிப்பிடலாம். மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஜவஹிருல்லா என்பவர் ஒரு வஹாபியிஸ்ட் இஸ்லாமியர். சிமி என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது. முஸ்லீம்களில் செல்வாக்குடன் இருக்கும் ஜெயினுலாபுதீன் என்பவரும் இவரும் முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான். அதாவது தர்கா ஆகியவை அழிக்கப்பட வேண்டும், கந்தூரி, சந்தனக்கூடு போன்ற தமிழ்நாட்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அழிக்கப்பட வேண்டும் ஆகியவற்றை இவர்கள் கூறுகிறார்கள். ஜெயினுலாபுதீன் இந்த முறை திமுக கட்சிக்கு ஆதரவளித்திருக்கிறார். இருவருக்குள் வேறுபாடு என்பது யார் மிகத்தீவிரமாக வஹாபியிஸ்ட் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான். உதாரணமாக தமிழ்நாட்டில் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்தித்துகொள்ளும்போது வணக்கம் சொல்லுவது இயல்பு. ஆனால், இவர்கள் அப்படி வணக்கம் கூட சொல்லமாட்டார்கள். ஜெயினுலாபுதீன் பத்து லட்சம் முஸ்லீம்களை கூட்டி மாநாடு நடத்துவதாக கூறிக்கொள்கிறார். ஆகவே இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிறு பிரிவினர் அல்ல.
பாகிஸ்தானில் இப்படிப்பட்ட தர்காக்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். மனித வெடிகுண்டாக உடல் முழுவதும் குண்டுகளை கட்டிகொண்டு இந்த சூபி வணக்கத்தலங்களில் நுழைந்து அங்கு கும்பிடுபவர்களை கொல்வதில் சந்தோஷமடைகிறார்கள். இப்படிப்பட்ட வணக்கதலங்களில் கும்பிடுபவர்கள் முஸ்லீம் என்று பெயரிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டிய காபிர்களே என்பது வாஹாபி சிந்தனை. ஆகவே இப்படி மனித வெடிகுண்டாக சென்று தர்காக்களில் வழிபடுபவர்களை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்வதற்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் விரும்பி வருகிறார்கள் [1].
தமிழ்நாட்டில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த அமைப்புகளையே சார்ந்திருக்கிறார்கள் என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. கோயம்புத்தூரில் குண்டு வைத்தது இஸ்லாமிய இயக்கங்களுக்கு பின்னடைவு என்று ஜெயினுலாபுதீன், ஜ்வஹரில்லா ஆகியோர் கருதுகிறார்கள். வன்முறை தவறு என்பதல்ல. வன்முறையை கைக்கொண்டால், இஸ்லாம் மதத்தை தமிழர்கள் மத்தியில் இப்போது பரப்ப முடியாது என்பதுதான் காரணம் என்று இவர்களே எழுதுகிறார்கள் [2]. ஆகையால் தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.
இதெல்லாம் புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசலும் ஒரு சிவன் கோவில்தான் [3]. அதனை முஸ்லீம்களே இங்கு பதிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பரம்பொருளான எம்பெருமானுக்கு இவர் முஸ்லீம் இவர் இந்து இவர் கிறிஸ்துவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. தன்னிடம் எந்த ரூபத்தில் என்ன குரலில் என்ன மொழியில் கேட்டாலும் அருள்பவர் எம்பெருமான்.
அதே போல, வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில்ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்கள், பெந்த கொஸ்தே கிறிஸ்துவர்கள், பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். ஆனால், எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.
இதுவரை படித்ததிலிருந்தே பெரும்பாலான இந்துக்கள் எல்லா கோவில்களிலும் தெய்வங்களை பார்க்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.
இந்துக்கள் சைவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வைணவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது உண்மையே.
ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை செய்யப்படும் காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். அப்படி எரிந்து விழவில்லை என்றாலும் துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம். அவ்வளவுதான். பார்க்கும் உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?
தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.
எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.
இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும்வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.
பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.
இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.
இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.
பார்க்க:
கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை
- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் [4]. ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால், கத்தோலிக்க சர்ச் திவாலாகிவிடும் என்று கருதுகிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு சர்ச், பெந்த கொஸ்தே சர்ச் என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் தினசரி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிகொண்டிருந்த பாதிரியார்கள், குற்றங்களுக்காக கேவலப்படும்போது சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!
இந்த கிறிஸ்துவ சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லைஎன்பது ஒரு கசப்பான உண்மை.
இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம்பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.
இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே?
முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.
எம்பெருமான் துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
இன்பம் தரும் இறைவடிவத்தை, கல்யாண திருக்கோலத்தை, வீட்டில் அமர்த்தி இத்தெய்வீகப் பாடல்களை பாடுவோம்.
ஓம்
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றனே.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் (திருமூலர்)
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.
- திருமுருகாற்றுப்படை வெண்பா (நக்கீரர்)
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழு
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழு
Labels:
ஹிந்துத்வா,
Hindu,
hinduism
21 ஏப்ரல் 2011
ஹிந்துத்துவம் பற்றி இல.கணேசன்
உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.
இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.
ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.
""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.
இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.
ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.
எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.
இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.
எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.
ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?
அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.
நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.
""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.
பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!
எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!
இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.
இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.
நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.
மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.
ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.
கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.
திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.
அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.
மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.
படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.
மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?
எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பா.ஜ.க,
ஹிந்துத்வா,
Hindu,
hinduism
19 ஏப்ரல் 2011
அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா வீடியோ-05
அதிவீரராமபட்டினம் அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா - 6 ஆண்டுகளுக்கு பின் இந்து மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் விழா............
வழங்குவது www.adiraihindus.blogspot.com
வழங்குவது www.adiraihindus.blogspot.com
Labels:
ஆன்மீகம்,
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா வீடியோ-04
அதிவீரராமபட்டினம் அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா - 6 ஆண்டுகளுக்கு பின் இந்து மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் விழா............
வழங்குவது www.adiraihindus.blogspot.com
வழங்குவது www.adiraihindus.blogspot.com
Labels:
ஆன்மீகம்,
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா வீடியோ- 03
அதிவீரராமபட்டினம் அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா - 6 ஆண்டுகளுக்கு பின் இந்து மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் விழா............
வழங்குவது www.adiraihindus.blogspot.com
Labels:
ஆன்மீகம்,
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா வீடியோ-02
அதிவீரராமபட்டினம் அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா - 6 ஆண்டுகளுக்கு பின் இந்து மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் விழா............
வழங்குவது www.adiraihindus.blogspot.com
வழங்குவது www.adiraihindus.blogspot.com
Labels:
ஆன்மீகம்,
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
17 ஏப்ரல் 2011
அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா வீடியோ
அதிவீரராமபட்டினம் அருள்மிகு ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலய தீ மிதியல் திருவிழா - 6 ஆண்டுகளுக்கு பின் இந்து மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் விழா............
வழங்குவது www.adiraihindus.blogspot.com
Labels:
ஆன்மீகம்,
இந்து முன்னணி,
கோவில்,
adirampattinam,
Hindu,
hinduism
12 ஏப்ரல் 2011
(வந்தே மாதரம்) திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை..
ஒரே பேஜார் சார். வழில ஒரு ஆளுகூட அர்சியல் பேசி அது வலிச்சிகினே பூட்ச்சி. அத்தான் சார் லேட்டு.
நீ மேடையில பேசினா எதாவது பிரயோசனம் இருக்கும், ஏன் வெட்டியா வெளியாள் கூட பேசுற?
சார், பேசுறதப் பத்திதான் பேச்சு வலிச்சிகினுபூட்சி. ஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். ’இல்ல, கட்சீல ஜெய்ஹிந்த் சொன்னாரே அதுக்கா’ன்னு ஒரு வலி வலிச்சேன். ஒடனே மொறச்சிகினார் சார்.
கொழுப்புதான் கஜா ஒனக்கு. திமுக ஆளுகிட்ட ஜெய்ஹிந்த் பத்தி பேசலாமா?
அக்காங் சார். ‘இன்னா மொறைக்கிற, நான் இன்னா தப்பா கேட்டுகினேன், ஜெய் ஹிந்த் கெட்ட வார்த்தையா’ன்னு மறுடியுங் கேட்டன் சார். அவுரு சமாளிச்சிகினு சூதானமா ‘காங்கிரஸ்காரங்க அப்டித்தான் சொல்லுவாங்க’ன்னாரு. ‘ஏன், நீங்க சொல்ல மாட்டிங்களா, தீட்டா’ன்னேன். கம்முன்னு இர்ந்தார் சார்.
அதோட வரவேண்டிய்துதான் கஜா.
அப்பால நான் ‘அதிமுகவுக்கு ஜெய் ஹிந்த் தீட்டு இல்லியே, தேமுதிகாவுக்கு தீட்டு இல்லியே, பாஜாகாவுக்கு தீட்டு இல்லியே, கம்முனிஸ்டுக்கு கூட தீட்டு இல்லியே, உங்களுக்கு மட்டும் இன்னா தீட்டு ஒட்டிகிது’ன்னு கேட்டன் சார்.
அப்பவும் கம்முன்னு இர்ந்தார் சார்.
நல்லா கேள்வி கேட்ட, அப்பறம் வரவேண்டியதுதானே?
சார் அப்பால எனக்கு கொஞ்சம் ஏறிகிச்சு. ’நா வேணா ஜெய் ஹிந்த் சொல்றன், நீ விசில் உட்றியா’ன்னு கேட்டன் சார். அதுக்கு சூப்பரா மொர்ச்சி பாத்தாரா, ’இல்ல வந்தே மாதரம் சொல்லவா அதுக்கு விசில் உட்றியா’ன்னு சொன்னப்ப அந்தாளுக்கு கொவம் பொத்துகினு வந்திடுச்சி சார். அப்பாலதான் சார் இந்தியாவுல அல்லாரும் பெருமையா சொல்றத சொல்றதுக்கு கூசுற நீங்க எப்டி இந்தியால ஓட்டு மட்டும் கேக்குறிங்க’ன்னு சொல்ல சொல்ல வேகமா கெளம்பிகினார் சார்.
கஜா திமுகாவுக்குதான் ஜெய் ஹிந்த் அலர்ஜின்னு தெரியுமில்லியா!
சார், அப்பால கிளம்புன ஆளப் புட்சி ‘சரி சரி கோவிச்சிக்காம எனக்காக நீ ஒரே ஒரு தபா ஜெய்ஹிந்த் சொல்லு, நான் விசில் அடிக்கிறேன்’னு சொன்னா அதுக்கும் கம்னுகிறார் சார்.
ஒன்ன மாதிரி நாலு பேர் நல்லா கேக்கணும் கஜா, அப்பதான் ஜனங்க சிந்திப்பாங்க.
அட போங்க சார். முன்னாடி திமுகாகாரங்க வந்தே மாதரத்த எப்டி சொன்னாங்க தெரியுமா சார்?
சொல்லு கஜா?
வந்து எமாத்றோம் வந்து ஏமாத்றோம்னு சொல்லுவாங்க சார். யார்னா பெர்சுங்கள கேட்டுப்பார் சார். ஜனங்க அதெல்லாத்தையும் மறந்துட்டாங்க சார்.
சரி இப்பொ மாறியிருக்கலாமில்லியா?
இல்ல சார். அவுங்க மாறல மக்கள்தான் மறப்போம் மன்னிப்போம்னு அவுங்களுக்கே ஓட்டு போடுறாங்க.
எப்டி அவங்க மாறலன்னு சொல்ற?
சார், ஆ. ராசாவுக்கு பேரு ஒரு மேனனோ ஒரு சிங்கோ ஒரு ராவோ இருந்துதின்னா இப்டி ஆவுமான்னு கேக்குறாங்க சார்.
அப்படியா?
ஆமா சார்.
சரி வா, நம்ம வேலையப் பாப்போம்.
கட்சியா ஒன்னு சொல்லிகிறேன் சார். வந்தே மாதரத்தை வந்து ஏமாத்றோம்னு சொன்ன ஆளுங்களுக்கும் கட்சிக்கும் ஓட்டு போடலாமான்னு மக்கள் யோசிக்கனும் சார்.
Labels:
அரசியல்,
இந்து முன்னணி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)